செய்திகள் :

மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு வழக்கு; முன்னாள் மண்டலத் தலைவரின் கணவர் கைது

post image

மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள வணிக கட்டிடங்கள் நிறுவனங்கள், மண்டபங்கள், விடுதிகள், மருத்துவமனைகள் மற்றும் வீடுகளுக்கான சொத்து வரி வசூல் தொடர்பாக 2022 முதல் 2024 ஜூலை 31 வரையிலான காலக்கட்டத்தில் ஆய்வு நடத்தியபோது அதிகாரிகளின் பாஸ்வேர்டுகளை முறைகேடாகப் பயன்படுத்தி வரி முறைகேடு செய்தது ஆய்வில் தெரியவந்தது.

இந்த வழக்கானது மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த முறைகேடு எதிரொலியாக மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் மற்றும் நகரமைப்புக் குழு, வரிவிதிப்புக் குழுத் தலைவர்கள் ஆகிய 7 பேர் தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர்.

இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி டிஐஜி அபிநவ்குமார் தலைமையிலான சிறப்புப் படை  விசாரணை நடத்தி வந்தனர்.

இதையடுத்து  மாநகராட்சி வரி முறைகேடு வழக்கில் மேயரின் கணவர் பொன்.வசந்த், மாநகராட்சி வரிவிதிப்பு குழுத் தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன், ஒப்பந்த ஊழியர்கள், உதவி ஆணையாளர் என  மொத்தமாக 26 பேர் கைது செய்யப்பட்டனர்

மண்டல தலைவர் புவனேஸ்வரி, அவருடைய கணவர் சரவணன்

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் முன்னாள் மண்டலத்தலைவர் புவனேஸ்வரியின் கணவர் சரவணனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துச் சென்றனர்

காலை 8 மணி முதல் 7 மணி நேரமாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக சரவணனை அழைத்துச் சென்றபோது வாகனத்தில் ஏற்றும்போது திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

``வாலில் தீப்பற்றிய குரங்குக் கூட்டம் போல அமைச்சரவை..." - தவெக அரசை சாடும் ஸ்டாலின்!

வாலில் தீப்பற்றிய குரங்குக் கூட்டம் வனமெல்லாம் தாவி, கொளுத்தி விடுவதைப் போலத்தான் த.வெ.க. அரசின் அமைச்சரவை அமைந்திருக்கிறது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். தவெக அரசின் நிர்வாகம் குறித்த... மேலும் பார்க்க

இந்தியாவிலேயே பணவீக்கத்தில் 'தமிழ்நாடு' முதலிடம்; ஏன் தமிழ்நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து உயருகிறது?

நேற்று முன்தினம் (அக்டோபர் 12), மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதத்திற்கான நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) அறிக்கையை வெளியிட்டது.அந்த அறிக்கையின்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் 4.83 சதவிகிதமாக இருந்த இந்தியாவி... மேலும் பார்க்க

சிறையில் சிஜேபி தலைவர்கள்: ``துணிவிருந்தால் எமெர்ஜென்ஸியை அமல்படுத்துங்கள் மோடி" - அபிஜித் ஆவேசம்

டெல்லி ஜந்தர் மந்தரில் தடையை மீறிப் போராட்டத்தில் ஈடுபட்டு, காவல்துறையினரின் பணியைத் தடுக்க முயன்றதாகக் கரப்பான் பூச்சி ஜனதா கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.இந்தியத் தலைமைத் தேர்தல் ஆண... மேலும் பார்க்க

“எல்.முருகனை நீக்கிய மோடி; மத்திய அமைச்சரவையில் தமிழர் யாரும் இல்லை” - பிரவீண் சக்கரவர்த்தி சாடல்

நேற்று மத்திய இணை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன்.தன்னுடைய தொகுதிக்குத் தொண்டாற்றுவதற்கும், தமிழ்நாடு பாஜக-வை வலுப்படுத்தவும் இந்த ராஜினாமா என்று தனது ராஜினாமாக் கடிதத்தில் எல்.முருகன் க... மேலும் பார்க்க

"மோடியும், ஷாவும் பயப்படும் காலம் இது" - ராகுல் காந்தி தேநீர் விருந்தில் இந்தியா கூட்டணி தலைவர்கள்!

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்... சிறப்பு தீவிர திருத்தத்தில் (SIR) முறைகேடு நடந்துள்ளது என்று இந்தியா கூட்டணி தொடர்ந்து போராட்டத்தையும், எதிர்ப்புக் குரலையும் முன்னெடு... மேலும் பார்க்க