செய்திகள் :

"மருத்துவத்துறையைத் தனியார்மயமாக்கும் செயல்" - தவெக அரசைச் சாடும் சீமான்; பின்னணி என்ன?

post image

அரசு மருத்துவமனைகளைத் தரம் உயர்த்துவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, மருத்துவத்துறையில் தனியார்மயத்தை ஊக்குவிப்பதா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``புதிதாக 8,000 மருத்துவமனைகளைத் திறப்பதற்கு இணையம் வாயிலாக விண்ணப்பித்தாலே தற்காலிக அனுமதி வழங்கப்படும் எனும் தவெக அரசின் அறிவுப்பு அதிர்ச்சியளிக்கிறது.

அரசு மருத்துவமனை
அரசு மருத்துவமனை

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களைத் தரம் உயர்த்துவோம் எனவும், கிராமப்புற மருத்துவமனைகளை நவீனமாக்குவோம் எனவும் தேர்தலில் வாக்குறுதியளித்துவிட்டு, இப்போது மருத்துவத்துறையில் கண்மூடித்தனமாகத் தனியார்மயத்தை ஊக்குவிக்கும் அரசின் செயல்பாடு வாக்குச் செலுத்தி ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த மக்களுக்குச் செய்யும் சனநாயகத் துரோகமாகும்.

தனியார் முதலாளிகளின் இலாபவெறிக்கு மருத்துவத்துறையைத் தாரைவார்த்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

இணையம் வாயிலாக விண்ணப்பித்தாலே தற்காலிக அனுமதி வழங்கப்படும் எனவும், ஆய்வுக்குப் பிறகு, நிரந்தர அனுமதி வழங்கப்படும் எனவும் கூறப்பட்டிருப்பது மருத்துவத்துறையில் சீர்கேடுகள் பெருகவே வழிவகுக்கும்.

அரசு மருத்துவமனைகளின் குறைபாடுகளையும், போதாமைகளையும், சிக்கல்களையும் தீர்த்து, அவற்றைத் தரம் வாய்ந்ததாக மாற்ற முயற்சி எடுக்காது, 8,000 தனியார் மருத்துவமனைகளுக்கு இப்போது எதற்கு திடீர் அனுமதி?

ஏன் இந்த அவசரகதியிலான ஏற்பாடு? யாரைத் திருப்திப்படுத்த நடக்கிறது? யாருக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்காக இந்தத் தான்தோன்றித்தனமான அனுமதியும், உள்நுழையும்?

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசும், மாநிலத்தை ஆண்ட முந்தைய திமுக, அதிமுக அரசுகளும் தனியார்மயத்தை அரசின் நிர்வாகக்கொள்கை முடிவாகக் கொண்டதையே தவெக அரசும் அடியொற்றுமென்றால், எங்கிருக்கிறது மாற்று அரசியல்?

எங்கிருக்கிறது மக்களுக்கான ஆட்சி? வெட்கக்கேடு! ஆகவே, மருத்துவத்துறையைத் தனியார்மயமாக்கும் செயலைக் கைவிட்டு, அரசு மருத்துவமனைகளையும், ஆரம்ப சுகாதார நிலையங்களையும் தரம்உயர்த்தி, அனைவருக்கும் தரமான மருத்துவச் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

’மின்வெட்டு ஏற்படுவதற்கு திமுகவே காரணம்’ – அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு

கோவை விமான நிலையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “மேட்டூர் அணையை பொறுத்தவரை நீர்பிடிப்பு பகுதிகளில் மழைக்குறைவாக இருக்கிறது. தண்ணீர் ... மேலும் பார்க்க

மநீம: `தேர்தல் முடிவுகளை தாங்கிக்கொள்ள முடியாமல் பழிகளைச் சுமத்திச் செல்கின்றனர்' - முரளி அப்பாஸ்

மக்கள் நீதி மய்யத்திலிருந்து சில மாநில நிர்வாகிகள் விலகியுள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முரளி அப்பாஸ், இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.அப்போது அவர், “தமிழகத்தில் தற்போது கட்ச... மேலும் பார்க்க

தர்மஸ்தலா கோயில் விவகாரம்: `இரண்டு நாள்களில் நானே நேரில் சொல்கிறேன்' - நடிகர் பிரகாஷ் ராஜ் விளக்கம்!

கர்நாடகா தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ளது தர்மஸ்தலா மஞ்சுநாத சுவாமி கோயில். "இந்தக் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் 1995-ம் ஆண்டிலிருந்து 2014-ம் ஆண்டு வரை, பல பெண்கள் மற்றும் மாணவிகளின் உடல்களை அடக்... மேலும் பார்க்க

`தவெக அரசு மக்களுக்கு விரோதமாகச் செயல்பட்டால், வீதியில் இறங்கிப் போராடுவோம்!' - சி.பி.எம் பேபி

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்று, தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையை உறுதி செ... மேலும் பார்க்க

'அமெரிக்கா தான் இந்தியாவை ரஷ்ய எண்ணெயை வாங்க சொன்னது; இங்கே நடிக்க வேண்டாம்'- ஜெய்சங்கர் 'நச்' பதில்

தற்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பின்லாந்து பயணத்தில் இருக்கிறார். பின்லாந்தில் நடந்த குழு விவாதத்தில் பத்திரிகையாளர் ஒருவர் ஜெய்சங்கரிடம், 'இந்தியா ரஷ்யாவிடம் அதிகமாக பரிவு காட்டுக... மேலும் பார்க்க