செய்திகள் :

மதுரை : மனைவியை சேர்த்து வைக்ககோரி மதுபோதையில் 'ஸ்பைடர் மேன்' போல் கட்டடத்தில் ஏறிய நபர்!

post image

மதுரை மாநகர் அவனியாபுரம் பகுதியை சேர்ந்தவர் பாண்டிகடல்.  இவரது மனைவி கர்ப்பிணியாக உள்ளார். தம்பதிக்கு ஒரு மகனும் உள்ளார்.

பாண்டிகடலின் மனைவி தாயாரின் வீட்டிற்கு சென்ற நிலையில் தன்னுடன் வர வேண்டும் பாண்டிகடல் அழைத்துள்ளர். அவரது மனைவி இதனை மறுத்துள்ளார்.

இந்நிலையில் மதுபோதையில் இருந்த கடல்பாண்டி இரவு 10 மணியளவில் மதுரை பெரியார் பேருந்து நிலைய காம்ப்ளக்ஸ் கட்டிடத்தில் உள்ள மழைநீர் சேகரிப்பு குழாயை பிடித்தவாறு சர்ரென 'ஸ்பைடர் மேன்' போல விறுவிறுவென ஏறியுள்ளார்.

தனது மனைவி மகனை தன்னோடு சேர்த்துவைக்க வேண்டும்; மனைவி இங்கு வர வேண்டும் என கூறியபடி அடுத்தடுத்த தளங்களுக்கு குழாயில் தொங்கியபடி ஏறினார்.

இதனை பார்த்த பொதுமக்கள் திடீர்நகர் காவல்துறையினருக்கு தகவல் அளித்த நிலையில் காவல்துறையினர் பெரியார் பேருந்து நிலைய  தீயணைப்புத்துறையினரை வரவழைத்தனர்.

இதனை தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி கீழே இறங்குமாறு கெஞ்சியும், பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இறங்க மறுத்து, `தனது மனைவி அவனியாபுரத்தில் உள்ளார்.

அவரை அழைத்துவர வேண்டும். இல்லையென்றால் குதித்துவிடுவேன்' என தொடர்ந்து கூறியபடியே தொங்கியதோடு ஜன்னலில் உள்ள கண்ணாடிகளை உடைத்து அதை வைத்து உடலை கிழித்துகொண்டு காயப்படுத்தியபடி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

மனைவி எங்கு உள்ளார் என காவல்துறையினர் கேட்ட போது அவனியாபுரத்துல 'பாண்டிகடல்னு பொண்டாட்டினு சொன்னா தெரியும் இங்கு கூப்டு வாங்க' என கூறி காவல்துறையினர், தீயணைப்புத்துறையினரின் பொறுமையை சோதித்து பார்த்தார்.

மேலும் கீழே குதித்துவிடுவார் என்பதற்காக தீயணைப்புதுறையினரும் வலையை விரித்தபடி காத்திருந்தனர்.

இதனை தொடர்ந்து மதுபோதையில் இருந்த பாண்டிகடலை நீண்ட நேர போராட்டத்திற்கு மேல ஏறிய தீயணைப்புத்துறையினர் நொடிப்பொழுதில் ஜன்னல் வழியாக இழுத்து காப்பாற்றி மீட்டனர்.

இதனை தொடர்ந்து உடல் முழுவதும் காயங்களுடன் இருந்த பாண்டிகடலை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

மதுபோதையில் இருந்த பாண்டிகடல் செய்த ஸ்பைடர்மேன் சாகசத்தால் பல மணி நேரமாக தீயணைப்புத்துறையினரும், காவல்துறையினரும் போராடி தவித்தனர்.

Annamalai: 'பாஜக துணை தலைவர் டு தொண்டர்' - அண்ணாமலையின் கோவை REWIND | Photo Album

ஆகஸ்ட 2020 - தமிழக பா.ஜ.க மாநில துணைத்தலைவராக பொறுப்பேற்று கோவைக்கு முதன்முதலில் வந்தபோது ஆகஸ்ட 2020 - தமிழக பா.ஜ.க மாநில துணைத்தலைவராக கோவையில் அண்ணாமலை முதல் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வு ஆகஸ்ட 2... மேலும் பார்க்க

கோவை பாஜக முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா – அண்ணாமலை அமைப்பில் ஐக்கியம்

பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ராஜினாமா ஏற்கப்பட்ட நிலையில், முன்னாள் கோவை மாநகர மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, தெற்கு மாவட்டத் தலைவர் வசந்த ராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் அக்கட்சியில்... மேலும் பார்க்க

முன்பு வேண்டாம் என்று மறுத்த `இந்தியா' ; மீண்டும் கதவைத் தட்டும் `ரஷ்யா!' Su-57 டீல் ஓகே ஆகுமா?

ஐந்தாம் தலைமுறை போர் விமானமான சுகோய் Su-57-ஐ இந்தியாவோடு இணைந்து தயாரிக்கத் தயார் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மீண்டும் ஒருமுறை வெளிப்படையாகவே அழைப்பு விடுத்திருக்கிறார். ஒரு காலத்தில் இதே திட்டத்... மேலும் பார்க்க

'அண்ணாமலை விலகியது பாஜகவுக்குப் பாதிப்பை ஏற்படுத்துமா?' - நயினார் நாகேந்திரனின் பதில் என்ன?

அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்திருக்கிறார். அண்ணாமலை, பாஜகவில் இருந்து விலகி புதிய அரசியல் இயக்கம் தொடங்கப்போவதாகத் தெரிவ... மேலும் பார்க்க

3 லட்சத்தை நெருங்கும் அண்ணாமலையின் 'We The Leaders' : இந்த அமைப்பின் ரூட் என்ன? எதற்கு இது?

'தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ராஜினாமா' - இந்த 'ஹாட் செய்தி' தமிழ்நாடு, டெல்லி மட்டுமல்ல... இந்தியா முழுவதையுமே கவனிக்க வைத்துள்ளது. 2011-ம் ஐ.பி.எஸ்ஸாக இந்திய சிவில் சர்வீஸில் காலடி எடுத்த... மேலும் பார்க்க

Annamalai: `கர்நாடக சிங்கம் - விவசாயி - பாஜக - தனிக்கட்சி.!' - அண்ணாமலை கடந்து வந்த பாதை! | Timeline

ஐ.பி.எஸ் வேலையை விட்டு விவசாயத்தில் கவனம் செலுத்திய சாதாரண விவசாயி தமிழ்நாட்டு மக்களுக்கு அறிமுகமானவர் அண்ணாமலை. அதைத் தொடர்ந்து அவரின் அரசியல் தொடர்பான கருத்துகள் மூலம் தனக்கென செல்வாக்கை வளர்த்துக்க... மேலும் பார்க்க