செய்திகள் :

மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் விபரீதம்: செல்ஃபி எடுப்பதாகக் கூறி, மகளை ஆற்றில் வீசிய தந்தை!

post image

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா அருகில் உள்ள கிராமத்தில் வசிப்பவர் ரிங்கு. இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு ஒரு வயதில் ஒரு மகள் இருக்கிறாள். கணவன் மனைவி ஆகிய இரண்டு பேரும் தங்களது மகளுடன் ஆக்ராவை சுற்றிப்பார்க்க செல்ல முடிவு செய்தனர். அவர்கள் இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றனர். வழியில் கணவன் மனைவி இடையே ஏதோ பிரச்னையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்திற்கு இடையே இரு சக்கர வாகனம் யமுனை ஆற்றுப்பாலத்திற்கு வந்தது. உடனே ஆற்றுப்பாலத்தில் ரிங்கு தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தினார்.

தனது மனைவியிடம் மகளுடன் சேர்ந்து செல்ஃபி எடுக்கப்போவதாக கூறி மகளை அழைத்துக்கொண்டு ஆற்றுப்பாலத்தில் பொதுமக்கள் நடந்து செல்வதற்காக கட்டப்பட்டு இருந்த பகுதி வழியாக ரிங்கு நடந்து சென்றார்.

அங்கிருந்து தனது மகளுடன் செல்ஃபியும் எடுத்துக்கொண்டார். ஆனால் அதன் பிறகு என்ன நினைத்தார் என்று தெரியவில்லை. திடீரென ரிங்கு தனது கையில் இருந்த மகளை ஆற்றில் வீசி விட்டார்.

இதனை சற்று தூரத்தில் நின்று பார்த்துக்கொண்டிருந்த லட்சுமி ஓடி வந்து தனது கணவனுடன் சண்டையிட்டார். ஆனால் லட்சுமியையும் ரிங்கு ஆற்றில் தள்ளிவிட முயன்றார். ஆனால் அவரிடமிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு தனது குழந்தையை காப்பாற்றும்படி அப்பகுதி வழியாக வந்தவர்களிடம் லட்சுமி கேட்டுக்கொண்டார். அந்த வழியாக வந்தவர்கள் ரிங்குவை அடித்து உதைத்து போலீஸில் ஒப்படைத்தனர்.

போலீஸார் தீயணைப்பு துறையின் உதவியோடு ஆற்றில் குழந்தையை தேட ஆரம்பித்தனர். நீண்ட நேரம் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. இது குறித்து ரிங்கு மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ஆட்டை தேடிவந்த மலை பாம்பு; பிடித்து கழுத்தில் மாலையாக போட்டுக்கொண்டு போதையில் விளையாடிய மதுப்பிரியர்

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பாரபங்கி என்ற இடத்தில் 15 அடி நீளமுள்ள பெரிய பாம்பு ஒன்று அங்கிருந்த இறைச்சிக்கடைக்குள் நுழைந்தது. அந்த பாம்பு அங்கு நின்று கொண்டிருந்த ஆடு ஒன்றை கடித்து விழுங்குவதற்காக ஆட்ட... மேலும் பார்க்க

` திருமணம் ஆகாத இளைஞர்கள் மது குடிக்க தடை; மீறினால் அபராதம்' - நல்வழிப்படுத்தும் முன்மாதிரி கிராமம்

இன்றைய இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் மதுக்குடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகின்றனர். இதனால் அவர்களது வாழ்க்கை வளர்ச்சியடையாமல் பாதிப்பை சந்திக்கிறது. பலரது வாழ்க்கை மதுப்பழக்கத்தால் சீரழிகிறது. இப்போதுள்ள ... மேலும் பார்க்க

வீரர்கள் தற்கொலை முயற்சி; ஆபிரகாம் லிங்கனுக்கு ஓய்வு கொடுக்க வரும் ஜார்ஜ் வாஷிங்டன் போர்க்கப்பல்!

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி இறுதியில் தாக்குதல் நடத்த தொடங்கின. இத்தாக்குதல் தொடங்கிய நாளில் இருந்து அமெரிக்காவின் அதிகமான போர்க்கப்பல்கள் மத்திய கிழக்கு ஆசிய பகுதியில் நிறுத்தி... மேலும் பார்க்க

பெற்றோரை வீட்டை விட்டு துரத்திய மகன்: சகோதரிகளிடம் சொத்தை அபரிக்க இறந்த தந்தை கைரேகையை எடுத்த மகன்

பெற்றோர் இறந்த பிறகு குடும்ப சொத்தை பிரித்துக்கொள்வதில் சகோதரன், சகோதரிகளிடையே தொடர்ந்து மோதல் இருந்து கொண்டேதான் இருக்கிறது. அதுவும் மகள்களுக்கும் பெற்றோரின் சொத்தில் சம பங்கு இருக்கிறது என்று அறிவித... மேலும் பார்க்க

சூரியகாந்தி மலர்களால் மிளிரும் சுந்தரபாண்டியபுரம் – தென்காசியின் புதிய செல்ஃபி சுற்றுலாத் தலம்!

மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் மாவட்டமாகத் திகழ்கிறது தென்காசி. இயற்கையும் ஆன்மிகமும் இணைந்த சுற்றுலாத் தலங்கள் மாவட்டத்தில் நிரம்பி உள்ளன. குற்றாலம் அருவிகள், காசி விசு... மேலும் பார்க்க

கப்பலில் 250 நாள்கள் பணி: மன அழுத்தத்தில் கடலில் குதித்து தற்கொலைக்கு முயலும் அமெரிக்க படைவீரர்கள்?

கடந்த பிப்ரவரி மாதம் ஈரானுக்கு எதிரான போரை அமெரிக்கா தொடங்கியது. ஆனால் அதற்கு முன்பே அமெரிக்க போர்க்கப்பல்கள் வளைகுடா கடற்பகுதியில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டுவிட்டன. தற்போது போர் நடக்கவில்லை என்றாலும... மேலும் பார்க்க