செய்திகள் :

மகாராஷ்டிராவில் கனமழை: ஆற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட 3000 கேஸ் சிலிண்டர்கள்!

post image

மகாராஷ்டிராவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் பன்வெல் தாலுகாவில் உள்ளசவானே தொழிற்பேட்டையில் எச்பிசிஎல் நிறுவனத்தின் கேஸ் நிரப்பும் மையம் இருக்கிறது. தொடர்ந்து அங்கு பெய்த மிகக் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

சிலிண்டர்கள் வெளியில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. ஆலை வளாகத்தில் இருந்த சிலிண்டர்களை முழுமையாக மழை அடித்துச் சென்று விட்டது. நிரப்பப்பட்ட மற்றும் காலியானவை உட்பட சுமார் 3000 எல்.பி.ஜி எரிவாயு சிலிண்டர்கள் பாதாள்கங்கா நதியில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

பொதுமக்கள் பாதுகாப்பு கருதி, ஆற்றில் மிதந்து வரும் அல்லது கரைகளில் ஒதுங்கும் சிலிண்டர்களைத் தொடுவதோ அல்லது வீட்டிற்கு எடுத்துச் செல்வதோ கூடாது என்று ராய்காட் மாவட்ட ஆட்சியர் கிஷன் ஜவாலே அவசர எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் அந்த சிலிண்டர்கள் காலியாக இருக்கின்றனவா அல்லது அவற்றில் அபாயகரமான எரிவாயு நிரம்பியுள்ளதா என்பதை உடனடியாகக் கண்டறிவது சாத்தியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் அனைவரும் சிலிண்டர்கள் இருக்கும் இடத்திலிருந்து பாதுகாப்பான தூரத்தில் தள்ளி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வேகமாக ஓடும் சேறு கலந்த நீரில் ஆயிரக்கணக்கான எல்பிஜி சிலிண்டர்கள் அடித்துச் செல்லப்படும் இந்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. பன்வெல் ஆலையின் உள்கட்டமைப்பு எந்த அளவிற்குப் பாதிக்கப்பட்டுள்ளது என்பதையும் இந்த வீடியோ காட்டுகிறது.

கடற்கரை பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மும்பை, தானே, பால்கர் மற்றும் ராய்காட் ஆகிய மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மிகக் கனமழைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது.!

`18 வயதைக் கடந்த திருமணமாகாத மகளின் படிப்பு செலவை ஏற்பது தந்தையின் கடமை' - கர்நாடகா உயர் நீதிமன்றம்

கணவன் மனைவி இடையே விவாகரத்து ஏற்பட்டுவிட்டால் மனைவியுடன் இருக்கும் குழந்தைகள் 18 வயதை கடக்கும் வரை அவர்களின் படிப்பு செலவை ஏற்பது தந்தையின் கடமையாகும். கர்நாடகா மாநிலம், மங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவர்... மேலும் பார்க்க

தூத்துக்குடி: அங்கன்வாடியில் கொடுக்கப்பட்ட முட்டையில் அழுகிய கோழிக்குஞ்சு - பெற்றோர் அதிர்ச்சி!

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் அருகேயுள்ள ரகுராமபுரம் கிராமத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மையத்திற்கு 20 குழந்தைகள் தினம் தோறும் வருவது வழக்கம். இங்கு சொர்ணமாரி எ... மேலும் பார்க்க

மதுபானக்கடைக்குள் நுழைந்து ரகளையில் ஈடுபட்ட சிறுத்தை - 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு!

ராஜஸ்தான் மாநிலத்தில் திறந்திருந்த மதுபானக்கடைக்குள் திடீரென சிறுத்தைப்புலி ஒன்று உள்ளே நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராஜஸ்தானின் டோங்க் மாவட்டத்தில் காலை வனப்பகுதியில் இருந்து வெளியேறி மதுபானக் கடை... மேலும் பார்க்க

பதநீரில் சீனி கலந்து போலி கருப்பட்டி - வரி ஏய்ப்பு; 5 வியாபரிகளுக்கு அபராதம் மட்டும் ரூ.38 கோடி!

புவிசார் குறியீடு பெற்ற உடன்குடி கருப்பட்டிக்கு ஜி.எஸ்.டி. வரி விலக்கும் சில்லறை விற்பனையில் 5 சதவீதம் வரியும் வழங்கப்படுகிறது. ஆனால், பதநீரில் 75 சதவீதத்திற்கும் மேல் சீனி கலந்தால் 18 சதவீதம் ஜி.எஸ்.... மேலும் பார்க்க

'2600 பயணிகள், 110 கி.மீ' - நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயிலை நாட்டிற்கு அர்ப்பணித்த பிரதமர்

டீசலுக்கு மாற்றாக இப்போது அதிக அளவில் ரயில்களை இயக்க மின்சாரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மின்சாரத்தை ஹைட்ரஜன் மூலம் தயாரித்து அதிலிருந்து ரயில்களை இயக்கும் திட்டம் நீண்ட நாட்களாகச் சோதனையில் இர... மேலும் பார்க்க