செய்திகள் :

மக்கள் தொகை கணக்கெடுப்பு: 'Live-in உறவிலிருப்பவர்கள் தம்பதியா?' - மத்திய அரசின் பதில் என்ன?

post image

மத்திய அரசு அடுத்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளது. இக்கணக்கெடுப்பில் லிவ் இன் முறையில் வாழ்பவர்களை எவ்வாறு கணக்கெடுப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

நிலையான லிவ் இன் உறவில் இருக்கும் தம்பதிகளை திருமணமான தம்பதிகளாகக் கணக்கெடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் சுய-விவரப் பதிவேற்ற இணையதளத்தில் இடம்பெற்றுள்ள ஒரு கேள்விக்கு அளித்துள்ள விளக்கத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

"சுய-விவரப் பதிவேற்றத்தின் போதோ அல்லது கணக்கெடுப்பாளர் வீட்டிற்கு வரும்போதோ, ஒன்றாக வசிக்கும் (live-in relationship) ஒரு ஜோடியை திருமணமான தம்பதியாகக் கருதலாமா?" என்ற கேள்விக்கு, அதிகாரிகள் அளித்துள்ள பதிலில், ''அந்த ஜோடி தங்கள் உறவை ஒரு நிலையான பிணைப்பாகக் கருதினால், அவர்கள் திருமணமான தம்பதிகளாகவே நடத்தப்பட வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளனர்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு
மக்கள் தொகை கணக்கெடுப்பு

தம்பதிகள் தாங்கள் நிலையான உறவில் இருப்பதாகத் தெரிவித்தால், அதற்கு சட்டப்பூர்வ சான்றிதழ்கள் எதுவும் தேவையில்லை. அவர்கள் அளிக்கும் தகவலின் அடிப்படையிலேயே கணக்கெடுக்கப்படுவார்கள். மக்கள் தாங்களாகவே இணையதளம் வழியாகவோ அல்லது கணக்கெடுப்பாளர் வீட்டிற்கு வரும்போதோ இந்தத் தகவலைப் பதிவு செய்யலாம்.

இந்த விவகாரத்தில் தற்போதுதான் முதல்முறையாகப் மத்திய அரசு வெளிப்படையாக விளக்கம் அளித்துள்ளது. குறிப்பாக, மக்கள் தாங்களாகவே விவரங்களைப் பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்படுவதால் இந்தத் தெளிவுபடுத்தல் அவசியமாகிறது.

இருப்பினும், கடந்த கால கணக்கெடுப்புகளிலும் கூட, ஒன்றாக வாழும் திருமணதிற்கு அப்பாற்பட்ட ஜோடிகள் தங்களை "திருமணமானவர்கள்" என்று கணக்கெடுப்பாளரிடம் தெரிவித்தால், அவ்வாறே பதிவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுட்டனர்.

மக்கள் தொகை கணக்கெடுப்பில் வீடுகள் பட்டியல், வீட்டு வசதிகள் குறித்து கேட்கப்பட்டுள்ள கட்டத்தில் கேட்கப்படவுள்ள 33 கேள்விகளில், ஒரு வீட்டில் வசிக்கும் திருமணமான தம்பதிகளின் எண்ணிக்கையும் ஒன்றாகும். இந்தக் கணக்கெடுப்புப் பணி 45 நாட்கள் நடக்க இருக்கிறது.

முதல் கட்டமான வீடுகள் பட்டியல் மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்பு அடுத்த மாதம் தொடங்கும். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முழுமையான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும். ஒவ்வொரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தின் அறிவிப்பின்படி, மக்கள் தொகை கணக்கெடுப்பில் வீடுகள் பட்டியல் பணிகள் ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரை நடைபெறும்.

45 நாட்கள் நடக்கும் இக்கணக்கெடுப்பின் முதல் 15 நாட்கள் சுய விபர பதிவேற்றத்திற்காகவும், அதைத்தொடர்ந்து வரும் 30 நாட்களில் கணக்கெடுப்பாளர்கள் நேரில் வந்து விபரங்களைச் சேகரிப்பதாகவும் இருக்கும்.

மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, பதிலளிப்பவர்கள் தங்கள் பதில்களுக்கு எந்தவிதமான ஆவண ஆதாரங்களையும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் தங்களுக்குத் தெரிந்த உண்மையான தகவல்களைத் தெரிவித்தால் போதுமானது.

மக்கள் தொகை
மக்கள் தொகை

பதிலளிப்பவர் அளிக்கும் தகவல்களின் அடிப்படையிலேயே விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று கணக்கெடுப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புது டெல்லி மாநகராட்சி பகுதிகளில் ஏப்ரல் 1-ஆம் தேதி சுய விபரப் பதிவேற்றம் தொடங்குகிறது. இதில் ஒரு பிரத்யேக இணையதளம் வாயிலாக பொதுமக்கள் தங்களைப் பற்றிய தகவல்களைத் தாங்களாகவே பதிவு செய்துகொள்ளலாம்.

இந்தச் சுய-விவரப் பதிவேற்ற வசதி, ஆங்கிலம் மற்றும் 15 இந்திய மொழிகளில் இருக்கும். குடும்பத் தலைவர் சுயவிபர தகவல்களைப் பதிவேற்றம் செய்யப்படலாம்.

குடும்பத் தலைவர் ஆண் உறுப்பினராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இது தவிர ஒடிபி அடிப்படையிலான மொபைல் சரிபார்ப்பை முடித்த பிறகு, குடும்பத்தைச் சேர்ந்த பொறுப்பான குடும்ப உறுப்பினர் எவரும் இதனைச் செய்யலாம்.

20 பேர் பலியான சத்தீஸ்கர் ஆலை விபத்து: வேதாந்தா நிறுவனர் அனில் அகர்வால் மீது வழக்குப் பதிவு!

சத்தீஸ்கர் மாநிலத்தின் சக்தி மாவட்டத்தில் அமைந்துள்ள வேதாந்தா மின் நிலையத்தின் கொதிகலனில் (boiler) ஏற்பட்ட வெடிவிபத்தில் 20 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்து சம்பவம் தொடர்பாக, வேதாந்தா ரிசோர்சஸ்... மேலும் பார்க்க

VIP பணிகளுக்காக முடக்கப்பட்ட ஆம்புலன்ஸ்?: 'பறிபோன ஊடகவியலாளர் உயிர்' - பகீர் குற்றச்சாட்டு

மத்தியப் பிரதேசத்தில் 'ஸ்வர்ண் மங்கலம்' (Swarn Mangalam) என்ற மாத இதழின் ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் தீபக் சோனி. இவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று ரைசெனில் நடைபெற்ற ஒரு விவசாயக் கண்காட்சியில் கலந்துகொள்... மேலும் பார்க்க

சரிவிலிருந்து இந்திய ரூபாய் மதிப்பு மீண்டது எப்படி? போர் நிறுத்தம் மட்டும் காரணமல்ல

சில மாதங்களாகவே, இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துகொண்டு இருந்தது.கடந்த 30-ம் தேதி, இந்திய ரூபாயின் மதிப்பு இன்ட்ரா டேயில் ரூ.95-ஐ கூட தொட்டது. இது வரலாற்றின் புதிய வீழ்ச்சி. இந்த நிலைமையெல்லாம் இப்போது... மேலும் பார்க்க

'திருப்பரங்குன்றத்தைத் தவிர வேறு பிரச்னையே இல்லையா?' - தீப விவகாரத்தில் காட்டமான நீதிபதிகள்

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில், `திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்த இந்து மக்களுக்கு அனுமதி மறுத்த அதிகாரிகள், ரம்ஜான் அன்று இஸ்லாமியர்கள் மலை மேலே ச... மேலும் பார்க்க

`என் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் கல்லுப்பட்டி ஆலமர மேடை' - நெகிழ்ந்த தங்கம் தென்னரசு

``என் மனதில் என்றும் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கும் மேடை இந்தக் கல்லுப்பட்டி ஆலமர மேடைதான்" - தந்தை தங்கப்பாண்டியன் பிரசாரத்தைத் தொடங்கிய ஆலமர மேடையில் தனயன் தங்கம் தென்னரசு உணர்ச்சி பூர்வமான பிரசா... மேலும் பார்க்க

'முதல்வர் கொடுத்த ராஜ்ய சபா எம்.பி சீட்டை பெற மறுத்தேன்...' - அதிர்ச்சியூட்டிய திருமாவளவன்

'தி.மு.க-வுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின்போது ஒரு ராஜ்ய சபா சீட் தருவதாக முதல்வர் ஸ்டாலின் சொன்னார், ஆனால் நான் பெற மறுத்துவிட்டேன்' என திருமா பேசியிருப்பது வி.சி.க-வினர் மத்தியில் அதிர்ச்சியை... மேலும் பார்க்க