செய்திகள் :

"மாணிக்கம் தாக்கூர் சொன்னது அவருடைய சொந்தக் கருத்து; திமுக-வைத் தவிர..." - செல்வப்பெருந்தகை

post image

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம், தொகுதிப் பங்கீடு, கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளை கட்சிகள் தொடங்கிவிட்டன.

இதனிடையே தமிழ்நாட்டில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையிலான கூட்டணியில் கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாகத் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.

மாணிக்கம் தாகூர் எம். பி
மாணிக்கம் தாகூர் எம். பி

தவெக தலைவர் விஜய்யுடன் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி சந்திப்பு நடத்தினார். அதேபோல காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாக்கூர், "அதிகாரம் மட்டும் அல்ல – அதிகாரப் பகிர்வையும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று (ஜன.6) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப்பெருந்தகை காங்கிரஸ் கூட்டணி குறித்துப் பேசியிருக்கிறார்.

"இந்திய கூட்டணி வலிமையாக இருக்கிறது. இதை அசைத்துப் பார்ப்பதற்கு முயற்சிகள் நடக்கின்றன. ஆனால் யாராலும் அசைக்க முடியாது.

ஒவ்வொருவரும் கருத்து சொல்வதற்கு கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை எல்லாம் இருக்கிறது.

நான் ஒரு தலைவராக இருந்துகொண்டு பொதுவெளியில் பேச முடியாது. சீட் வேண்டும், நினைப்பது கிடைக்க வேண்டும் என்றால் கேட்க வேண்டியவர்களிடம் கேட்க வேண்டும். மீடியா முன்பு கேட்டால் கிடைக்குமா?

மாணிக்கம் தாக்கூர் எங்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர். அதிகாரப் பகிர்வு தொடர்பாக அவருடைய கருத்தை அவர் சொல்லியிருக்கிறார்.

காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை
காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை

எங்களைப் பொறுத்தவரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமை தெளிவாக இருக்கிறது.

நாங்கள் தி.மு.க-வைத் தவிர எந்தக் கட்சியுடனும் கூட்டணி பேசவில்லை. ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ஸ்டாலின் ஆகியோர் கூட்டணி குறித்துப் பார்த்துக்கொள்வார்கள்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்குத் தேவையான இடங்களை நாகரிகமாகக் கேட்டுப் பெறுவோம்" என்று தெரிவித்திருக்கிறார்.

சறுக்கிய தமிழ் வேட்பாளர்கள்; 5 முறை கவுன்சிலராக இருந்த ரவி ராஜா, மாரியம்மாள் தாராவியில் தோல்வி!

மும்பை மாநகராட்சி தேர்தலில் தாராவியில் உள்ள 185வது வார்டில் பா.ஜ.க சார்பாக ரவி ராஜா போட்டியிட்டார். ரவி ராஜா இதற்கு முன்பு 5 முறை காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு மும்பை மாநகராட்சியில் கவுன்சிலராக இருந்... மேலும் பார்க்க

Iran: 9 வயதில் ஈரானிலிருந்து வெளியேற்றம்; ஈரானின் கடைசி ஷாவின் மகளான லெய்லா பஹ்லவியின் சோக கதை!

ஈரானில் தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு மத்தியில், இளவரசர் ரெசா பஹ்லவி மீண்டும் பரபரப்பான செய்தியாக மாறியிருக்கிறார். ஆயத்துல்லா கமேனி தலைமையிலான ஆட்சிக்கு எதிராக ஈரானியர்கள், நாட்டில் மீண்டு... மேலும் பார்க்க

புனே: `பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தும் பயனில்லை' - பவார் குடும்பத்திடமிருந்து கைநழுவிப்போன கோட்டை!

மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த மாநகராட்சி தேர்தலில் கடந்த 2023-ம் ஆண்டு இரண்டாக பிரிந்த தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டும் இணைந்து புனே மற்றும் அதன் அருகில் உள்ள பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சி தேர்த... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா மாநகராட்சி தேர்தலில் எதிர்கட்சிகளுக்கு பெரும் பின்னடைவு: பாஜக-வுக்கு வரலாறு காணாத வெற்றி

மகாராஷ்டிராவில் மும்பை உட்பட 29 மாநகராட்சிகளுக்கு நேற்று நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. மும்பையில் ஏற்கனவே பா.ஜ.கவும், சிவசேனா(ஷிண்டே)வும் இணைந்து ஆட்சியை பிடித்துள்ள நிலையில் மா... மேலும் பார்க்க

சுவாச நோய்களால் 9,211 பேர் உயிரிழப்பு; டெல்லி அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

2024-ஆம் ஆண்டில் மட்டும் சுவாச நோய்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தைக் கடந்திருப்பதாக டெல்லி அரசு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு பொதுமக்களின... மேலும் பார்க்க

கோட்டையை போராடி இழந்த உத்தவ்: ஷிண்டேயுடன் சேர்ந்து மும்பை மாநகராட்சியை கைப்பற்றிய பாஜக!

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் மும்பைதான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மும்பை மாநகராட்சி தேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவு... மேலும் பார்க்க