செய்திகள் :

மரணத்தை வென்ற மனிதம்; விற்று தீர்ந்த 50 டன் சர்க்கரைக் கிழங்கு - மனைவி உயிர்காத்த கணவனின் போராட்டம்!

post image

ஒரு தனிமனிதனின் துயரம் எப்படி ஒரு சமூகத்தின் கூட்டு முயற்சியாக மாறி, ஓர் உயிரைக் காப்பாற்றியது என்பதற்கு, சீனாவில் நடந்த இந்த உண்மைச் சம்பவம் ஒரு மிகச்சிறந்த உதாரணம்.

தன் மனைவியின் உயிரைக் காக்கப் போராடிய ஜா சாங்லாங் (Zha Changlong) என்பவருக்கு, 50 டன் சர்க்கரைவள்ளிக் கிழங்குகள் எப்படி வரப்பிரசாதமாக அமைந்தன என்பதைப் பார்ப்போம்.

சீனாவின் ஷான்டாங் மாகாணத்தைச் சேர்ந்த ஜா சாங்லாங் மற்றும் யான் யிங் தம்பதியினர் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். ஆனால், யான் யிங்கிற்கு ஏற்பட்ட ரத்தப் புற்றுநோய் (Acute Leukemia) அவர்கள் வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றியது. அவரது முதற்கட்ட சிகிச்சைக்காக ஜா தன்னிடம் இருந்த அனைத்தையும் செலவு செய்தார். ஆனாலும், எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய அதிக அளவு பணம் தேவைப்பட்டது. கையில் பணமின்றி, செய்வதறியாது திகைத்த ஜா, "என் மகளுக்குத் தன் தாயின் அன்பு கிடைக்க வேண்டும். அவளைக் காப்பாற்ற உதவி செய்யுங்கள்" என்று கண்ணீருடன் சமூக வலைதளங்களில் வேண்டுகோள் விடுத்தார்.

மனைவி உயிர்காத்த கணவனின் போராட்டம்!

ஜாவின் நிலைமையை அறிந்த 'ஃபாங்' என்ற கொடையாளர், அவருக்கு உதவ முன்வந்தார். ஆனால் அவர் பணமாகத் தராமல், சுமார் 50 டன் சர்க்கரைவள்ளிக் கிழங்குகளை ஜாவிற்கு வழங்கினார். "இதை விற்று உன் மனைவியின் மருத்துவச் செலவுக்குப் பயன்படுத்திக்கொள்" என்று அவர் கூறியபோது, 50,000 கிலோ கிழங்குகளை எப்படி விற்பது என்ற சவால் ஜா முன் எழுந்தது.

இந்தச் செய்தி ஊடகங்களில் வெளியானதும், ஜினான் (Jinan) நகரின் மக்கள் மனிதாபிமானத்துடன் ஒன்று திரண்டனர். தன்னார்வலர்கள், மாணவர்கள் எனப் பலரும் ஜாவிற்கு உதவ முன்வந்தனர். வெறும் சில நாள்களில் 50 டன் கிழங்குகளும் விற்றுத் தீர்ந்தன. பலர் சந்தை விலையை விட அதிகப் பணம் கொடுத்து கிழங்குகளை வாங்கினர். இதன் மூலம் சுமார் 1.8 கோடி ரூபாய் (இந்திய மதிப்பில்) நிதி திரட்டப்பட்டது. இது அவரின் மனைவியின் அறுவை சிகிச்சைக்குத் தேவையான தொகையை விட அதிகமாக இருந்தது.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு தன் மனைவியின் உயிரைக் காப்பாற்றிய ஜா, தன்னிடம் இருந்த உபரிப் பணத்தை, கஷ்டப்படும் மற்ற புற்றுநோய் நோயாளிகளுக்குத் தானமாக வழங்கினார். "அன்பு என்பது பகிரப்படும்போது தான் முழுமையடைகிறது" என்பதை நிரூபித்த இந்தச் சம்பவம், இன்றும் பலருக்கு நம்பிக்கையூட்டும் கதையாகத் திகழ்கிறது.

மகாராஷ்டிரா: தங்கையைக் கடித்து இழுத்துச் சென்ற சிறுத்தைப்புலி; போராடிக் காப்பாற்றிய 11 வயது சிறுவன்!

மகாராஷ்டிரா மாநிலம் சாங்கிலி மாவட்டத்தில் உள்ள ஷிராலே அருகில் இருக்கும் உப்வாலே என்ற கிராமத்தில் வசித்து வருபவர் சங்கராம் பாட்டீல். இவருக்கு சிவம் (11) மற்றும் ஸ்வர்வாஞ்சலி (9) ஆகிய இரண்டு குழந்தைகள் ... மேலும் பார்க்க

மும்பை: வெற்றி பெற்ற ஒரேமாதத்தில் அடியோடு பாஜக-வில் சேர்ந்த 12 காங்கிரஸ் கவுன்சிலர்கள்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது படிப்படியாக உள்ளாட்சி தேர்தல் நடந்து வருகிறது. இதில் முதல் கட்டமாக நகராட்சிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மும்பை அருகில் உள்ள அம்பர்நாத் நகராட்சியில் பா.ஜ.க தனித... மேலும் பார்க்க

குஜராத் : காந்தி நகர் சபர்மதி ஆற்றங்கரையோரம் 6 ஏக்கரில் புதிய நகரை உருவாக்கும் நடிகர் அமிதாப்பச்சன்!

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் ஒரு நேரத்தில் கடுமையான கடனில் சிக்கித்தவித்தார். ஆனால் இப்போது கடுமையாக உழைத்து கடனில் இருந்து மீண்டு பல்வேறு விதமான தொழிலில் முதலீடு செய்து வருகிறார். அமிதாப்பச்சன் அதிக... மேலும் பார்க்க

`135 கிலோவில் இருந்து 89 கிலோவாக குறைந்துவிட்டேன்' - அமைச்சர் நிதின் கட்கரி சொல்லும் ரகசியம்!

மத்திய சாலைபோக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி எப்போதும் தான் உண்டு தனது வேலை உண்டு என்று இருப்பவர். நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்துவதில் தீவிர கவனம் செலுத்தி வரும் நிதின... மேலும் பார்க்க

10 பெண் குழந்தைகளுக்குப் பிறகு ஒரு ஆண் குழந்தை; மகள்களின் பெயர்களை தந்தை மறந்து தவித்த வீடியோ வைரல்!

ஹரியானாவில் ஒரு தம்பதிக்குத் தொடர்ச்சியாக 10 பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. அங்குள்ள ஜிந்த் மாவட்டத்தில் இருக்கும் உஷனா என்ற இடத்தைச் சேர்ந்தவர் சஞ்சய் குமார்(38). இவருக்குத் திருமணமாகி 19 ஆண்டுகள் ஆகின... மேலும் பார்க்க

Maduro: புட்டபர்த்தி சத்ய சாய்பாபாவின் பக்தர்; இந்தியாவுடனான வெனிசுலா அதிபரின் ஆன்மிக தொடர்பு!

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவர் மனைவி சிலியா புளோரஸ் தம்பதியை அமெரிக்க படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தி சிறைபிடித்துச் சென்றுள்ளன. தற்போது இருவரும் அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்... மேலும் பார்க்க