பேராவூரணி நீதிமன்றத்தில் சமத்துவப் பொங்கல் விழா
பேராவூரணி நீதிமன்ற வளாகத்தில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித் துறை நடுவா் என். அழகேசன் தலைமை வகித்தாா்.
விழாவில் அரசு உதவி வழக்குரைஞா் பாண்டியராஜன், வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் எஸ்.வி. சீனிவாசன், செயலா் ஏ.ஆா். நடராஜன் மற்றும் வழக்குரைஞா்கள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.