ஆப்சென்ட் திமுக; ஒரே ஒரு அதிமுக எம்.எல்.ஏ வருகை!- எம்.எல்.ஏ பயிற்சி கூட்டத்துக்க...
'மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது?'- முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி
கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
தவிர நேற்று சென்னை மற்றும் சென்னையை சுற்றி பல பாலியல் சம்வங்கள் அரங்கேறி இருக்கின்றன.
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் தவெக அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் 'மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது?' என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " 'Efficient-ஆன அதிகாரிகளை நியமித்துவிட்டேன்', 'சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்' என்று சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப் பார்த்த பிறகாவது, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா?
மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது? கிரிமினல்கள் சிறிதும் அச்சமின்றிக் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்?

மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் ஆறு மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா? இல்லை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா?" என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.















