செய்திகள் :

"பொருளாதார மந்த நிலையை விட அணு ஆயுதம் மிகப்பெரிய பேரழிவு" - ஈரான் போர் குறித்து ட்ரம்ப்

post image

நேற்று வெள்ளை மாளிகையில் ஈரான் போர் குறித்து பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி அளித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

அந்தப் பேட்டியில், "அவர்கள் நம்மை மதிக்கும் வரை நமக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது. ஒருவேளை மதிக்கவில்லை என்றால், நிலைமை மோசமாகும். ஆனால், அவர்கள் நம் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர்.

கடந்த 47 ஆண்டுகளாக இதைச் செய்திருக்க வேண்டிய பல அதிபர்கள் நமக்குக் கிடைத்தார்கள். ஆனால் யாருமே இதைச் செய்யவில்லை என்பதை மறந்துவிடாதீர்கள்.

ஈரான் போர்
ஈரான் போர்

இது பொருளாதார மந்தத்தை விடப் பெரிய விஷயம். பொருளாதார மந்தம் என்பது மிகவும் மோசமானதுதான். ஆனால், அணு ஆயுதங்கள் அதைவிட மிக வேகமாகப் பேரழிவை ஏற்படுத்திவிடும்.

நாம் இப்போது கையாளும் விதம் பொருளாதார மந்தத்திற்கு நேர் எதிரானது. நாம் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறோம்.

இதற்கான புள்ளிவிவரங்களும் வியக்கத்தக்க வகையில் உள்ளன. கச்சா எண்ணெய் விலை இதற்கு முன்பு யாரும் பார்த்திராத அளவுக்குக் குறைந்துள்ளது.

நாம் இதைத் தொடங்குவதற்கு முன்பு விலை எப்படி இருந்ததோ, கிட்டத்தட்ட அதே அளவுக்குத்தான் இப்போதும் இருக்கிறது என்று நினைக்கிறேன்... எனக்குத் துல்லியமாகத் தெரியவில்லை. ஆனால், ஓரளவுக்கு அதே அளவில் தான் இருக்கிறது.

நான் இது பொருளாதார மந்தத்தை ஏற்படுத்தும் என்று சொல்லவில்லை, 'ஏற்படுத்தக்கூடும்' என்றுதான் சொன்னேன்.

மேலும், நான் ஹெர்பர்ட் ஹூவர் போன்ற ஒரு அதிபராக இருக்க விரும்பவில்லை என்றும் கூறினேன்.

உலக பொருளாதார மந்தநிலை
உலக பொருளாதார மந்தநிலை

ஏனெனில், அவர் 'மகா பொருளாதார மந்தம்' நிலவிய காலத்தில் ஆட்சியில் இருந்தவர். அந்தச் சமயத்தில் பல மோசமான விஷயங்கள் நடக்க வாய்ப்புள்ளது.

அதில் இதுவும் ஒன்றாக இருக்கலாம். அப்படி நடக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால், ஒருவேளை நடந்தால்... அதுமட்டுமன்றி, ஈரான் தங்களது ஒப்பந்தத்தின்படி நடக்கவில்லை என்றாலோ அல்லது சரியாக நடந்துகொள்ளவில்லை என்றாலோ, நான் என்ன செய்ய வேண்டுமோ அதை நிச்சயமாகச் செய்வேன்" என்று கூறியுள்ளார்.

`தளபதி விஜய்...'- பேசிய காங்கிரஸ் கவுன்சிலர்; கூச்சலிட்டு அவையை முடக்கிய திமுகவினர்! - என்ன நடந்தது?

சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் இன்று ரிப்பன் பில்டிங்கில் நடந்திருந்தது. இந்தக் கூட்டத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டிருந்தது.திமுக -காங். மோதல்அவையில் நேரம... மேலும் பார்க்க

ஈரானுக்கு கிடைக்கும் $12 பில்லியன்: 'உணவுக்கும், மருந்துக்கும் தான்' ட்ரம்ப் தகவல்; ஈரான் மறுப்பு!

போர் நிறுத்தத்தில் ஈரானுக்கு இருக்கும் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று - ஈரானின் முடக்கப்பட்ட சொத்துகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பது ஆகும். இது ஸ்விட்சர்லாந்தில் நடந்து வரும் ஈரான், அமெரிக்கா பேச்சுவார்த... மேலும் பார்க்க

"காவல்துறையை ஏவி அச்சுறுத்தலாம் என்று ஆளும் அரசு நினைத்தால்.!" - உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை

"காவல் துறையை ஏவி அச்சுறுத்தலாம் என்று ஆளும் அரசு நினைத்தால், கழகம் அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது" என்று தவெக அரசை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வ... மேலும் பார்க்க

விமர்சித்த அதிமுக கவுன்சிலர்; அடிக்க பாய்ந்த திமுக கவுன்சிலர்கள்! - மாநகராட்சி கூட்டத்தில் கடமுடா!

சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் ரிப்பன் பில்டிங்கில் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தின் போது அதிமுகவின் கவுன்சிலர் கே.பி.கே.சதீஷ் திமுகவினரை விமர்சனம் வைக்க, வாக்குவாதம் முற்றி திமுகவினர் சதீஷை ... மேலும் பார்க்க

TNPSC மூலம் தேர்வு செய்யப்பட்ட 401 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!

TNPSC மூலம் தேர்வு செய்யப்பட்ட 401 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!TNPSC மூலம் தேர்வு செய்யப்பட்ட 401 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!TNPSC மூலம் தேர்வு செய்யப்பட்ட 401 பேர... மேலும் பார்க்க

புதுச்சேரி: ரூ.1,000 கோடியில் உறுப்பு மாற்று, விமான ஆம்புலன்ஸ் மருத்துவமனை! - ஜிப்மர் அறிவிப்பு

புதுச்சேரி சேதராப்பட்டு பகுதியில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, சுகாதாரம் மற்றும் கல்வி வசதியை உருவாக்குவதற்காக, சுமார் 50 ஏக்கர் நிலத்தை ஜிப்மர் நிறுவனத்துக்கு வழங்கியிருக்கிறது மாநில அரசு. அதையடுத்... மேலும் பார்க்க