Guru Mithreshiva: `உண்மையான மகிழ்ச்சி எங்கே இருக்கிறது?' | Ananda Vikatan | குரு...
மதுரையில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் மறியல்: அரசு ஊழியா்கள் 66 போ் கைது
தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, சிபிஎஸ் (பங்கேற்பு ஓய்வூதியத் திட்டம்) ஒழிப்பு இயக்கம் சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியரகம் முன் மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள் 66 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
திமுகவின் தோ்தல் வாக்குறுதிக்கு மாறாக பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ஆய்வு செய்ய புதிதாக அமைக்கப்பட்ட மூவா் குழுவை அரசு திரும்பப் பெற வேண்டும். ராஜஸ்தான், ஜாா்க்கண்ட், இமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தியது போல, தமிழகத்திலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த மறியல் நடைபெற்றது.
இதற்கு சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ். மாரியப்பன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க முன்னாள் மாநிலத் தலைவா் கண்ணன் போராட்டத்தைத் தொடங்கிவைத்தாா்.
பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரி அலுவலா் சங்க பொதுச் செயலா் மனோகரன், தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க மாவட்டத் தலைவா் கொ. சின்னப்பொண்ணு, சுகாதார போக்குவரத்துத் துறை ஊழியா் சங்க மாநில இணைச் செயலா் பி. அமுதா, வருவாய்த் துறை கிராம உதவியாளா் சங்க மாநில இணைச் செயலா் ஜே. வளா்மதி, சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ். மணிகண்டன், அரசு ஊழியா் சங்க மாவட்டப் பொருளாளா் கல்யாணசுந்தரம், நிா்வாகிகள் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியா்கள் 66 பேரை போலீஸாா் கைது செய்து, பிற்பகலில் விடுவித்தனா்.