செய்திகள் :

`மராத்தி மொழி கட்டாயம் கத்துக்கணும்' - ஆட்டோ, டாக்சி டிரைவர்களுக்கு கெடு நீட்டிப்பு!

post image

மகாராஷ்டிராவில் மும்மை, புனே, நாசிக், நாக்பூர் போன்ற பகுதியில் ஆயிரக்கணக்கான ஆட்டோ மற்றும் டாக்சி டிரைவர்கள் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். இவர்கள் மராத்தி இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து மே ஒன்றாம் தேதியில் இருந்து ஆட்டோ மற்றும் டாக்சி டிரைவர்களின் மராத்தி திறன் சோதிக்கப்படும் என்றும், மராத்தி தெரியாத ஆட்டோ மற்றும் டாக்சி டிரைவர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்றும் மாநில போக்குவரத்து துறை சர்நாயக் தெரிவித்து இருந்தார். இதனால் ஆட்டோ மற்றும் டாக்சி டிரைவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதோடு மராத்தி தெரியாத ஆட்டோ மற்றும் டாக்சி டிரைவர்கள் தாக்குதலுக்கு உள்ளானார்கள். இதனால் ஆட்டோ மற்றும் டாக்சி டிரைவர்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டனர்.

மேலும் அரசின் நடவடிக்கைக்கு பயந்து அதிகமான வெளிமாநில ஆட்டோ மற்றும் டாக்சி டிரைவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆரம்பித்தனர். இதையடுத்து டாக்சி மற்றும் ஆட்டோ யூனியனுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை தள்ளி வைக்கும்படி கேட்டுக்கொண்டது.

மேலும் இவ்விவகாரத்தில் மாநில அரசு இறங்கி வந்திருக்கிறது. பொதுபோக்குவரத்துகளான ஆட்டோ மற்றும் டாக்சி டிரைவர்கள் மராத்தி கற்றுக்கொள்வதற்கான காலக்கெடுவை ஆகஸ்ட் 15ம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டு இருக்கிறது. இது குறித்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அளித்த பேட்டியில்,''மகாராஷ்டிராவில் வசிக்கும் அனைவரும் கட்டாயம் மராத்தி கற்றுக்கொள்ள வேண்டும். இம்மொழியைக் கற்றுக்கொள்ள முயல்பவர்கள் வரவேற்கப்படுகிறார்கள். இன்னும் இம்மொழி அறியாதவர்களுக்கு நாங்கள் கற்றுக்கொடுப்போம். மொழியின் பெயரில் வன்முறையில் ஈடுபடுவதோ அல்லது ஒருவருக்கு அந்த மொழி தெரியவில்லை என்பதற்காக அவரைத் தாக்குவதோ எங்கள் கலாச்சாரத்தின் ஒரு பகுதியல்ல.

இதை நாங்கள் துளியும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். மராத்தி மொழி அழகானது. கற்றுக்கொள்வதற்கு மிகவும் எளிமையானது. எனவே மகாராஷ்டிராவில் வசிக்கும் அனைவரும் மராத்தியை கற்றுக்கொள்ளமுன்வரவேண்டும்' 'என்று தெரிவித்தார். முன்னதாக தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிரா தினமான இன்று மகாராஷ்டிரா உருவாக தங்களது உயிரை தியாகம் செய்தவர்கள் நினைவாக கட்டப்பட்டுள்ள நினைவகத்திற்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் நடந்த மகாராஷ்டிரா தின நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

பெண்களின் பாதுகாப்பை அறிய மஃப்டியில் நின்ற பெண் கமிஷனர்; ஒழுங்கீனமாக நடக்க முயன்று சிக்கிய ஆண்கள்

இரவு நேரங்களில் தனியாகப் பயணம் செய்யும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்ற கருத்து நிலவி வருகிறது. அதனை தெரிந்து கொள்ள ஐதராபாத்தில் உள்ள தில்சுக் நகர் பேருந்து நிலையத்தில் நள்ளிரவு நேரத்தில் பெண் போல... மேலும் பார்க்க

Anand Mahindra: `வரலாற்றை மாற்றிய ஒரு வாக்கு' - ஆனந்த் மஹிந்திரா வியந்த திருப்பத்தூர் தேர்தல் களம்!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் இந்த முறை முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான போட்டி நிலவியது. தமிழகத்தின் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த தி.மு.க-வின் மூத்த நிர்வாகி கே.ஆர்... மேலும் பார்க்க

மும்பை: மாமரத்தில் விளைந்த சீதாப்பழம்? வைரலாகும் வீடியோ; ஆராய்ச்சியாளர் சொல்வது என்ன?

மும்பை அருகே மாமரம் ஒன்றில் சீதாப்பழம் விளைந்திருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மும்பை அருகில் இருக்கும் பிவண்டி என்ற இடத்தைச் சேர்ந்தவர் ஜெயேஷ் பாட்டீல். இவர் மளிகைக்கடை வைத்தி... மேலும் பார்க்க

சொல்லியடித்த சுவேந்து; சறுக்கிய மம்தா - மேற்கு வங்கத்தில் பாஜக முந்தியது எப்படி?

மேற்கு வங்க சட்டமன்றத்திற்கு இரண்டு கட்டமாக நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. காலையில் இருந்தே பா.ஜ.கவும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் தொடர்ந்து ஒன்றையொன்று முந்திக்கொண்டிருந்தது... மேலும் பார்க்க

`குருவை மிஞ்சிய சிஷ்யன்' - மம்தாவிடம் அரசியல் பயின்று அவரையே வென்று முதல்வராகும் சுவந்து அதிகாரி?

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் ஆரம்பத்தில் இருந்தே கடும் சர்ச்சைக்குறியதாக இருந்தது. வாக்காளர் சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டதற்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மொத்தம் ... மேலும் பார்க்க

மும்பை: பூங்காவில் 9 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்; உதவி போலீஸ் கமிஷனர் கைது; என்ன நடந்தது?

மும்பை ஒர்லி பகுதியில் இருக்கும் பூங்காவில் 9 வயது சிறுமி விளையாடிக்கொண்டிருந்தாள். அங்கு வந்த 56 வயது உதவி போலீஸ் கமிஷனர் பூங்காவில் யாரும் இல்லாததைத் தெரிந்து கொண்டு சிறுமியிடம் சென்றார். அவர் அச்சி... மேலும் பார்க்க