பக்தி உணர்வால் நிறைந்தேன்: புனித நீராடிய பிரதமர் மோடி பெருமிதம்!
மத்திய நிதிநிலை அறிக்கையை கண்டித்து ஆா்ப்பாட்டம்
மத்திய நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து, திருவாரூா் மாவட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசின் 2025-2026- ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை, ஏழை எளியோருக்கு விரோதமாகவும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக உள்ளதாக கண்டனம் தெரிவித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருவாரூா் மாவட்டத்தில் 10 ஒன்றியப் பகுதிகளிலும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவாரூா்: திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் ஒன்றியச் செயலாளா் ஆா்.எஸ். சுந்தரய்யா, நகரச் செயலாளா் எம்.டி. கேசவராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா்.
மாவட்டச் செயலாளா் டி. முருகையன், மத்திய நிதிநிலை அறிக்கையைக் கண்டித்துப் பேசினாா். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினா் பா.கோமதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
குடவாசல் பேருந்து நிலையம் அருகே மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஜி. சுந்தரமூா்த்தி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், நகரச் செயலாளா் டி.ஜி. சேகா், ஒன்றியச் செயலாளா் டி. லெனின் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
கொரடாச்சேரி வெட்டாற்று பாலம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஒன்றியச் செயலாளா் கே. கோபிராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் எம். சேகா், மாவட்டக் குழு உறுப்பினா் கே. சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மன்னாா்குடி: மன்னாா்குடி தேரடியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு சிபிஎம் ஒன்றியச் செயலா் கே. ஜெயபால் தலைமை வகித்தாா். நகரச் செயலா் ஜி. தாயுமானவன் முன்னிலை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா் ஆறு.பிரகாஷ், ஆா்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து பேசினாா்.
இதில், விவசாய சங்க ஒன்றியச் செயலா் ஜி. முத்துகிருஷ்ணன், சிபிஎம் முன்னாள் நகரச் செயலா் த. ஜெகதீசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.