செய்திகள் :

மற்றொரு பாபர் மசூதி பிரச்னை உருவாகிவிடக் கூடாது: உயர்நீதிமன்றத்தில் அரசு பதில்!

post image

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மற்றொரு பாபர் மசூதி பிரச்னை உருவாகிவிடக் கூடாது என்பதற்காக போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தமிழக அரசு உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் பதிலளித்துள்ளது.

திருப்பரங்குன்றம் மலை குறித்து இருவேறு மதங்களைச் சோ்ந்தவா்கள் தங்கள் கருத்துகள், கோரிக்கைகளை சமூக வலைத் தளங்களில் பதிவேற்றம் செய்து வருவதால், இந்து அமைப்புகள் சாா்பில் திருப்பரங்குன்றம் கோயில் முன் செவ்வாய்க்கிழமை (பிப். 4) ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு காவல் துறை அனுமதி மறுத்துவிட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக, இரு வேறு மதத்தவரிடையே அசாதாரண சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு பி.என்.எஸ்.எஸ். சட்டப் பிரிவு 163, குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 144 ஆகியவற்றின் கீழ் மதுரை மாவட்டம், மாநகா்ப் பகுதிகளுக்கு தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இதையும் படிக்க : திருப்பரங்குன்றம் விவகாரம்: இந்து முன்னணியைச் சோ்ந்த 6 போ் கைது

இந்த நிலையில், தடை உத்தரவை ரத்து செய்து போராட்டத்துக்கு அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி இந்து அமைப்பு சார்பில் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையின் போது ஆஜராக தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், மதுரையில் மற்றொரு பாபர் மசூதி போன்ற சம்பவம் உருவாகிவிடக் கூடாது என்பதற்காக போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும், பிப். 11 வரை விழாக்காலம் என்பதால் இதுபோன்ற சூழலில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என்றும் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் பங்கேற்றால் சட்ட நடவடிக்கை என்பது சரியான முறை இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்தது.

மேலும், போராட்டம் எங்கு, எப்போது நடத்த அனுமதிக்கப்படும் என்று அரசிடம் கேட்டு பதிலளிக்குமாறு தெரிவித்த நீதிபதி, விசாரணையை பிற்பகலுக்கு ஒத்திவைத்தார்.

மருதமலை மலைப் பாதையில் வாகனங்களுக்குக் கட்டுப்பாடு!

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா பணிகள் நடைபெறவுள்ளதால், பக்தர்கள் வாகனங்களில் செல்வதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வ... மேலும் பார்க்க

வேலூர் மருத்துவர் பாலியல் வன்கொடுமை: சிறுவனுக்கு 20 ஆண்டுகள் சிறை

வேலூர்: வேலூரில் இரவில், ஆண் நண்பருடன் ஆட்டோவில் பயணித்த பெண் மருத்துவர் கடத்திச் செல்லப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சிறுவனுக்கு 20 ஆண்டுகள் சிறைத... மேலும் பார்க்க

ஃபென்ஜால் புயல்: விவசாயிகளுக்கு ரூ. 498.80 கோடி நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு!

ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ. 498.80 கோடி நிவாரணத் தொகையினை ஒதுக்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தர்மபு... மேலும் பார்க்க

ஏற்காடு கோடை விழா: 2 லட்சம் மலர் தொட்டிகள் அமைக்கும் பணி தீவிரம்!

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 48-வது மலர் கண்காட்சிக்கான ஆரம்ப பணிகளைத் தோட்டக்கலைத் துறையினர் தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் முக்கியமான இடங்களில் ஒன்றாக உள்ளது ஏற்காடு. இங்கு வரு... மேலும் பார்க்க

மீனவர்கள் உள்கட்டமைப்பு வசதி: ரூ. 360 கோடி ஒதுக்கீடு!

தங்கச்சிமடம் மீன் இறங்கு தளம் மீன்பிடி துறைமுகமாக தரம் உயர்த்துதல், குந்துகால் மீன் இறங்குதளத்தை தூண்டில் வளைவுடன் மேம்படுத்துதல் மற்றும் பாம்பன் வடக்கு மீனவ கிராமத்தில் தூண்டில் வளைவு அமைத்தல் ஆகிய உ... மேலும் பார்க்க

கோவையில் சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 7 மாணவர்கள் கைது!

கோவை: கோவையில் சமூக வலைத்தளத்தில் பேசிப் பழகி, சிறுமியை அறைக்கு வரவழைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில், கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கோவையில் தனியார் கல்லூரி மாணவர்... மேலும் பார்க்க