செய்திகள் :

சாலையில் விபத்துக்குள்ளாவோருக்கும் காப்பாற்றுவோருக்கும் அரசுகளின் உதவி திட்டங்கள் - ஓர் ஒப்பீடு!

post image

இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் சாலை விபத்துகளால் சுமார் (1.77) லட்சம் 1,77,000 பேர் வரை உயிரிழக்கின்றனர்.

இதை தடுக்க மத்திய- மாநில அரசுகளின் நடவடிக்கைகள் என்ன என்ற கேள்வியோடு பயணிக்கும்போது, மத்திய அரசின் திட்டம் தொடர்பான செய்திகளும், சோஷியல் மீடியா கார்டுகளும் சமீபமாக வைரலாகி, நம் கவனத்தை ஈர்த்தன.

`சாலை விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் சேர்க்கும் நபர்களுக்கு ₹25,000 ஊக்கத்தொகை அளிக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு.' மேலும், ₹1.5 லட்சம் வரை சிகிச்சைக்காக வழங்கப்படும் எனவும் அறிவிப்பு - இதுதான் அது!

உடனே நம் நினைவுக்கு வந்தது தமிழ்நாடு அரசு 2021-ல் கொண்டு வந்த "இன்னுயிர் காப்போம்; நம்மை காக்கும் 48 திட்டம்" தான்.

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணமில்லா சிகிச்சை திட்டம் (Cashless Treatment of Road Accident Victims Scheme) அறிமுகம்...

சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உடனடி மருத்துவ உதவி வழங்கும் நோக்கில் மத்திய அரசு 14 மார்ச் 2024 அன்று Chandigarh மற்றும் Assam மாநிலங்களில் முன்னோடி (Pilot) திட்டமாக இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இத்திட்டம் 05-05-2025 முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்தது.

இந்தத் திட்டம் Ministry of Road Transport and Highways அமைச்சகத்தின் முயற்சியாகும். சாலை விபத்தில் காயமடைந்தவர்கள் “Golden Hour” எனப்படும் முதல் முக்கிய நேரத்திற்குள் மருத்துவ உதவி பெறுவதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூ.1,50,000 வரை, விபத்து நடந்த நாளிலிருந்து 7 நாள்கள் வரை, இலவச மற்றும் பணமில்லா (Cashless) சிகிச்சை வழங்கப்படும்.

திட்டத்தின் நன்மைகள்

சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூ.1,50,000 வரை இலவச சிகிச்சை.

விபத்து நடந்த நாளிலிருந்து 7 நாள்கள் வரை சிகிச்சை செலவு முழுமையாக ஏற்கப்படும்.

மருத்துவமனையில் எந்தவிதக் கட்டணமும் செலுத்த தேவையில்லை.

யாரெல்லாம் தகுதியான நபர்கள்?

சாலை விபத்தில் காயமடைந்த அனைத்து நபர்களும் தகுதியுடையவர்கள்.

இந்திய குடிமக்கள் மட்டுமல்லாமல் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களும் இத்திட்டத்தின் பயனை பெறலாம்.

சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் – பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PM-JAY) திட்டத்தில் இணைக்கப்பட்ட மருத்துவமனைகளில் மட்டுமே வழங்கப்படும்.

விபத்து குறித்து 24 மணி நேரத்திற்குள் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட வேண்டும்.

தேவையான ஆவணங்கள்

ஆதார் அட்டை அல்லது

காயமடைந்தவரின் புகைப்பட அடையாள அட்டை (Photo ID)

விண்ணப்பிக்கும் முறை

காயமடைந்தவர் PM-JAY திட்டத்தில் இணைக்கப்பட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும்.

அனைத்து ஆவண நடவடிக்கைகளையும் மருத்துவமனை நிர்வாகமே மேற்கொள்ளும்.

விபத்து நடந்த 24 மணி நேரத்திற்குள் மருத்துவமனையில் சேர்க்கப்படுவது கட்டாயம்.

மருத்துவமனை நிர்வாகம் நோயாளியிடமிருந்து எந்தக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது.

மருத்துவமனை அரசிடமிருந்து செலவுத் தொகையைப் பெற்றுக்கொள்ளும்.

சிகிச்சைத் தொகை மோட்டார் வாகன விபத்து நிதி (Motor Vehicle Accident Fund) மூலம் மருத்துவமனைக்கு வழங்கப்படும்.

பாதிக்கப்பட்டவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழிகள்...

பின்வரும் எந்த முறையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும் பணமில்லா சிகிச்சை பெறலாம்:

உள்ளூர் காவல்துறையினரால்...

தானாகவே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால்...

ஆம்புலன்ஸ் மூலம்...

மூன்றாம் நபரால்...

விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் உரிமையாளர் அல்லது ஓட்டுநரால்...

குடும்ப உறுப்பினர்களால்...

நல்லெண்ண உதவியாளர்களால் (Good Samaritans)

அரசு அமைப்புகளின் பரிந்துரையால்...

PM RAHAT திட்டம் vs தமிழ்நாடு இன்னுயிர் காப்போம் திட்டம்

அம்சம்

(மத்திய அரசு) The PM RAHAT (Road Accident Victim Hospitalisation and Assured Treatment)

செயல்படுத்தும் அரசு

மத்திய அரசு

தொடங்கப்பட்ட ஆண்டு

2025 (2026-ல் PM RAHAT என பெயர் மாற்றம்)

சிகிச்சை காலம்

7 நாள்கள் வரை

அதிகபட்ச நிதி உதவி

₹1.5 லட்சம்

தகுதி

இந்தியா முழுவதும் எந்தச் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவராக இருந்தாலும்

மருத்துவமனைகள்

PM-JAY இணைப்பு மருத்துவமனைகள்

நிதி ஆதாரம்

மோட்டார் வாகன விபத்து நிதி

காயமடைந்தவரை மருத்துவமனையில் சேர்ப்பவருக்கான ஊக்கத்தொகை ₹25,000

முக்கிய நோக்கம்

7 நாள்கள் வரை பணமில்லா சிகிச்சை

------------------------------------------------------------------------------------

இன்னுயிர் காப்போம் (தமிழ்நாடு அரசு)

சிகிச்சை காலம்

முதல் 48 மணி நேரம்

அதிகபட்ச நிதி உதவி

ஆரம்பத்தில் ₹1 லட்சம், தற்போது ₹2 லட்சம் வரை உயர்வு

தகுதி

தமிழ்நாடு எல்லைக்குள் நிகழும் சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்கள்.

மருத்துவமனைகள்

தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள்

நிதி ஆதாரம்

(மாநிலம் முழுவதும் உள்ள 609 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் (204 அரசு மருத்துவமனைகள், 405 தனியார் மருத்துவமனைகள்) இத்திட்டம் நடைமுறையில் உள்ளது.)

முக்கிய நோக்கம்

Golden Hour மற்றும் முதல் 48 மணி நேர உயிர்காக்கும் சிகிச்சை

காயமடைந்தவரை மருத்துவமனையில் சேர்ப்பவருக்கான ஊக்கத்தொகை ₹5,000

முக்கிய வேறுபாடு

PM RAHAT திட்டம் நாடு முழுவதும் பொருந்துகிறது மற்றும் 7 நாட்கள் வரை ₹1.5 லட்சம் சிகிச்சை வழங்குகிறது.

இன்னுயிர் காப்போம் திட்டம் தமிழ்நாட்டிற்கே உரியது; ஆனால் ₹2 லட்சம் வரை நிதி உதவி வழங்குகிறது. முதல் 48 மணி நேர அவசர சிகிச்சை மீது அதிக கவனம் செலுத்துகிறது. காயமடைந்தவரை மருத்துவமனையில் சேர்ப்பவருக்கு மத்திய அரசு ₹25,000 ஊக்கத்தொகை, மாநில அரசு ₹5000 ஊக்கத்தொகை.

ஒரு நபர் தமிழ்நாட்டு எல்லைக்குள் விபத்திற்குள்ளானால் அவருக்கு மாநில அரசின் "இன்னுயிர் காப்போம்; நம்மை காக்கும் 48 திட்டமும்" தமிழ்நாட்டு எல்லைக்கு வெளியே நடக்கும் சாலை விபத்திற்கு மத்திய அரசின் திட்டமும் பொருந்தும்.

உதாரணத்துக்கு... ஒருவர் தமிழ்நாட்டு எல்லைக்குள் விபத்தில் சிக்கினால், அவர் இரு அரசு திட்டங்களின் பலன்களையும் பெறலாம்; இருப்பினும், மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி, முதலில் மத்திய அரசின் திட்டப் பலன்கள் முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும். சிகிச்சைக்கான செலவு மத்திய அரசின் வரம்பைத் தாண்டினால், மீதமுள்ள காலம்/தொகைக்கு மாநில அரசின் இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

"மதிக்காத இடத்தில் உண்மையான பயணம் சாத்தியமா?" - அதிமுக-விலிந்து விலகுகிறாரா எம்எல்ஏ விஜயபாஸ்கர்?

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. எடப்பாடி பழனிசாமி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையில் இரண்டு அணிகள் உருவாகின. இதனைத்தொடர்ந்து அதிமுகவிலிருந்து சில எம்.எல... மேலும் பார்க்க

"திமுக இனி எப்போதுமே ஆட்சிக்கு வர முடியாத நிலை ஏற்படும்"- தமிழக காங்கிரஸ் அமைச்சர்கள் கூட்டறிக்கை

தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான ராஜேஷ்குமார் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் ஆகியோர் திமுகவிற்கு எதிராக கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றனர். ம... மேலும் பார்க்க

”50 வருடங்களுக்கு திமுக துடைத்து எறியப்படும்”-அமைச்சர் ஷாஜஹான் பேச்சு; கொதிப்பில் திமுக-வினர்!

சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தொகுதியில் ஐயூஎம்எல் சார்பில் ஏணி சின்னத்தில் போட்டியிட்ட ஷாஜஹான் வெற்றி பெற்றார். இதையடுத்து திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ்... மேலும் பார்க்க

'மாணவர்களுக்கு கூடுதல் மன அழுத்தம்தான் ஏற்படும்..!'- நீட் மறுதேர்வு நடைமுறைகள் குறித்து அண்ணாமலை

இந்தியாவில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் (NEET) எனப்படும் நுழைவுத் தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2026 - 27ஆம் கல்வி ஆண்டுக... மேலும் பார்க்க

விரைவில் ராஜினாமா செய்யும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் - கட்சியிலிருந்தும் விலக முடிவு!

அதிமுக தலைமை மீது நிலவும் அதிருப்தி காரணமாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் விரைவில் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து, கட்சியில் இருந்தும் விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து இரண்டாவது நா... மேலும் பார்க்க

'மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது?'- முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி

கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. தவிர நேற்று சென்னை மற்றும் சென்னையை சுற்றி பல பாலியல் சம்வங்கள் அரங்கேறி இருக... மேலும் பார்க்க