செய்திகள் :

'தமிழ்நாட்டை அமைதி பூங்காவாக மாற்றும் 'விஜய் மாடல் அரசு'- முதல்வரை ஏகத்துக்கும் புகழ்ந்த சபாநாயகர்!

post image

சட்டமன்ற உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி கூட்டம் கலைவாணர் அரங்கத்தில் இன்று தொடங்கியிருக்கிறது. முதல்வர் விஜய் இந்த நிகழ்ச்சியை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

CM Vijay
CM Vijay

இந்நிகழ்வில் பேசிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், 'புதிதாக 146 எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர்.

பேரவையில் நடந்துகொள்ளும் முறை, அவையின் நடைமுறை என்ன, அவையில் என்ன பேசலாம் என்ன பேசக் கூடாது போன்ற பயிற்சிகள் எம்.எல்.ஏக்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

மக்களுக்கு ஏற்றம் தருகிற ஒரு நல்லரசு அமைந்திருக்கிறது. செல்லும் இடமெல்லாம் வெல்லும் இடம் என தேர்தல் களத்தில் முதல்வர் விஜய் நிரூபித்துக் காண்பித்திருக்கிறார்.

இது விஜய் மாடல் அரசு. தமிழ்நாட்டை அமைதிப் பூங்காவாக வைத்துக் கொள்ள எல்லாரையும் அரவணைக்கும் கரமாக விஜய் இருப்பார்.

நான் பேசாமல் ஒரு அமைதிப் புரட்சியை செய்வேன் என்று முதல்வர் நிரூபித்துக் காட்டியிருக்கிறார். இந்திய துணைக் கண்டத்துக்கு முன்னுதாரணமாக பல திட்டங்களை அறிமுகப்படுத்தியது இந்த தமிழ்நாடு சட்டமன்றம்தான்.

எம்.எல்.ஏக்கள் பயிற்சி கூட்டம்
எம்.எல்.ஏக்கள் பயிற்சி கூட்டம்

அவையின் மாண்பை போற்றி காப்பது அரசின் கடமை. எதிர்க்கட்சிக்கும் அந்த பொறுப்பு இருக்கிறது. இந்த பயிற்சி முகாமுக்கு எல்லா எம்.எல்.ஏக்களுக்கும் அழைப்பு விடுத்தோம்.

1980 இல் என்னுடைய முதல் பேச்சை சட்டமன்றத்தில் பேசினேன். 'ஊரெல்லாம் அண்ணா சிலையை வைக்கிறோம். ஒரு சிலையை வைக்க 15000 ஆகும். அதற்கு பதிலாக ஒரு தீப்பெட்டி தொழிலை ஏழைகளுக்கு உருவாக்கிக் கொடுக்க முடியும்' எனப் பேசிவிட்டேன். ஆனால், அதிமுகவிலிருந்து கொண்டு அண்ணா சிலை வைப்பதை பற்றி பேசியதால் அவையில் கொஞ்சம் அசௌக்ரியம் ஏற்பட்டது. ஆனால், என்னுடைய கன்னிப்பேச்சு என்பதால் யாரும் பதிலடி கொடுக்கவில்லை. எம்.ஜி.ஆர் பேசும் போது, 'மாண்புமிகு உறுப்பினர் அண்ணா சிலையும் வைக்கலாம், தீப்பெட்டி தொழிலும் வைக்கலாம் என பேசியிருக்கலாம்.

ஆனால், அவரின் உன்னத நோக்கத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். நம்முடைய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என நினைக்கிறார்' என்று பேசி சூழலை ஆசுவாசப்படுத்தினார். ஆக, ஒரு விஷயத்தை எப்படி என்ன வார்த்தைகளில் அவையில் பேச வேண்டும் என்பதும் முக்கியம்' என சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுரை கூறினார்.

"மதிக்காத இடத்தில் உண்மையான பயணம் சாத்தியமா?" - அதிமுக-விலிந்து விலகுகிறாரா எம்எல்ஏ விஜயபாஸ்கர்?

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. எடப்பாடி பழனிசாமி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையில் இரண்டு அணிகள் உருவாகின. இதனைத்தொடர்ந்து அதிமுகவிலிருந்து சில எம்.எல... மேலும் பார்க்க

"திமுக இனி எப்போதுமே ஆட்சிக்கு வர முடியாத நிலை ஏற்படும்"- தமிழக காங்கிரஸ் அமைச்சர்கள் கூட்டறிக்கை

தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான ராஜேஷ்குமார் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் ஆகியோர் திமுகவிற்கு எதிராக கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றனர். ம... மேலும் பார்க்க

”50 வருடங்களுக்கு திமுக துடைத்து எறியப்படும்”-அமைச்சர் ஷாஜஹான் பேச்சு; கொதிப்பில் திமுக-வினர்!

சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தொகுதியில் ஐயூஎம்எல் சார்பில் ஏணி சின்னத்தில் போட்டியிட்ட ஷாஜஹான் வெற்றி பெற்றார். இதையடுத்து திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ்... மேலும் பார்க்க

'மாணவர்களுக்கு கூடுதல் மன அழுத்தம்தான் ஏற்படும்..!'- நீட் மறுதேர்வு நடைமுறைகள் குறித்து அண்ணாமலை

இந்தியாவில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் (NEET) எனப்படும் நுழைவுத் தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2026 - 27ஆம் கல்வி ஆண்டுக... மேலும் பார்க்க

விரைவில் ராஜினாமா செய்யும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் - கட்சியிலிருந்தும் விலக முடிவு!

அதிமுக தலைமை மீது நிலவும் அதிருப்தி காரணமாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் விரைவில் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து, கட்சியில் இருந்தும் விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து இரண்டாவது நா... மேலும் பார்க்க

'மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது?'- முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி

கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. தவிர நேற்று சென்னை மற்றும் சென்னையை சுற்றி பல பாலியல் சம்வங்கள் அரங்கேறி இருக... மேலும் பார்க்க