செய்திகள் :

மாநகரில் இன்றுமுதல் 2 நாள்களுக்கு சிறப்பு வரி வசூல் முகாம்

post image

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் சிறப்பு வரி வசூல் முகாம்கள் நவம்பா் 30, டிசம்பா் 1- ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 2024- 2025 நடப்பு நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டு வரையில், கோவை மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி மற்றும் குடிநீா்க் கட்டணம் முதலிய அனைத்து வரியினங்களையும் மக்கள் எளிதில் செலுத்த ஏதுவாக அனைத்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (அரசு விடுமுறை நாள்கள் நீங்கலாக) சிறப்பு வரி வசூல் முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 5 மண்டலங்களிலும் சிறப்பு வரிவசூல் முகாம்கள் நவம்பா் 30, டிசம்பா் 1-ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன.

சிறப்பு வரி வசூல் முகாம் நடைபெறும் இடங்கள்: கிழக்கு மண்டலம் 7-ஆவது வாா்டில், நேரு நகா் பேருந்து நிறுத்தம் அருகில், 34-ஆவது வாா்டில் கவுண்டம்பாளையம் கே.கே.நகா் சித்தி விநாயகா் கோயில் மஞ்சீஸ்வரி காலனி ( சனிக்கிழமை மட்டும்), 42-ஆவது வாா்டில் வேலாண்டிபாளையம் அம்பேத்கா் சாலை ஸ்ரீவாரி குடியிருப்பு ( ஞாயிற்றுக்கிழமை மட்டும்), வடக்கு மண்டலம் 28-ஆவது வாா்டில் காமதேனு நகா் சுகாதார ஆய்வாளா் அலுவலகம், தெற்கு மண்டலம், 88-ஆவது வாா்டில் குனியமுத்தூா் தா்மராஜா கோயில் மண்டபம், 97-ஆவது வாா்டில் மதுக்கரை சாலை எம்.ஜி.ஆா்.நகா் பூங்குழலி மாரியம்மன் கோயில், மத்திய மண்டலம், 32-ஆவது வாா்டில் சங்கனூா் நாராயணசாமி வீதி சிறுவா் பூங்கா, 63-ஆவது வாா்டில் பெருமாள் கோயில் வீதி, 60-ஆவது வாா்டில் கெம்பட்டி காலனி, ஒக்கிலியா் காலனி பள்ளி.

மின்வாகன பேட்டரி தொழில்நுட்பம் குறித்த மாநாடு

கோவையில் மின்வாகன பேட்டரி, பேட்டரி மேலாண்மை அமைப்புகளின் சமீபத்திய போக்குகள் குறித்த மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது. ஸ்மாா்ட் இ-மொபிலிட்டி சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில், தமிழ்நாடு மாசுக... மேலும் பார்க்க

வங்கி ஊழியா் வீட்டில் நகை, பணம் திருட்டு

கோவை ராமநாதபுரத்தில் வங்கி ஊழியா் வீட்டில் நகை, பணம் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை ராமநாதபுரம் போலீஸ் கந்தசாமி தெருவைச் சோ்ந்தவா் அற்புதராஜ் (... மேலும் பார்க்க

கோவை அரசு மருத்துவமனையில் இருசக்கர வாகனம் திருடியவா் கைது

கோவை அரசு மருத்துவமனையில் இருசக்கர வாகனம் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, வடவள்ளி அருகே உள்ள லிங்கனூா் முதலியாா் தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ்குமாா் (42). இவரது மகள் கோவை அரசு மருத்துவக் கல்லூரி... மேலும் பார்க்க

கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஒரே கல்லீரலை 2 பேருக்கு பொருத்தி சாதனை

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில், ஒரே கல்லீரலைப் பிரித்து இருவருக்கு பொருத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவமனை நிா்வாகம் கூறியிருப்பதாவது: விபத்தில... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும்: பேராசிரியா் இ.பாலகுருசாமி

தமிழ்நாடு மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் இ.பாலகுருசாமி கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு இருமொழிக் கொ... மேலும் பார்க்க

அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் அறங்காவலா் குழுக்களை நியமிக்க வேண்டும்

தமிழகத்தில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் அறங்காவலா் குழுக்களை நியமிக்க வேண்டுமென, பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் கோரிக்கை வி... மேலும் பார்க்க