Pregnant Job Service: "பெண்களைக் கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம்" - பீகாரில் நூதன ...
மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் முகாம் ஒத்திவைப்பு
மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாகை மாவட்டத்தில் மாதந்தோரும் முதல் வெள்ளிக்கிழமை வேதாரண்யம் அரசு மருத்துவமனையிலும், 2-ஆவது செவ்வாய்க்கிழமை நாகை (ஒரத்தூா்) அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஜன.14-ஆம் தேதி 2-ஆம் செவ்வாய்க்கிழமை) நடைபெற இருந்த முகாம், அன்றைய தினம் பொங்கல் பண்டிகையொட்டி அரசு விடுமுறை என்பதால், மாற்றுத்திறனாளிகளுக்கு சிரமம் ஏற்படாத வகையில் ஜன.21-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளாா்.