செய்திகள் :

``மக்களோடு மக்களாகப் பழகி, அன்பை பெற்றவர்" - வி.எஸ் பாபு மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்

post image

கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி மூச்சுத் திணறல் காரணமாக அமைந்தக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வி.எஸ்.பாபு அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சுவாசக்கருவிகளின் மூலம் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து கவனித்து வருவதாக மருத்துவமனை தரப்பிலிருந்து அறிக்கை வெளியானது. அமைச்சர்களும் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதை உறுதிப்படுத்தினர்.

இந்த நிலையில், வி.எஸ்.பாபுவின் உடல்நிலை கவலைக்கிடமாகி சிகிச்சை பலனளிக்காமல் இன்று மதியம் 2:24 மணிக்கு அவர் உயிரிழந்திருப்பதாக மருத்துவமனை இப்போது அறிவித்திருக்கிறது.

VS Babu
வி.எஸ்.பாபு - VS Babu

வி.எஸ்.பாபு மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்திருக்கிறார். அவரது எக்ஸ் பதிவில், ``கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனையும், துயரமும் அடைந்தேன். பொதுவாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, மக்களோடு மக்களாகப் பழகி, அனைவரின் அன்பையும், ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்றிருந்த திரு.வி.எஸ்.பாபு அவர்களின் திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

திரு.வி.எஸ்.பாபு அவர்களின் பிரிவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்." என பதிவிட்டுள்ளார்

'வருத்தமளிக்கிறது.!'- கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ் பாபுவுக்கு இரங்கல் தெரிவித்த ஸ்டாலின்

கடந்த செப்.9 ஆம் தேதியன்று மூச்சுத்திணறல் காரணமாக தவெக கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ் பாபு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 70 நாட்களுக்கு மேலாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்... மேலும் பார்க்க

'சிரித்த முகத்துக்கு சொந்தக்காரர்; அவருக்காகத் தான் தலைவர் விஜய் கொளத்தூரில்.!'- ஆதவ் அர்ஜுனா

கடந்த செப்.9 ஆம் தேதியன்று மூச்சுத்திணறல் காரணமாக தவெக கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ் பாபு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 70 நாட்களுக்கு மேலாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்... மேலும் பார்க்க

முன்னேற்றம்... பின்னடைவு... இறுதியில் மாரடைப்பு - வி.எஸ்.பாபுவின் கடைசி 72 நாட்கள்

72 நாட்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமானார். மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரின் உடல்நிலை முன்னேற்றம... மேலும் பார்க்க

'72 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பின் காலமானார் கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு!' - விவரம் என்ன?

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அமைந்தக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். வி.எஸ்.பாபுகடந்த செப்டம்பர் 9 ஆ... மேலும் பார்க்க

வி.எஸ் பாபுவுக்கு தீவிர சிகிச்சை; மருத்துவமனை வந்த ஆதவ் அர்ஜுனா - போலீஸ் குவிப்பு!

கடந்த செப்.9 ஆம் தேதியன்று மூச்சுத்திணறல் காரணமாக தவெக கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ் பாபு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். 70 நாட்களுக்கு மேலாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரு... மேலும் பார்க்க

``நாங்க சலுகைகள் தருகிறோம்; வேலைவாய்ப்பு, ஊதியத்தை உயர்த்த நிறுவனங்கள் என்ன செய்தன?" - பிரதமர் மோடி

டெல்லியில் நவம்பர் 19-ம் தேதி நடைபெற்ற இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் (FICCI) ஆண்டு பொதுக்குழு மற்றும் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, ``இந்த... மேலும் பார்க்க