செய்திகள் :

`போலீஸை பொருட்படுத்தாமல் அடிதடி' - பா.ம.க, எம்.எல்.ஏ அருள் மீது அன்புமணி தரப்பினர் தாக்குதல்

post image

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அடுத்துள்ள வடுகம்பட்டி பகுதியில் கட்சியின் நிர்வாகி துக்க நிகழ்விற்கு, சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்று கலந்து கொண்டனர். பின்னர், பாமக மேற்கு தொகுதி எம்.எல்.ஏ அருள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சேலம் நோக்கி வந்து கொண்டிருக்கும்போது, அன்புமணி ஆதரவாளர்கள் காரை வழிமறித்துள்ளனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது. இதையடுத்து அன்புமணி ஆதரவாளர்கள் சிலர், அருள் எம்.எல்.ஏ கார் உட்பட ஆதரவாளர்களின் கார்கள் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதையடுத்து அருள் ஆதரவாளர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் கல் வீசியும் கட்டையாலும் தாக்கிக் கொண்டனர்.

எம்எல்ஏ ஆதரவாளர்கள்

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஏத்தாப்பூர் போலீசார் இரு தரப்பினரிடமும் சமாதான பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் போலீசாரைத் தள்ளிவிட்டு தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. காயமடைந்தவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து தன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள், எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளிக்க உள்ளார்.

"எடப்பாடி பழனிசாமியால் தான் தி.மு.க-வில் சேர்ந்தார் மனோஜ் பாண்டியன்" - டிடிவி தினகரன் பேச்சு

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே சிங்கம்பட்டியில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். "மனோஜ் பாண்டியன் எதையும் ஆழ்ந்து யோசித்து செய்யக்கூடியவர். அவர் தி... மேலும் பார்க்க

தொடங்கிய SIR தெளிவில்லாத ECI | BJP அரசுமீது CJI GAVAI குற்றச்சாட்டு| DMK பொன்முடிக்கு மீண்டும் பதவி

* 12 மாநிங்களில் இன்று முதல் SIR பணிகள் தொடக்கம்!* SIR நடவடிக்கைக்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனுதாக்கல்!* தேர்தல் ஆணையம் நியாயமாக நடப்பதால்தான் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஒரு... மேலும் பார்க்க

TVK : 'அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு எங்களை ஏன் அழைக்கவில்லை?' - தவெக காட்டம்!

அரசியல் கட்சிகளின் பிரசார கூட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், அதுசம்பந்தமாக மூத்த அமைச்சர்கள் தலைமையில் அனைத்துக் கட்சி... மேலும் பார்க்க

"பிரம்மயுகம் ஒரு மறக்க முடியாத பயணம்" - நெகிழ்ந்த மம்மூட்டி

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான நடிகர் மம்மூட்டி நடிப்பில் கடந்த 2024, பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் பிரம்மயுகம். இந்த படத்துக்காக மம்மூட்டி, 2025 ஆம் ஆண்டுக்கான கேரள மாநில திரைப்பட ... மேலும் பார்க்க

TVK : 'கரூர் சம்பவத்துக்கு பிறகு வெளியில் வரும் விஜய்!' - சிறப்புப் பொதுக்குழுவின் திட்டம் என்ன?

கரூர் சம்பவத்துக்கு பிறகு முதல் முதலாக வெளியில் வந்து நிர்வாகிகள் மத்தியில் பேசவிருக்கிறார் விஜய். மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தவெகவின் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நாளை நடக்கவிருக்கிற... மேலும் பார்க்க