செய்திகள் :

`மகள்களை என்னுடன் அழைத்துச் செல்கிறேன்' - மனைவியின் உறவு; மகள்களை கொன்று, தற்கொலைக்கு முயன்ற கணவர்

post image

ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அறை எடுத்து தங்கியவர், தன் இரண்டு மகள்களை கொலை செய்துவிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

murder

பெங்களூருவில் உள்ள பிலால் நகரைச் சேர்ந்தவர் இம்ரான். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவருக்கு திருமணமாகி மனைவியும்,10 மற்றும் 8 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

நேற்று முன்தினம் இவர் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் அருகிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் 4 வது மாடியில் அறை எடுத்து இரு மகள்களுடன் தங்கினார். மறுநாள் அறையை காலி செய்வதாக கூறியிருந்த நிலையில், அறை நீண்டநேரமாக திறக்கப்படாததால் சந்தேகமடைந்த ஹோட்டல் ஊழியர்கள் மாற்றுச் சாவியைப் பயன்படுத்தி அறையைத் திறந்தபோது அங்கு அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சி அடைய வைத்தது.

கட்டிலில் இரு குழந்தைகள் மயங்கிய நிலையிலும், இம்ரான் கழுத்து அறுக்கப்பட்ட நிலையிலும் கிடந்தனர். உடனே இதுபற்றி போலீசாருக்கு ஹோட்டல் நிர்வாகத்தினர் தகவல் கொடுக்க, விரைந்து வந்த போலீசார் மூவரையும் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

செல்லும் வழியிலேயே இரண்டு சிறுமிகளும் பரிதாபமாக இறந்தனர். இம்ரானுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்கொலை தடுப்பு மையம்

இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், இம்ரானின் மனைவிக்கும் ஒரு வாலிபருக்கும் இடையே திருமணம் மீறிய உறவு இருந்துள்ளதை அறிந்த நிலையில், இம்ரானுக்கும் அவர் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. வாலிபருடனான தொடர்பை துண்டித்துக்கொள்ள கேட்டுக்கொண்டும் மனைவி அதை பொருட்படுத்தாமல் நட்பைத் தொடர்ந்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் விரக்தியடைந்த இம்ரான், இரு மகள்களையும் அழைத்து வந்து ஹோட்டலில் தங்கியுள்ளார். மகள்களை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் என்பது தெரிய வந்தது. மேலும், அந்த அறையில் கைப்பற்றப்பட்ட இம்ரான் எழுதிய கடிதமும் கிடைத்தது. அதில், "என் மனைவியின் திருமணத்திற்கு புறம்பான உறவால் எனக்கு வாழ்க்கை வெறுத்துவிட்டது. அவளது செயலை நிரூபிக்க என்னிடம் ஆதாரம் உள்ளது. ஆனாலும், அவள் என்னை காயப்படுத்திவிட்டாள். அதனால் என் மகள்களை என்னுடன் அழைத்துச் செல்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறார். இந்தச் சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கருவிலுள்ள பாலினம் அறிய சட்டவிரோத ஸ்கேன் சென்டர் - பொறிவைத்து பிடித்த மருத்துவக்குழு! பகீர் சம்பவம்

"கர்ப்பத்திலிருப்பது ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என கண்டறிய ரூ 23 ஆயிரம்தான்" என ஊர் ஊராக கேன்வாஸ் செய்து சட்டவிரோத ஸ்கேன் சென்டர் நடத்திய கும்பலை மருத்துவக் குழுவினர் பொறி வைத்து பிடித்துள்ள சம்பவம... மேலும் பார்க்க

கர்நாடகாவிலிருந்து டூவீலரில் குட்கா பொருள்கள் கடத்திவந்த நபர்; மடக்கிப் பிடித்த போலீஸ்!

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருள்களை அண்டை மாநிலங்களிலிருந்து கடத்தி வந்து தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.குட்கா, பான் மசாலா (ஃபைல் படம்)அ... மேலும் பார்க்க

இன்ஸ்டாகிராமில் காதல், திருமணம்... மனைவி, மாமியார் என 2 பேரும் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட கொடூரம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகில் உள்ள பச்சாபாளையத்தைச் சேர்ந்த 21 வயதான பூவரசி என்ற இளம்பெண் திண்டுக்கல்லைச் சேர்ந்த அக்ஷ்ய் என்ற 25 வயது இளைஞரை இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து வந்திருக்கிறார். கடந்த... மேலும் பார்க்க

தூத்துக்குடி: முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு; ஆர்.பி.உதயகுமார் மீது நடவடிக்கை எடுக்க புகார்

தூத்துக்குடியில் அ.தி.மு.க ஜெயலலிதா பேரவை சார்பில் கடந்த 8-ம் தேதி நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”உலகத்திலேயே வறட... மேலும் பார்க்க

சர்ச் நிர்வாகம் யாருக்கு? ஆர்த்தடாக்ஸ் - யாக்கோபாய பாதிரியார்கள் மோதல்; 22 பேர் மீது வழக்கு

கேரள மாநிலத்தில் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஆர்த்தோடாக்ஸ் பிரிவினருக்கும், யாக்கோபாய பிரிவினருக்கும் இடையே சில சர்ச்களை நிர்வகிப்பது சம்பந்தமாக வழக்கு நடைபெற்று வருகிறது. சில சர்சுகள் சம்பந்தமாக கோர்ட்... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; ஆற்காடு இளைஞனுக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறை

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 15-12-2019 அன்று 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைச் செய்யப்பட்டார். இது சம்பந்தமாகப் பதியப்பட்ட போக்சோ வழக்கில் சிலம்ப... மேலும் பார்க்க