செய்திகள் :

மதுரை: காதல் கோட்டை க்ளைமேக்ஸ் ரீ-கிரியேஷன்; ரீல்ஸ் ஷூட்டிங் ஸ்பாட்டான ரயில் நிலையம்!

post image

மதுரை ரயில்வே நிலையத்தில் நாள்தோறும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் மதுரை ரயில் நிலையத்தில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் ஜோடி ஒன்று, காதல் கோட்டை படத்தில் அஜித் - தேவயானி வரும் க்ளைமேக்ஸ் காட்சியை வைத்து ரீல்ஸ் செய்துள்ளனர்.

அதில் கமலி, சூர்யா என கத்துவதும், சூர்யா சட்டையைக் கழற்றி பனியனில் ரோஜாவிற்கு பதிலாக வாகைப்பூவை வரைந்து அதனை காட்டுவதும் என... ரயிலில் ஏறுவது இருக்கையில் அமருவது பின்னர்  பிளாட்பார்மில் ஓடுவது என ரயில்வே நிலையத்தை ரீல்ஸ் ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றி பார்ப்போரை முகம் சுளிக்க வைத்திருக்கிறார்கள். தற்போது வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

வைரலாகும் ரீல்ஸ்

ரயில் நிலையங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால் படப்பிடிப்பு அல்லது குறும்படங்கள் எடுக்க வேண்டுமென்றால் ரயில்வே நிர்வாகத்திடம் அனுமதி பெற்றுதான் நடத்த முடியும். தற்போது வைரலாகி வரும் இந்த ரீல்ஸ் வீடியோவிற்காக அதிகாரிகளிடம் அனுமதி வாங்கினார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் இது போன்று ரயில்களில் ரீல்ஸ் எடுத்து வீடியோ வெளியிடும் நபர்களுக்கு ரயில்வே பாதுகாப்பு படையினர் உரிய அறிவுரை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

MTC பேருந்தில் பயணிக்கு வந்த வலிப்பு; துரிதமாகச் செயல்பட்ட நடத்துநர்; சென்னையில் நெகிழ்ச்சி சம்பவம்!

சென்னையில் ஓடும் பேருந்துகளில் தினமும் ஆயிரக்கணக்கான சுவாரசியமான, நெகிழ்ச்சியான சம்பவங்கள் அரங்கேறுவது வழக்கம். ஆனால், சமீபத்தில் கிளாம்பாக்கம் - திருவான்மியூர் வழித்தடத்தில் இயக்கப்பட்ட மாநகரப் பேருந... மேலும் பார்க்க

Madhavan: `10 வாட்ச் மட்டுமே தயாரிப்பு; விலை.? - நடிகர் மாதவன் கட்டியிருந்த அரிதான வாட்ச்!

இந்திய திரையுலகின் முன்னணி மற்றும் பன்முகத்தன்மை கொண்ட நடிகர்களில் ஒருவரான மாதவனுக்கு, நாட்டின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றான 'பத்மஸ்ரீ' விருது வழங்கப்பட்டது. கடந்த 23-ம் தேதி நடந்த இந்த நிகழ்வில... மேலும் பார்க்க

Larry Cat: 7-வது பிரதமருக்காகக் காத்திருக்கும் இங்கிலாந்துப் பூனை; சமூக ஊடகங்களில் வைரலாகும் லேர்ரி!

பிரிட்டனில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் 6 பிரதமர்கள் ராஜினாமா செய்துவிட்டார்கள். 7-வது பிரதமர... மேலும் பார்க்க

`சிவனைப் தரிசிக்க வேண்டும்" - ஆண்டு கணக்கில் நின்றுகொண்டே இருக்கும் சாமியார் | Viral Video

இந்தியாவைச் சேர்ந்த துலால் கிரி ஜி மகாராஜ் என்ற இந்து சாமியார் ஒருவர், தனது ஆன்மீக நேர்த்திக்கடனுக்காகத் தொடர்ந்து பல ஆண்டுகளாக நின்றுகொண்டே இருக்கும் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வெள... மேலும் பார்க்க

நூறு சாமி: ``இக்கட்டான சூழ்நிலைகளில்..."- திருப்பூர் சுப்பிரமணியத்திற்கு நன்றி சொன்ன விஜய் ஆண்டனி!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர், இசையமைப்பாளர், படத் தயாரிப்பாளர் எனப் பல முகங்களுடன் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில், இயக்குநர் சசி இயக்கத்தில் நூறு சாமி திரைப்படம் இன்று (ஜூன் 19) திரையரங... மேலும் பார்க்க

கும்பகோணம் தீ விபத்தின் கோரத்தை நேரில் கண்டவர், இன்று மதிப்புமிக்க பதவியில்- வாழ்த்திய ராதாகிருஷ்ணன்

2004-ம் ஆண்டு ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கிய கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளித் தீ விபத்தின்போது, நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த ஜெனிபர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். ஆனால், இந்த விபத்தில் 94 க... மேலும் பார்க்க