செய்திகள் :

"மஞ்சள் ஜெர்ஸியில் தோனி விளையாடுவது இதுவே கடைசியாக இருக்கலாம்.!"- ராபின் உத்தப்பா சொல்வதென்ன?

post image

எதிர்வரும் தொடரில் மஞ்சள் ஜெர்ஸியில் தோனி விளையாடுவதே அவரின் கடைசி ஐபிஎல் தொடராக இருக்கலாம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா தெரிவித்திருக்கிறார்.

2026 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் மார்ச் 28 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதில் சிஎஸ்கே அணி மார்ச் 30 ஆம் தேதி ராஜஸ்தான் அணியை எதிர்த்து களமிறங்குகிறது.

ராபின் உத்தப்பா
ராபின் உத்தப்பா

இந்நிலையில் சிஎஸ்கே குறித்து பேட்டி ஒன்றில் பேசிய ராபின் உத்தப்பா, " கேப்டன் பொறுப்பை சஞ்சு சாம்சனிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொடுக்காது என்று நான் நினைக்கிறன்.

தோனியின் நிழலில் இருந்து விலகி ருதுராஜ் ஒரு முழுமையான கேப்டனாக உருவெடுக்க இன்னும் சில ஆண்டுகள் அவருக்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.

கடந்த 2024 சீசன் முதல் தான் அவர் அணியை வழி நடத்தி வருகிறார். அவர் குறித்து யார் என்ன சொன்னாலும் பிரச்னை இல்லை என்று தனது பாணியில் அவர் அணியை வழிநடத்த வேண்டும்.

அதன் பிறகு அவரின் கேப்டன்ஷிப் சரியில்லை என்ற எண்ணம் வந்தால் சஞ்சு சாம்சன் இருக்கிறார். அவரிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைக்கலாம்.

தோனி
தோனி

எதிர்வரும் தொடரில் மஞ்சள் ஜெர்ஸியில் தோனி விளையாடுவதே அவரின் கடைசி ஐபிஎல் தொடராக இருக்கலாம்.

ஓய்வை நோக்கி பயணிப்பதால் தோனி இந்தமுறை பின்வரிசையிலேயே களமிறங்குவார்" என்று ராபின் உத்தப்பா கூறியிருக்கிறார்.

IPL 2026: "CSK-வை விட மும்பை அணி தான் சிறந்தது, ஏனென்றால்..!"- முன்னாள் வீரர் இர்பான் பதான்

இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் ஐபிஎல் தொடரில் அதிக தொகைக் கொடுத்து ஏலம் எடுக்கப்படும் வீரர்கள் குறித்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளில், சிறந்த அணி எது? என்பது ... மேலும் பார்க்க

IPL : விற்பனைக்கு வரும் ராயல் சேலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் - ரூ.16,000 கோடியை நிராகரித்த RR!

ஐ.பி.எல் அணிகளின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விற்பனைக்கு வந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ராஜஸ்தான் ராய... மேலும் பார்க்க

"RR அணியின் முகமாக இருந்தவர் சஞ்சு சாம்சன்; அவரை இழந்திருப்பது அணிக்கும்..!"- ஃபாப் டு பிளெஸ்ஸிஸ்

2026 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் திருவிழா வரும் மார்ச் 28 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில், வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை அணி தனது முதல் போட்டி... மேலும் பார்க்க

CSK: இம்பேக்ட் பிளேயராக தோனி? - சிஎஸ்கேவின் 'ஃபினிஷர்' ரோலில் களமிறங்கும் 20 வயது இளம்வீரர் யார்?

ஐபிஎல் 2026 திருவிழா மார்ச் 28-ல் தொடங்கவிருக்கிறது. இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் மத்தியில் ஒரு செய்தி காட்டுத்தீயாய் பரவி வருகிறது. மார்ச் 30-ம் தேதி ராஜஸ... மேலும் பார்க்க

`ரூ.18,000 கோடிக்கு விலை போகிறதா RCB? போட்டிபோடும் இரண்டு நிறுவனங்கள்!

ஐபிஎல் வரலாற்றில் முதன் முறையாக,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2025-ல் சாம்பியன் பட்டம் வென்ற பிறகு, அணியின் மவுசு கூடியிருக்கிறது. தற்போது இந்த அணியின் மதிப்பு சுமார் ₹18,000 கோடி வரை உயர்ந்துள்ளது. ... மேலும் பார்க்க

Dhoni: "ரோஹித், கோலி, ஏன் என்னையும் உருவாக்கியவர் அவர்தான்.!"- தோனியை புகழந்த ரெய்னா

நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை பிறக்கக்கூடியவர் தான் தோனி என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா புகழ்ந்திருக்கிறார்.நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சுரேஷ் ரெய்னாவிடம் தோனி குறித்து கேள்வி கேட்கப... மேலும் பார்க்க