செய்திகள் :

'போர் செலவு இருக்கிறதே' - ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்ல ரூ,18.8 கோடி வசூலிக்கும் ஈரான்

post image

ஈரான் போர் தொடங்கியதில் இருந்து, ஹார்முஸ் ஜலசந்தியைச் சுற்றி முக்கிய அரசியல் சென்றுகொண்டிருக்கிறது.

இஸ்ரேலும், அமெரிக்காவும் தங்கள் மீது போர் தொடங்கியதுமே ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிட்டது. இதன் மூலம், உலக நாடுகளுக்கு செல்லக் கூடிய எரிசக்திகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது ஈரான்.

ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க வேண்டும் என்று தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பல மிரட்டல்களை விடுத்து வருகிறார். ஆனால், எதற்கும் ஈரான் அசைவதாக இல்லை.

இந்த நிலையில், நேற்று, ஈரான் தரப்பு, 'எதிரி கப்பல்களைத் தவிர, அனைத்து கப்பல்களையும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அனுமதிக்க தயார்... பாதுகாப்பும் கொடுக்கிறோம்' என்று கூறியிருந்தது.

ஈரான்
ஈரான்

2 மில்லியன் டாலர்

ஆனால், தற்போது, ஈரானின் அரசு தொலைகாட்சி ஈரானிய சர்வதேச அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது...

"ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல சில கப்பல்களிடம் இருந்து 2 மில்லியன் டாலர்களை வசூலிக்க ஈரான் முடிவு செய்துள்ளது. இது இந்திய ரூபாயில் ரூ.18.8 கோடி".

செலவு இருக்கிறதே

இது குறித்து ஈரானிய தலைவரான அலாவுத்தீன் போரூஜெர்டி கூறுகையில், 'ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்ல 2 மில்லியன் டாலர் வசூலிப்பது ஈரானின் வலிமையைக் காட்டும்.

மேலும், போர் என்கிற போது செலவுகள் ஆகும். அதற்காக நாங்கள் இதை செய்ய வேண்டியதாக இருக்கிறது" என்று தெரிவித்திருக்கிறார்.

தொகுதி மாறும் அமைச்சரின் மகன்; வலுப்பெறும் அதிமுக! - திண்டுக்கல் மாவட்டத்தில் முந்துவது யார்?

முந்துவது யார்?தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள் என்பது குறித்து விவரிக்கும் பக்கம் தான் `முந்துவது யார்?'திண்டுக்கல் மாவட்டம்1. திண்டுக்கல் சட்டம... மேலும் பார்க்க

"அனைவரும் திருப்தியடையும் வகையில் எங்களின் தொகுதி பங்கீடு இருக்கும்!"- பியூஸ் கோயல்

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. கட்சிகள், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.அந்த வகையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து கலந்து ஆலோசிக்... மேலும் பார்க்க

ஜெயலலிதாவின் அரசியல் ஆளுமைக்கு அடித்தளம்; டெல்லி வரை எதிரொலித்த திருச்செந்தூர் இடைத்தேர்தல் |ஆடுபுலி

ஜெ.,-வின் அரசியல் ஆளுமைக்கு அடித்தளமிட்ட இடைத்தேர்தல்அரசியல் ஆடுபுலிதமிழ்நாட்டின் சட்டமன்ற அரசியல் வரலாற்றில் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பெருமை பெற்றவர் செல்வி ஜெயலலிதா. மக்களால் தேர்வு செய... மேலும் பார்க்க

புதுச்சேரி: `புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி!' - காங்கிரஸ் அதிரடி அறிவிப்பு பின்னணி

புதுச்சேரி சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று மாலையுடன் முடிகிறது. என்.டி.ஏ கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.கவுக்கு இடையே ... மேலும் பார்க்க

`K.N நேரு டிக், T.R.B ராஜா பரிந்துரை' - பட்டுக்கோட்டை தொகுதி திமுக ரேஸில் முந்துவது யார்?

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று பட்டுக்கோட்டை. திமுக கூட்டணியில் இத்தொகுதியை காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் குறிப்பிட்டு கேட்கின்றன. காங்கிரஸ் கட்சிக்கு தொகுதியை ஒ... மேலும் பார்க்க