செய்திகள் :

`மாதக்கணக்கில் குப்பை அள்ளவில்லை; எல்லாம் ஓரளவுக்குத்தான்!' - போராட்டக் களத்தில் ஆளுங்கட்சி எம்எல்ஏ

post image

திருப்பூர் மாநகராட்சியில் குப்பை பிரச்னை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. மாநகரையொட்டிய, முதலிபாளையம் கிராமத்தில் கைவிடப்பட்ட கல்குவாரியில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது. அதற்கு அந்த கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததுடன், உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தனர். அதில், முதலிபாளையம் கல்குவாரியில் குப்பைகளைக் கொட்ட திருப்பூர் மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதைத் தொடர்ந்து, இடுவாய் ஊராட்சியில் மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் தற்போது குப்பைகள் கொட்டப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு வருகிறது. குப்பையை மேலாண்மை செய்வதற்கு போதிய இடவசதி இல்லாததால், மாநகரின் பல இடங்களிலும், சாலைகளின் ஓரத்திலும் குப்பைகள் தேங்கிக் கிடக்கும் அவலநிலை நீடித்து வருகிறது. இந்நிலையில், திருப்பூர் தெற்குத் தொகுதி திமுக எம்எல்ஏ-வான செல்வராஜ் குப்பைகளை மாநகராட்சி நிர்வாகம் அகற்றாததைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

போராட்டம்

இது குறித்து செல்வராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "திருப்பூர் மாநகராட்சி 55-ஆவது வார்டு பகுதியில் அமைந்துள்ள முத்தையன் கோயில் நகர் பகுதியில் ஒரு மாதத்துக்கும் மேலாகியும் குப்பைகள் கொட்டப்பட்டு, அள்ளப்படாமல் உள்ளது. பொதுமக்கள் என்னிடம் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து அங்கு நான் ஆய்வு செய்தபோது அதிகாரிகள் யாரும் வரவில்லை. எப்போது கேட்டாலும், `இன்று குப்பை பிரச்னை சரியாகிவிடும், நாளைக்கு சரியாகிவிடும்' என மாநகராட்சி நிர்வாகம் பொய்யான தகவலை பரப்பி வருகிறது. மாதக்கணக்கில் மாநகராட்சி நிர்வாகத்திடம் நானும் கூறிவந்தேன். ஆனால், நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை. பொறுத்து பொறுத்து பார்த்துவிட்டுத்தான் இந்த முடிவுக்கு வந்தேன். ஆளுங்கட்சிக்கு மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே போராட்டக் களத்துக்கு வந்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினர் என்றால் வீட்டில் படுத்து உறங்க முடியாது. இது மக்களுக்கான பிரச்னை. மக்களுடன்தான் நான் நிற்பேன்" என்றார்.

எம்.எல்.ஏ செல்வராஜின் போராட்டத்தை அடுத்து, ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் அங்கிருந்த குப்பைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். ஆளுங்கட்சி எம்.எல்.ஏ ஒருவரே மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டது, திருப்பூர் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சத்தியமங்கலம்: 42 தனியார் விடுதிகளுக்கு சீல்; வருவாய்த்துறையினர் நடவடிக்கை - பின்னணி என்ன?

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக தனியார் தங்கும் விடுதிகள் செயல்படுவதாகவும், இதன் காரணமாக சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகள் பாதிக்கப்படுவதாகவும் ஒல... மேலும் பார்க்க

``மதுரைக்கு ரூ.4,000; நெல்லைக்கு ரூ.4,500: ஆம்னிப் பேருந்துகளின் கட்டணக் கொள்ளை" - அன்புமணி காட்டம்!

தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட கொண்டாட்ட தினங்களில் நகரத்தில் வசிப்போர் அவரவரின் சொந்த ஊருக்குச் செல்வது வழக்கம். அதற்காக பேருந்துகளும், ரயில்களும் கூட்ட நெரிசலால் அலைமோதும். ஒரு மாதத்துக்கு முன்பே டிக்கெட... மேலும் பார்க்க

"காங்கிரஸ்தான் இந்தியைத் திணித்ததாம்; அதைத் திமுகதான் எதிர்த்ததாம்!" - திருச்சி வேலுசாமி காட்டம்!

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருச்சி வேலுசாமி 'பராசக்தி' திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் விஷயங்கள் குறித்து காட்டமாகப் பேசியிருக்கிறார். அப்படத்தில் காங்கிரஸ்தான் இந்தியைத் திணித்ததாம், அதைத் திமுகத... மேலும் பார்க்க

''இதுவொரு முக்கியமான மைல்கல்" - பிப்ரவரியில் பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை தொடங்க திட்டம்!

பூந்தமல்லி - வடபழனி இடையேயான மெட்ரோ பாதைதான் சென்னையில் முதல் இரட்டை அடுக்கு மேம்பால மெட்ரோ வழித்தடம். போரூர், காரம்பாக்கம், ஆலப்பாக்கம், வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர் ஆகிய ஐந்து மெட்ரோ நிலையங்கள் இந்... மேலும் பார்க்க

RBI: அமெரிக்காவை நம்பாத இந்தியா; தங்கம் பக்கம் ரூட்டை மாற்றுவது ஏன்?

இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவிகித வரி... அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் வீழ்ச்சி... தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு... என நம்மை சுற்றி பல பொருளாதார விஷயங்களும், மாற்றங்களும் நடந... மேலும் பார்க்க