செய்திகள் :

மதுரை: பிரதமர் மோடி கலந்துகொள்ளும் பொதுக் கூட்டத்தில் ’பெரியார், அண்ணா’ புகைப்படங்கள்!

post image

மதுரையில் உள்ள மண்டேலா நகரில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடக்க இருக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேச இருக்கிறார்.

நாளை காலை புதுச்சேரியில் நடக்கும் தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசி விட்டு, மதியம் தனி விமானம் மூலம் தஞ்சாவூர் விமானப் படைத்தளத்திற்கு வந்து அங்கு சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். அதன் பின் மதியம் 3.30 மணியளவில் சிறப்பு விமானம் மூலம் மதுரைக்கு வருகிறார்.

மதுரைக்கு வரும் பிரதமர் மோடிக்கு பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் வரவேற்பு அளிக்கின்றனர். அதனை தொடர்ந்து பிரதமர் மோடி விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய வான் கட்டுப்பாட்டு கோபுரத்தை திறந்து வைக்கிறார். பின்னர் காணொலி காட்சி மூலம் தமிழகத்தில் புதுப்பிக்கப்பட்ட ரெயில் நிலையங்களை திறந்து வைக்கிறார்.

பரமக்குடி-ராமநாதபுரம் நான்கு வழிச்சாலை உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசு திட்ட பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். பின்னர் மாலை 4 மணிக்கு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்கிறார். கோவில் நிர்வாகம் சார்பில் பிரதமர் மோடிக்கு கும்பம் மரியாதை அளிக்கப்படுகிறது.

பிரதமர் கலந்து கொள்ளும் கூட்டத்தில் அண்ணா, பெரியார் படங்கள்

அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு 4.30 மணிக்கு மதுரை மண்டேலா நகர் சுற்றுச்சாலை பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் மாலை நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி தலைமையில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கிறர்கள்.

இதற்காக 120 ஏக்கர் இடத்தில் பிரமாண்டமாக செட் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பொதுக்கூட்ட அலங்கார முகப்பில் பெரியார், அண்ணா புகைப்படங்கள் இடம் பெற்றிருக்கிறது. பொதுக்கூட்ட மேடை மற்றும் முகப்பில் கூட்டணி கட்சி தலைவர்களின் புகைப்படங்களும் இந்த அரங்கில் அமைக்கப்பட்டுள்ளது.

பொதுக்கூட்ட மேடை

இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வரும் கட்சி தொண்டர்கள் அமரும் வகையில் ஒவ்வொரு தொகுதியும் தனிதனி கேபினாக பிரிக்கப்பட்டு சேர்கள் போடப்பட்டிருக்கின்றன. திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம் செய்ய இருப்பதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஈரானை தாக்கும் அமெரிக்கா, இஸ்ரேல்; 'நண்பர்களுக்கு' மோடி ஆதரவா?- சாடும் எதிர்க்கட்சிகள்; காரணம் என்ன?

இப்போது அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரானைத் தாக்கி வருகின்றன.இந்த நேரத்தில் இந்திய எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடியைச் சாடி வருகின்றன.ஈரானை அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குவதற்கும், பிரதமர்‌ மோடியை இங்கே எதிர்க்கட... மேலும் பார்க்க

'காங்கிரஸின் சந்திப்பை தவிர்த்த முதல்வர்; பதட்டமடைந்த செல்வப்பெருந்தகை!'- இறுக்கும் டி.ஆர்.பாலு & கோ

கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளால் அனலாக தகித்துக் கொண்டிருக்கிறது அறிவாலயம். சீட்டை குறைத்து விடுவார்களோ என்கிற பதட்டத்தில் இருக்கும் வைகோ ஒரு துண்டு சீட்டோடு அறிவாலயம் வர, இன்னொ... மேலும் பார்க்க

அமெரிக்கா, இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதலை தொடங்கிய ஈரான் - தொடரும் பதற்றம்!

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து இன்று தாக்குதலை நடந்தி இருக்கின்றனர். தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. ஈரான் மீது அமெரிக்... மேலும் பார்க்க

ஆந்திரா: பட்டாசு ஆலையில் வெடி விபத்து; 20 பேர் உயிரிழந்த சோகம்

ஆந்திர மாநிலத்தில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே சூர்யஸ்ரீ என்ற பெயரில் பட்டாசு ஆல... மேலும் பார்க்க

காங்கிரஸை காலி செய்த திமுக; இந்திய அரசியலைத் தீர்மானித்த திருவண்ணாமலை இடைத்தேர்தல்|அரசியல் ஆடுபுலி 7

திருவண்ணாமலை இடைத் தேர்தல்அரசியல் ஆடுபுலி 07ஒரு இடைத்தேர்தல், இந்திய அரசியலின் ஆடுபுலி ஆட்டத்தையே மாற்றியமைத்தது என்றால், அது திருவண்ணாமலை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தல் என்று கூறலாம். முதலமைச்சர்களாக ... மேலும் பார்க்க

`ஈரானும் இஸ்ரேலும் எப்படியான நண்பர்கள் தெரியுமா?’ - நட்பு, பகையான பின்னணி | Iran vs Israel

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)மேனாள் ஆசிரியர் , பிபிசி உலகசேவை கட்டுரையாளர்... மேலும் பார்க்க