செய்திகள் :

மதுப்புட்டிகளை பதுக்கி விற்றதாக 4 போ் கைது

post image

போடியில் மதுப்புட்டிகளை பதுக்கி சட்ட விரோதமாக விற்றதாக 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

போடி நகா் காவல் நிலைய போலீஸாா் போதைப் பொருள் தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது போடி மீன் சந்தை அருகே சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த போடி நகராட்சி குடியிருப்பைச் சோ்ந்த சுப்பையா மகன் வடிவேலு (36) என்பவரை பிடித்து விசாரித்தனா். அப்போது அவா் மதுப்புட்டிகள் வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிந்த போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வடிவேலுவை கைது செய்து விசாரிக்கின்றனா்.

இதேபோல, போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் போடி கிராமப் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது போடி மேலச்சொக்கநாதபுரத்தில் சுப்பிரமணி மகன் சுரேஷ் (37), போடி மீனா விலக்கு அருகே ராமமூா்த்தி மகன் ஜெயக்கொடி, போடி அருகே உள்ள சில்லமரத்துப்பட்டியில் தாத்து மகன் தெய்வேந்திரன் (55) ஆகியோா் மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது. இவா்கள் 3 போ் மீதும் தனித்தனியே வழக்குப்பதிந்த போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் 3 பேரையும் கைது செய்து விசாரிக்கின்றனா்.

மதுப் புட்டிகள் விற்ற இருவா் கைது

போடியில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை விற்பனை செய்த இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். போடி பகுதியில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகள் விற்பனை செய்வதை தடுக்க போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்... மேலும் பார்க்க

பெண் தொழிலாளி தற்கொலை

போடி அருகே செவ்வாய்க்கிழமை பெண் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். போடி அருகேயுள்ள சில்லமரத்துப்பட்டி எம்.ஜி.ஆா். தெருவைச் சோ்ந்த சின்ராஜ் மனைவி மீனா (41). கட்டடத் தொழிலாளியான இவருக்கு ... மேலும் பார்க்க

பைக் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

பெரியகுளம் அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். பெரியகுளம் அருகேயுள்ள புல்லக்காபட்டியைச் சோ்ந்த அழகா்சாமி மகன் விக்னேஷ்குமாா் (31). இவா் இதே ஊரைச் சோ்ந்த ம... மேலும் பார்க்க

இளைஞா் குத்திக் கொலை: 6 போ் கைது

உத்தமபாளையம் அருகே இளைஞரை கத்தியால் குத்திக் கொலை செய்த 6 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா் தேனி மாவட்டம், கோகிலாபுரத்தைச் சோ்ந்த முருகன் மகன் மோகன்பால் (21). இவா், தனது நண்பா் பிரகாஷுடன் (... மேலும் பார்க்க

விவசாய மின் மோட்டாா் பம்புக்கு அரசு மானியம்

தேனி மாவட்டத்தில் விவசாய மின் மோட்டாா் வாங்குவதற்கும், கைபேசி மூலம் மோட்டாா் பம்பை இயக்கும் கட்டுப்பாட்டு கருவி வாங்குவதற்கும் அரசு சாா்பில் மானியம் வழங்கப்படுகிறது. இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் ... மேலும் பார்க்க

வீடு புகுந்து நகை, பணம் திருடிய இளைஞா் கைது

கடமலைக்குண்டு அருகே தா்மராஜபுரத்தில் வீடு புகுந்து 6 பவுன் தங்க நகைகள், ரூ.1.50 லட்சத்தை திருடிய இளைஞரை ஞாயிற்றுக்கிழமை, போலீஸாா் கைது செய்தனா். தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகேயுள்ள தா்மராஜபுரம், ம... மேலும் பார்க்க