'டைம்' கொடுக்கும் ட்ரம்ப்; ஈரான் வழிக்கு வரவில்லையேல் உலக நாடுகளுக்கு பாதிப்புகள...
மஹிந்திரா தார்: `AI அட்டகாசத்துக்கு ஓர் அளவு இல்லையா?' பொய்யான விபத்தை உருவாக்கி வைரலாக்கியது யார்?
லேட்டஸ்ட்டாக சோஷியல் மீடியாக்களில் ஒரு வைரல் நியூஸ். பார்ப்பதற்குத் திகிலாகவும், சட்டெனப் பார்த்தால் ‛யாருக்கும் ஒண்ணும் ஆகிடலையே’ என்று பதைபதைக்கவும் தோன்றும் அந்த வீடியோவை பார்த்தால்.
மஹிந்திரா தார் ஜீப் ஒன்று, ஒரு தேசிய நெடுஞ்சாலையின் மீதுள்ள ஓவர்ஹெட் சைன் போர்டில் குத்திக் கிழித்துக் கொண்டு அந்தரத்தில் நிற்கிறது. ஆனால் விபத்து பற்றி எந்த ஒரு மீடியாக்களிலும் வராதபட்சத்தில், சோஷியல் மீடியாக்களில் மட்டும் இது வைரலானது எப்படி?

உற்றுப் பார்த்தால் சட்டெனக் கண்டுபிடித்து விடலாம். நிச்சயம் அது ஒரு AI சேட்டை என்று. Jaipur, Gurugram, Exit 22 என்று மேலே உள்ள ஊர்களின் பெயரெல்லாம் பக்காவாக இருந்தவுடன், ‛டெல்லிக்குப் பக்கத்துல நிஜமாகவே இப்படி ஒரு விபத்து நடந்திடுச்சோ’ என்று பதற்றமடையத் தோன்றுகிறது. இதை AI-ல் உருவாக்கம் செய்தவர், பக்காவான ப்ராம்ப்ட் கொடுத்து, பக்கத்தில் ஒரு ரேம்ப் கொண்ட ஒரு ட்ரக்கையும் நிறுத்தி வைத்து ரியலிஸ்ட்டிக்கான விபத்து என்று நம்ப வைத்திருக்கிறார். ஆனால், கார் நிலைகுலைந்து பாய்ந்து செல்லும்போது - ஆயில், பெட்ரோல் லீக்கேஜ் என்று எந்தத் தடங்களும் சாலையில் இல்லை என்பதும் தெரிகிறது.
உண்மையில், இந்த NH-48 - Exit-22 நெடுஞ்சாலையில் இப்படி எந்த ஒரு விபத்தும் பதிவாகவில்லை என்று டேட்டாக்கள் உறுதி செய்திருக்கின்றன.
Thars don’t ride, they fly, once a friend told me, today we all can see it https://t.co/kC06jJUAMq
— Keshav Lohia (@Keshav_Lohiaaa) February 19, 2026
ஹாலிவுட் படங்களில் வரும் காட்சிகளில்கூட இப்படி ஒரு ரியல் ஸ்டன்ட் செய்ய முடியாது என்பதான ஒரு புகைப்படம் அது. அந்த ஜீப், போர்டைக் கிழித்துக் கொண்டு நிற்கும்போது, வழக்கத்துக்கு மாறான பொசிஷனில் நிற்பதே அது பொய் என்றும் தெரிகிறது. பொதுவான விபத்துகளில், சாலையின் நடுவே இருக்கும் தடுப்புகளில் கார் இப்படி நிலைகுத்திப் பார்த்த சம்பவங்கள் உண்டுதான். ஆனால், இந்தச் சம்பவத்தில் 180 - 200 கிமீ-க்கு மேல் போனால்கூட இவ்வளவு உயரத்தில் கார் பறக்க முடியுமா என்பது சந்தேகம்தான்?
‛யாரும் நம்பாதீங்க’ என்று இது பற்றி மஹிந்திராவும் ஒரு மறுப்புச் செய்தி வெளியிட்டிருக்கிறது. இது போக செய்திகளின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்கும் Fact Checking வலைதளங்களில் இது குறித்து ஆராய்ந்த நம்பகத்தன்மை வாய்ந்த PTI செய்தி நிறுவனம், இது முற்றிலும் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று கூறியிருக்கிறது. இந்த வீடியோவை உருவாக்கி, சமூக வலைதளங்களில் முதலில் பரப்பிவிட்டது என்று யார் தேடி வருவதாகத் தகவல்!
AI புலிகளா… உங்க பாய்ச்சலுக்கு ஓர் அளவில்லையா?



















