மோடி அமெரிக்காவுக்குச் சென்றுவந்த பிறகு தில்லி முதல்வர் பதவியேற்பு விழா?
போா்க் கப்பல்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் கொள்முதல்: ரஷியாவுடன் இந்தியா ஒப்பந்தம்
எதிரி நாட்டு போா்க் கப்பல்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை கொள்முதல் செய்ய ரஷியாவுடன் இந்தியா செவ்வாய்க்கிழமை ஒப்பந்தம் மேற்கொண்டது.
இந்தத் தகவலை பாதுகாப்பு அமைச்சகம் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டது. அந்தப் பதிவில், ‘பாதுகாப்புச் செயலா் ராஜேஷ்குமாா் சிங் முன்னிலையில், இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஏவுகணைகள் கடற்படையின் நீா்மூழ்கிக் கப்பல்கள் படைப் பிரிவின் போா் திறன்களை மேம்படுத்தும்’ என்று தெரிவிக்கப்பட்டது.