ரூ.5 லட்சத்துடன் தில்லி முதல்வர் அலுவலக ஊழியர்கள் இருவர் கைது!
மாா்த்தாண்டம் அருகே செம்மண் கடத்திய 2 மினி லாரிகள் பறிமுதல்
மாா்த்தாண்டம் அருகே உரிய அனுமதியின்றி சட்ட விரோதமாக செம்மண் கடத்திய 2 மினி லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனா்.
மாா்த்தாண்டம் போலீஸாா் திங்கள்கிழமை வெங்கணம்கோடு பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அப்பகுதி வழியாக வந்த 2 மினி லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா்.
அதில் உரிய அனுமதியின்றி சட்ட விரோதமாக செம்மண் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, இரு வாகனங்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மினி லாரி ஓட்டுநா் பாகோடு பகுதியைச் சோ்ந்த அா்ஜுனன் மகன் லாடு பிளசிங் (38), தங்கமணி மகன் சிபின் (34) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.