செய்திகள் :

"அனைவரும் திருப்தியடையும் வகையில் எங்களின் தொகுதி பங்கீடு இருக்கும்!"- பியூஸ் கோயல்

post image

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. கட்சிகள், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.

அந்த வகையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து கலந்து ஆலோசிக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க மார்ச்.19 ஆம் தேதி டெல்லி சென்றிருந்தார்.

இவரைத் தொடர்ந்து அமமுக தலைவர் டிடிவி தினகரனும், பாமக தலைவர் அன்புமணியும் டெல்லி சென்று அமித் ஷாவைச் சந்தித்திருந்தனர்.

அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி
அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி

இந்நிலையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் இன்று (மார்ச். 23) சென்னை வந்திருக்கிறார்.

செய்தியாளர்களைச் சந்தித்த பியூஸ் கோயல், " திமுக அரசு மீது மக்கள் விரக்தி மற்றும் அதிருப்தியில் இருக்கின்றனர்.

தமிழ்நாட்டில் வளர்ச்சிக்கான அரசு வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றனர். மகாராஷ்டிரா, பீகார், ஹரியானா போன்ற மாநிலங்கள் காங்கிரஸை வெறுத்தது போல தமிழக மக்களும் காங்கிரஸையும் அதன் கூட்டணி கட்சிகளையும் வெறுக்கிறார்கள்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும். எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக வரவேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்.

பியூஸ் கோயல் - எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு
பியூஸ் கோயல் - எடப்பாடி பழனிசாமி

கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் அமர்ந்து பேசி தொகுதி பங்கீட்டு விபரங்களை அறிவிப்போம்.

நாங்கள் ஒரே குடும்பமாக இணைந்து செயல்பட்டு வருகிறோம். அனைவரும் திருப்தி மற்றும் மகிழ்ச்சி அடையும் வகையில் எங்களின் தொகுதி பங்கீடு அமையும்" என்று தெரிவித்திருக்கிறார்.

சமபலத்தில் மோதும் அதிமுக, திமுக; களத்தில் இன்னாள் முன்னாள் அமைச்சர்கள்! மதுரையில் முந்துவது யார்?

முந்துவது யார்?தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள் என்பது குறித்து விவரிக்கும் பக்கம் தான் `முந்துவது யார்?'கள நிலவரம்மதுரை மாவட்டம்1. மதுரை மத்தி ச... மேலும் பார்க்க

தொகுதி மாறும் அமைச்சரின் மகன்; வலுப்பெறும் அதிமுக! - திண்டுக்கல் மாவட்டத்தில் முந்துவது யார்?

முந்துவது யார்?தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள் என்பது குறித்து விவரிக்கும் பக்கம் தான் `முந்துவது யார்?'திண்டுக்கல் மாவட்டம்1. திண்டுக்கல் சட்டம... மேலும் பார்க்க

ஜெயலலிதாவின் அரசியல் ஆளுமைக்கு அடித்தளம்; டெல்லி வரை எதிரொலித்த திருச்செந்தூர் இடைத்தேர்தல் |ஆடுபுலி

ஜெ.,-வின் அரசியல் ஆளுமைக்கு அடித்தளமிட்ட இடைத்தேர்தல்அரசியல் ஆடுபுலிதமிழ்நாட்டின் சட்டமன்ற அரசியல் வரலாற்றில் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பெருமை பெற்றவர் செல்வி ஜெயலலிதா. மக்களால் தேர்வு செய... மேலும் பார்க்க

புதுச்சேரி: `புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி!' - காங்கிரஸ் அதிரடி அறிவிப்பு பின்னணி

புதுச்சேரி சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று மாலையுடன் முடிகிறது. என்.டி.ஏ கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.கவுக்கு இடையே ... மேலும் பார்க்க

`K.N நேரு டிக், T.R.B ராஜா பரிந்துரை' - பட்டுக்கோட்டை தொகுதி திமுக ரேஸில் முந்துவது யார்?

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று பட்டுக்கோட்டை. திமுக கூட்டணியில் இத்தொகுதியை காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் குறிப்பிட்டு கேட்கின்றன. காங்கிரஸ் கட்சிக்கு தொகுதியை ஒ... மேலும் பார்க்க