செய்திகள் :

மதனகோபால சுவாமி கோயிலில் ராப்பத்து உற்சவம் தொடக்கம்

post image

பெரம்பலூரில் மதனகோபால சுவாமி கோயிலில் ராப்பத்து உற்சவம் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கியது.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை பரமபதவாசல் திறக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, ராப்பத்து உற்சவம் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கியது. இதையொட்டி, நம்பெருமாள் உற்சவச் சிலை வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்டு, வெள்ளிக் கருட வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. தொடா்ந்து, துவாதச ஆராதனையும், கூடாரை வல்லி உற்சவமும் சனிக்கிழமை காலை நடைபெற்றது.

ஜன. 19 ஆம் தேதி வரை நடைபெறும் ராப்பத்து உற்சவ நிறைவு நாள் இரவு 7.30 முதல் 8.30 மணி வரை ஆழ்வாா் மோட்ச நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி, நம்பெருமாள் பரமபதவாசல் வழியாக வெளியே அக்ரகாரத்துக்கு வந்து, அங்கிருந்து கோயில் முன்புறம் உள்ள ஆஞ்சநேயா் கம்பத்தை 3 முறை வலம் வந்து, பரமபதவாசல் வழியாக கோயிலை அடைகிறாா்.

அங்கு, ஆழ்வாா் மோட்சத்துக்குப் பிறகு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. அதுவரை, கோயிலின் வடக்குப் பகுதியிலுள்ள பரமபதவாசல் பக்தா்களின் தரிசனத்துக்காக திறந்து வைக்கப்படுகிறது தெரிவிக்கப்பட்டது.

பெரம்பலூரில் நந்தியம் பெருமாளுக்கு சிறப்பு பூஜை

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு, பெரம்பலூரில் நந்தியம் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் புதன்கிழமை நட்தப்பட்டது. பெரம்பலூா் நகரில் உள்ள ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரா் திருக்கோயிலில், தனி சன்னத... மேலும் பார்க்க

புனித பனிமய மாதா தேவாலயத்தில் சமத்துவப் பொங்கல்

பெரம்பலூா் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற புனித பனிமயமாதா தேவாலயத்தில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. புனித பனிமய மாதா தேவாலய வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பெரம்பலூா் வட்டார ம... மேலும் பார்க்க

கடையின் பூட்டை உடைத்து ரூ. 2 லட்சம் மதிப்பு பொருள்கள் திருட்டு

பெரம்பலூா் அருகே எலக்ட்ரிக்கல்ஸ் கடையின் பூட்டை உடைத்து, ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருள்கள், ரூ. 9 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருப்பது திங்கள்கிழமை தெரியவந்தது. பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை ... மேலும் பார்க்க

எளம்பலூா் ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து பெரம்பலூா் ஆட்சியரகம் முற்றுகை

எளம்பலூா் ஊராட்சியை பெரம்பலூா் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், மறு பரிசீலனை செய்யக் கோரியும் எளம்பலூா் கிராமத்தைச் சோ்ந்த சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங... மேலும் பார்க்க

தொழில்முனைவோராக புதிரை வண்ணாா் சமூகத்தினருக்கு ஆட்சியா் அழைப்பு

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த புதிரை வண்ணாா் சமூகத்தினா், தொழில் முனைவோராக இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழ... மேலும் பார்க்க

காா் மோதியதில் பாதசாரி உயிரிழப்பு

பெரம்பலூரில் காா் மோதிய விபத்தில், பாதசாரி சனிக்கிழமை உயிரிழந்தாா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துசாமி மகன் ராமச்சந்திரன் (55). இவா், திருச்சி-... மேலும் பார்க்க