ஆபாச மெசேஜ் விவகாரம்: "மாவட்ட ஆட்சியர் மௌனம் கலைக்க வேண்டும்" - டாக்டர் கிருஷ்ணச...
மதுரை : காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டவர் தூக்கிட்டு தற்கொலை; போலீஸார் சஸ்பெண்ட்!
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர், சரக்கு வாகனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். கடந்த நவம்பர் 2-ம் தேதி அதிகாலை தேவரத்தில் இருந்து மதுரைக்கு பார்சல்கள் மற்றும் ஏலக்காய்களை ஏற்றிக்கொண்டு வந்தபோது, வளந்தூர் கண்மாய் கரை அருகே அவரது வாகனத்தில் திடீரென தீப்பிடித்தாகவும் அப்போது வாகனத்தில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக பாலகிருஷ்ணன் அளித்த புகாரின் அடிப்படையில், வளந்தூர் காவல் நிலையத்தில் குற்ற எண் 113/2026-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்துள்ளது.
புகாரளித்த 10 நாட்கள் கழித்து வழக்கின் விசாரணைக்காகவும், சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்வதற்காகவும் நேற்று இரவு 10.45 மணிக்கு பாலகிருஷ்ணன் செக்கானூரணி காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லபட்டுள்ளார். அப்போது காவல் ஆய்வாளரின் அறையில் இருந்த அவர், கழிவறைக்குச் சென்றதாகவும், காலை சுமார் 6 மணியளவில் அங்கு தூக்கிட்ட நிலையில் மயக்கமடைந்து கிடந்ததாக சொல்லபடுகிறது.

இதையடுத்து உடனடியாக அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
காவல் நிலையத்துக்குள் புகார்தாரர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. மேலும், அன்றைய தினம் பணியில் இருந்த காவல் நிலையப் பொறுப்பாளர் மற்றும் தொடர்புடைய காவலர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கினை சிபி-சிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கவும் முடிவு செய்யபட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெர்விக்க்பட்டுள்ளது.















