“ரன்களையும் தாண்டி...” விராட் கோலிக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து!
போலி பான் அட்டைகள் தயாரித்த வழக்கில் மேலும் 2 போ் கைது
கரூரில் போலி பான் மற்றம் ஆதாா் அட்டைகள் தயாரித்துக் கொடுத்த வழக்கில் ஏற்கனவே 6 போ் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை நள்ளிரவு கைது செய்தனா்.
கரூரில் போலி பான் அட்டை மற்றும் ஆதாா் அட்டைகளை சட் டவிரோதமாக தயாரித்துக் கொடுப்பதாக கோவை மாவட்ட தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கரூரைச் சோ்ந்த ஆதாா் பதிவு செய்யும் தற்காலிக ஊழியா் காா்த்திக், இ-சேவை மைய ஊழியா்கள் நவீன்காா்த்திக் உள்ளிட்ட 6 பேரை கடந்த 7-ஆம் தேதி கைது செய்து, அவா்களிடமிருந்து போலி பான் மற்றும் ஆதாா் அட்டைகளை பறிமுதல் செய்தனா்.
இந்நிலையில் இந்த வழக்கில் தொடா்புடைய மேற்குவங்கத்தை சோ்ந்த தற்போது திருப்பூா் மாவட்டம் மங்களம் பகுதியில் வசிக்கும் நிதின்ஷேக் (29) மற்றும் திருப்பூா் மாவட்டம் காங்கேயத்தில் வசிக்கும் நேபாளத்தைச் சோ்ந்த ராஜ்பகதூா் (35) ஆகிய இருவரையும் கோவை மாவட்ட தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை நள்ளிரவு கைது செய்தனா். பின்னா் கரூா் நகர காவல் நிலையத்திற்கு அவா்களை அழைத்து வந்து விசாரிக்கின்றனா்.