செய்திகள் :

பொதுத்துறை நிறுவனங்களால் அதிக நஷ்டமடைவதில் தமிழகம் 3-ஆம் இடம்; நிதிக்குழு சொல்லும் காரணம் என்ன?

post image

இந்தியாவிலேயே பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் அதிக நஷ்டத்தைச் சந்திக்கும் மூன்றாவது மாநிலம் 'தமிழ்நாடு' - இப்படி 2022-23 நிதியாண்டிற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது 16-வது நிதிக்குழு.

முதல் இரண்டு மாநிலங்கள் என்ன?

16-வது நிதிக்குழு அறிக்கையின் தொகுதி 1-ன் படி, 2022-23 நிதியாண்டில்...

உத்தரப்பிரதேசம் ரூ.32,430 கோடி நஷ்டத்தையும்,

ராஜஸ்தான் ரூ.18,814 கோடி நஷ்டத்தையும்,

தமிழ்நாடு ரூ. 16,048 கோடி நஷ்டத்தையும் சந்தித்துள்ளன.

இந்த மூன்று மாநிலங்களும் வடகிழக்கு மற்றும் மலைப்பாங்கான பகுதி அல்லாத மாநிலங்களில் (Non- NEH States) சேர்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

TANGEDCO
TANGEDCO

ஏன் இந்த நஷ்டம்?

பிற Non- NEH மாநிலங்களைப் போலவே, இந்த மாநிலங்களுக்கும் நஷ்டம் ஏற்படுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது 'மின்சாரத் துறை'.

2022-23 நிதியாண்டில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோகக் கழகம் (TANGEDCO) ரூ.9,192 கோடி நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.

ஆனால், அதன் பின் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால், TANGEDCO-வின் கீழ் இயங்கும், தமிழ்நாடு மின் விநியோகக் கழகம் லிமிடெட் (TNPDCL) 2024-25 நிதியாண்டில் ரூ.2,073 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

Narges Mohammadi: அமைதிக்கான நோபல் வென்றவருக்கு 7.5 ஆண்டுகள் சிறைத் தண்டனை! - காரணம் என்ன?

2023-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்றவர் ஈரானைச் சேர்ந்த நர்கீஸ் முகமதி. 'குற்றம் செய்ய ஒன்று கூடுதல் மற்றும் கூட்டுச் சதி செய்தல்' என்கிற அடிப்படையில், நேற்று ஈரானிய நீதிமன்றம் முகமதிக்கு 6 ஆண்ட... மேலும் பார்க்க

29 தொகுதிகள்; 60 நாள்கள்! - கொங்கு மண்டலத்தை குறிவைக்கும் தவெக | கோவை பொதுக்கூட்டம் ஹைலைட்ஸ்

கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டியில் தவெக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தவெக மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் ... மேலும் பார்க்க

RSS: ``75 வயதைக் கடந்துவிட்டேன்... தலைவர் பதவிக்கு சாதி ஒரு அளவுகோல் அல்ல" - மோகன் பகவத் ஓப்பன் டாக்

ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் நேற்று டெல்லியில் கலந்துரையாடல்... மேலும் பார்க்க

`போடிநாயக்கனூர் ஏன்?’ - அதிமுகவுக்கு புத்துயிர் அளித்த ஜெயலலிதாவின் முதல் வெற்றி! | முதல் களம் 5

(`முதல்’ - தமிழக தேர்தல் வரலாற்றில் பல்வேறு தலைவர்கள், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அப்படியான தலைவர்களின் முதல் தேர்தலும் அதனை சுற்றி நடந்த முக்கிய சம்பவங்களும் சுவாரஸ்ய தகவல்களின் தொகு... மேலும் பார்க்க