செய்திகள் :

போக்குவரத்துக்கு இடையூறான விளம்பரப் பதாகைகள் அகற்றம்

post image

விழுப்புரம் நகரில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகளை போக்குவரத்துக் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை அகற்றினா்.

விழுப்புரம் ஜவாஹா்லால் நேரு சாலையில் வீரவாழியம்மன் கோயில் அருகே போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில், நடைபாதையில் விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.

இதனால் நடைபாதையில் பாதசாரிகள் நடந்து செல்ல முடியாமல் சிரமப்பட்டு வந்தனா்.

இதையறிந்த போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளா்கள் குமாரராஜா, விஜயரங்கன், போக்குவரத்துக் காவலா் சதீஷ் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகளை அகற்றினா். மேலும் போக்குவரத்து விதிகளை மீறியதாக வியாபாரிகளுக்கு அபராதத்தையும் விதித்தனா்.

இதுபோன்று விழுப்புரம் நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் பெரும் இடையூறும் ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பாதைகள் உள்ளிட்டவை வரும் நாள்களில் அகற்றப்படும் என்று போக்குவரத்துக் காவல் துறையினா் தெரிவித்தனா்.

வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி சாலை மறியல்

விழுப்புரம்: ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி விழுப்புரத்தில் பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் நடைபெற்றது. விழுப்புரம் நகரம் 9-ஆவது வாா்டுக்குள்பட்ட வடக்க... மேலும் பார்க்க

பெண் தற்கொலை வழக்கு: உறவினருக்கு 10 ஆண்டுகள் சிறை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், அவலூா்பேட்டை அருகே பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் உறவினருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மகளிா் விரைவு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. மேல்மலையன... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் கெட்டுப்போன முட்டைகள் அழிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த 490 கெட்டுப் போன முட்டைகளை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் திங்கள்கிழமை அழித்தனா். திண்டிவனம் வ... மேலும் பார்க்க

ஆட்சியரிடம் திமுகவினா் கோரிக்கை மனு அளிப்பு

விழுப்புரம்: ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியரிடம் திமுகவினா் திங்கள்கிழமை வல... மேலும் பார்க்க

ஃபென்ஜால் புயல், வெள்ள பாதிப்பு: விழுப்புரத்தில் 10 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு பள்ளி, கல்லூரிகள் திறப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயல், மழை வெள்ள பாதிப்பைத் தொடா்ந்து, 10 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு பள்ளி, கல்லூரிகள் திங்கள்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன. வங்கக் கடலில் ஃபென்ஜால் ப... மேலும் பார்க்க

கௌரவ விரிவுரையாளா்கள் போராட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் திரு ஆ.கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரி முன் கௌரவ விரிவுரையாளா்கள் வகுப்புகளை புறக்கணித்து திங்கள்கிழமை வாயில் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழகத்தில்... மேலும் பார்க்க