செய்திகள் :

ரூ.94-க்கு அருகில்: இந்திய ரூபாய் மதிப்பு 'கடும்' சரிவு; இனி ரிசர்வ் வங்கி கையில் தான் எல்லாமே!

post image

ஈரான் போர் தொடங்கியதில் இருந்து, இந்திய ரூபாயின் மதிப்பு சரிவிலேயே இருந்து வருகிறது.

இன்று காலை சந்தை தொடங்கும்போதே, ஒரு அமெரிக்க டாலருக்கு ரூ.93.83 என வர்த்தகம் ஆனது. இது வரலாற்றிலேயே மிகப்பெரிய வீழ்ச்சி ஆகும்.

என்ன காரணம்?

இந்திய ரூபாயின் சரிவிற்கு மிக முக்கிய காரணம், கச்சா எண்ணெய் விலை ஏற்றமே.

இந்தியா எரிசக்திகளுக்குப் பிற நாடுகளை நம்பி இருக்கிறது. அங்கே இருந்து கச்சா எண்ணெயை வாங்க வேண்டுமென்றால், இந்தியாவிற்கு அமெரிக்க டாலர் வேண்டும்.

அமெரிக்க டாலரை வாங்கும்போது, இந்திய ரூபாயின் மதிப்பு சரிகிறது.

ஈரான் போர்
ஈரான் போர்

மேலும், எரிசக்தி போன்றவைகளுக்கு இந்தியா பிற நாடுகளை நம்பியிருப்பதால், ஈரான் போரின் தாக்கம் இங்கே அதிகமாக இருக்கும் என்று வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய முதலீடுகளை விற்கின்றனர்.

இதுவும் இந்திய ரூபாய் சரிவிற்குக் காரணம்.

இது தொடர்ந்து கொண்டிருந்தால், இந்திய பொருளாதாரம் நிச்சயம் பாதிக்கும்.

அதனால், இந்திய ரிசர்வ் வங்கி இந்தப் பிரச்னையில் தலையிட வேண்டும் என்று முதலீட்டாளர்கள் நினைக்கின்றனர்.

எப்படி?

இந்திய ரிசர்வ் வங்கி தங்களிடம் இருக்கும் அமெரிக்க டாலர்களைக் கொஞ்சம் விற்கும். சந்தையில் டாலர்களின் புழக்கம் அதிகரிக்கும் போது, அதன் டிமாண்ட் குறையும்... இதனால், விலையும் குறையும்.

இந்திய ரூபாய் வலுபெறும்.

இந்திய ரிசர்வ் வங்கியின் இத்தகைய நடவடிக்கையைத் தான் சந்தை எதிர்பார்த்து காத்திருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கி என்ன செய்யப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

தொகுதி மாறும் அமைச்சரின் மகன்; வலுப்பெறும் அதிமுக! - திண்டுக்கல் மாவட்டத்தில் முந்துவது யார்?

முந்துவது யார்?தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள் என்பது குறித்து விவரிக்கும் பக்கம் தான் `முந்துவது யார்?'திண்டுக்கல் மாவட்டம்1. திண்டுக்கல் சட்டம... மேலும் பார்க்க

"அனைவரும் திருப்தியடையும் வகையில் எங்களின் தொகுதி பங்கீடு இருக்கும்!"- பியூஸ் கோயல்

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. கட்சிகள், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.அந்த வகையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து கலந்து ஆலோசிக்... மேலும் பார்க்க

ஜெயலலிதாவின் அரசியல் ஆளுமைக்கு அடித்தளம்; டெல்லி வரை எதிரொலித்த திருச்செந்தூர் இடைத்தேர்தல் |ஆடுபுலி

ஜெ.,-வின் அரசியல் ஆளுமைக்கு அடித்தளமிட்ட இடைத்தேர்தல்அரசியல் ஆடுபுலிதமிழ்நாட்டின் சட்டமன்ற அரசியல் வரலாற்றில் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பெருமை பெற்றவர் செல்வி ஜெயலலிதா. மக்களால் தேர்வு செய... மேலும் பார்க்க

புதுச்சேரி: `புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி!' - காங்கிரஸ் அதிரடி அறிவிப்பு பின்னணி

புதுச்சேரி சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று மாலையுடன் முடிகிறது. என்.டி.ஏ கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.கவுக்கு இடையே ... மேலும் பார்க்க

`K.N நேரு டிக், T.R.B ராஜா பரிந்துரை' - பட்டுக்கோட்டை தொகுதி திமுக ரேஸில் முந்துவது யார்?

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று பட்டுக்கோட்டை. திமுக கூட்டணியில் இத்தொகுதியை காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் குறிப்பிட்டு கேட்கின்றன. காங்கிரஸ் கட்சிக்கு தொகுதியை ஒ... மேலும் பார்க்க