செய்திகள் :

Narges Mohammadi: அமைதிக்கான நோபல் வென்றவருக்கு 7.5 ஆண்டுகள் சிறைத் தண்டனை! - காரணம் என்ன?

post image

2023-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்றவர் ஈரானைச் சேர்ந்த நர்கீஸ் முகமதி.

'குற்றம் செய்ய ஒன்று கூடுதல் மற்றும் கூட்டுச் சதி செய்தல்' என்கிற அடிப்படையில், நேற்று ஈரானிய நீதிமன்றம் முகமதிக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

மேலும், அவரது பரப்புரை செயல்பாடுகளுக்காக கூடுதலாக 1.5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக, இவர் 7.5 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும்.

கூடுதலாக, இரண்டு ஆண்டுகள் கோஸ்ஃப் என்கிற ஈரானிய நகரத்திற்கு உள்நாட்டுக் கடத்தல் செய்யப்படுவார்... இரண்டு ஆண்டுகள் இவர் வெளிநாட்டிற்கு செல்லக்கூடாது என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

நர்கீஸ் முகமதி | Narges Mohammadi
நர்கீஸ் முகமதி | Narges Mohammadi

ஈரானிய பெண்களின் உரிமைக்காகப் போராடியதற்காக, 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம், முகமதி கைது செய்யப்பட்டார்.

சிறையில் இருந்து கொண்டும் தொடர்ந்து அரசிற்கு எதிராகப் போராடியதற்காக, 2024-ம் ஆண்டு ஜூன் மாதம், கூடுதல் ஓராண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

ஆனால், முகமதியின் உடல்நிலை காரணமாகவும், சிகிச்சை காரணமாகவும் அந்த ஆண்டின் டிசம்பர் மாதம் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டார்.

கடந்த டிசம்பர் மாதம், மீண்டும் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, இப்போது முகமதிக்கு கூடுதலாக 7.5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Assam: முஸ்லிம் பிரமுகரை முதல்வர் சுட்டுக்கொல்வது போன்ற வீடியோ; கடும் கண்டனத்தால் நீக்கிய பாஜக

அஸ்ஸாம் மாநிலத்திற்கு இந்த ஆண்டு மத்தியில் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலையொட்டி மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா எதிர்க்கட்சித் தலைவர்களைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். மாநில காங்கிரஸ்... மேலும் பார்க்க

29 தொகுதிகள்; 60 நாள்கள்! - கொங்கு மண்டலத்தை குறிவைக்கும் தவெக | கோவை பொதுக்கூட்டம் ஹைலைட்ஸ்

கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டியில் தவெக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தவெக மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் ... மேலும் பார்க்க

RSS: ``75 வயதைக் கடந்துவிட்டேன்... தலைவர் பதவிக்கு சாதி ஒரு அளவுகோல் அல்ல" - மோகன் பகவத் ஓப்பன் டாக்

ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் நேற்று டெல்லியில் கலந்துரையாடல்... மேலும் பார்க்க

`போடிநாயக்கனூர் ஏன்?’ - அதிமுகவுக்கு புத்துயிர் அளித்த ஜெயலலிதாவின் முதல் வெற்றி! | முதல் களம் 5

(`முதல்’ - தமிழக தேர்தல் வரலாற்றில் பல்வேறு தலைவர்கள், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அப்படியான தலைவர்களின் முதல் தேர்தலும் அதனை சுற்றி நடந்த முக்கிய சம்பவங்களும் சுவாரஸ்ய தகவல்களின் தொகு... மேலும் பார்க்க

பொதுத்துறை நிறுவனங்களால் அதிக நஷ்டமடைவதில் தமிழகம் 3-ஆம் இடம்; நிதிக்குழு சொல்லும் காரணம் என்ன?

இந்தியாவிலேயே பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் அதிக நஷ்டத்தைச் சந்திக்கும் மூன்றாவது மாநிலம் 'தமிழ்நாடு' - இப்படி 2022-23 நிதியாண்டிற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது 16-வது நிதிக்குழு. முதல் இரண்டு மாநிலங்க... மேலும் பார்க்க