செய்திகள் :

``மாணவர்களையும் போராட்டக்காரர்களையும் மத்திய அரசு மதிப்பதில்லை" - எம்.பி திருச்சி சிவா கண்டனம்

post image

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று முதல் ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று ராமர் கோயில் ஊழல் விவகாரம், நீட் வினாத்தாள் கசிவு, மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை முன்வைத்து அரசு பதிலளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.

இதனால் அவை தொடங்கியவுடன் முடங்கியது. அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் திமுக எம்.பி-கள் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய எம்.பி திருச்சி சிவா, ``மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சி எதிர்காலத்தில் தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கிவிடும் ஆபத்து கொண்டது. பாசனப் பயனீட்டாளர்களின் ஒப்புதல் இன்றி புதிய அணை கட்டக் கூடாது என்ற நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி அணை கட்ட முனைகிறது கர்நாடகா.

திருச்சி சிவா
திருச்சி சிவா

இப்பிரச்னைக்குத் தீர்வு காண நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ் அளித்தும், அவைத்தலைவர் அதற்கு அனுமதி வழங்கவில்லை.

சமீப காலமாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் மக்கள் சார்ந்த முக்கியப் பிரச்னைகளைக் காது கொடுத்துக் கேட்பதோ, அதற்கு விளக்கமளிப்பதோ முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டு வருகிறது. இதனால் நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறைகள் பெயரளவில் மட்டுமே செயல்படும் சூழல் உருவாகியுள்ளது.

இந்தியாவிலேயே முதன்முதலாக நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி குரல் கொடுத்தது திமுக-தான். 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையிலேயே சேர்க்கை நடக்க வேண்டும் என்ற நிலைப்பாடு தற்போது நாடு முழுவதும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசப்பட்டு, தடியடி நடத்தப்பட்ட சம்பவம் கண்டனத்திற்குரியது. மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்களை இந்த அரசு மதிப்பதில்லை என்பதையே இது காட்டுகிறது. வினாத்தாள் கசிவு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் உடனடியாகப் பதவி விலக வேண்டும். நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.

'அழைப்பு விடுக்கும் காக்ரோச்கள்' - தமிழகத்திலும் வெடிக்கும் போராட்டம்; ஹை அலர்ட்டில் உளவுத்துறை!

டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்து வரும் CJP கட்சியின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, தமிழகத்திலும் CJP கட்சியின் தொடர் முழக்க போராட்டத்தை தொடங்கியிருக்கின்றனர்.Cockroach Protestநீட் வினாத்தாள் கசிவுக்க... மேலும் பார்க்க

திமுக பொதுச்செயலாளராகிறாரா கனிமொழி? தகவலும் பின்னணியும்!

தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் லண்டன் சென்று திரும்பிய நிலையில், கட்சியின் மறுசீரமைப்புப் பணிகள் விரைவிலேயே தொடங்கும் என எதிர்பார்க்கிறார்கள் உடன்பிறப்புகள். மேலும் வயது மூப்பு காரணமாக பொதுச்செயலாளர் து... மேலும் பார்க்க

CJP: ``மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு பிரதமர் ஏன் இன்னும் அமைதிகாக்கிறார்" - ராகுல் காந்தி கேள்வி

நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளானது. இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசுத் தே... மேலும் பார்க்க

``முதல்வர் விஜய் எனக்கு ப்ராமிஸ் செய்திருக்கிறார்; அந்நாளுக்காக காத்திருக்கிறோம்!" - நடிகர் பிரபு

'நடிகர் திலகம்' பத்ம பூஷன் சிவாஜி கணேசன் நினைவு நாள் ஆண்டுதோறும் ஜூலை 21 அன்று அனுசரிக்கப்படுகிறது. 2001-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி காலமான நடிகர் திலகத்தின் நினைவைப் போற்றும் வகையில் சென்னை அடையாறில் மண... மேலும் பார்க்க

'எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைதுக்கு சபாநாயகரின் அனுமதி தேவையில்லை'-விதிகளை விளக்கிய ஜே.சி.டி. பிரபாகர்

விளாத்திகுளம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், சபாநாயகரின் முன் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என்று தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெளிவுபடுத்திய... மேலும் பார்க்க

உக்ரைன் மீதான தாக்குதலில் 4 இந்தியர்கள் உயிரிழப்பு - பெயரை குறிப்பிடாமல் ரஷ்யாவுக்கு இந்தியா கண்டனம்

ரஷ்யா - உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ரஷ்யா உக்ரைன் மீது நடத்திய தாக்குதலில் நான்கு இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய வெளியுறவு அமைச்சக... மேலும் பார்க்க