செய்திகள் :

மின் கசிவுக்கு 2 குழந்தைகள் பலி: ``6 மாதத்துக்கு முன்பே புகார் அளித்தும்..." - சீமான் காட்டம்

post image

அச்சங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மோகன்–லதா தம்பதியின் 10 வயது மகள் நிறைமதி மற்றும் 6 வயது மகன் பால பிரவீன், செப்டம்பர் 30-ம் தேதி காலை குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மின்கசிவு இருப்பதாக அப்பகுதி இளைஞர்கள் மூலம் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பே வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``கமுதி அருகே அரசு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில், அதிகாரிகளின் அலட்சியத்தால் ஏற்பட்ட மின்கசிவில் சிக்கி பலியான 2 குழந்தைகளின் குடும்பத்துக்கு உரிய துயர் துடைப்பு உதவிகளை வழங்க வேண்டும்!

மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார்
மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார்

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் அச்சங்குளம் கிராமத்தில் தம்பி மோகன் - லதா இணையரின் 11 வயதான நிறைமதி என்ற பெண் குழந்தையும், 6 வயது பால பிரவீன் என்ற ஆண் குழந்தையும் கடந்த (30.09.2026) அன்று காலை 8 மணி அளவில் அந்தப் பகுதியில் உள்ள அரசு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் (RO Plant) ஏற்பட்ட மின்கசிவால் மின்சாரம் தாக்கி உயிரிழந்த துயரச் செய்தியறிந்து வேதனையுற்றேன்.

உயிருக்கும் மேலாக நேசித்து வளர்த்த இரண்டு பிஞ்சு குழந்தைகளையும் பறிகொடுத்து விட்டு ஆற்றமுடியாத பெருந்துயரத்தில் வாடும் பெற்றோருக்கும் குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

இந்த விபத்துக்கு காரணமான, அந்த RO Plant-க்கு அரசு மின் இணைப்பு இல்லாமல் திருட்டுத்தனமாக மின்சாரம் எடுத்த ஊராட்சி செயலர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கடந்த 8 ஆண்டு காலமாக மின்சாரத் திருட்டை ஆதரித்த மின்வாரிய அலுவலர் மீதும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

முதல்வர் விஜய்

குறிப்பாக, செயல்படாமல் இருந்த RO Plant -ல் கடந்த 6 மாதங்களுக்கு முன்பே ஏற்பட்டுள்ள மின்கசிவைச் சரிசெய்யக்கோரி அந்த கிராம இளைஞர்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் கொடுத்துள்ளனர். அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த இரண்டு பச்சிளம் குழந்தைகளின் உயிர் பறிபோய் இருக்காது. புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாகச் செயற்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரும், தொடர்புடைய மின்வாரிய ஊழியர்களுமே இந்த இரண்டு பிஞ்சுகளின் உயிரிழப்புக்கு முதன்மை காரணமானவர்கள்.

இதனால் தமிழக அரசு உயிரிழந்த குழந்தைகளுக்கு ரூபாய் 25 லட்சம் வீதம் 2 குழந்தைகளுக்கும் சேர்த்து ரூபாய் 50 லட்சத்தைத் துயர் துடைப்பு நிதியாக வழங்க வேண்டும் எனவும், புகார் அளித்தும் கவனக்குறைவாகச் செயற்பட்ட அரசு அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய துயர் துடைப்பு உதவிகளைச் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

"எங்கள் மீது வழக்குகளைத் தொடருங்கள், அதற்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம்"- சிஜேபி நிறுவனர் அபிஜித்

தேர்தல் ஆணையம் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையான சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பிலான சர்ச்சை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், வாக்காள... மேலும் பார்க்க

``தோல்வி பயத்தின் காரணமாகவே வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்கின்றனர்" - மாணிக்கம் தாகூர் விமர்சனம்

சுதந்திர போராட்டத் தியாகி கொடிகாத்த குமரன் மற்றும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாருடன் களம் கண்ட சுப்பிரமணிய சிவா ஆகியோரின் பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை சத்தியமூர்த்... மேலும் பார்க்க

``ஸ்டாலின் பேசியதை சர்ச்சையாக்க வேண்டிய அவசியம் இல்லை" - எம்.பி கார்த்தி சிதம்பரம்

சிவகங்கையில் உள்ள காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்தி சிதம்பரம், ``தமிழக முதல்வர் வி... மேலும் பார்க்க

ஊட்டி: "பஸ் ஃப்ரீ-தான் ஆனா; பஸ் ஸ்டாண்டு டாய்லெட்டுக்கு 10 ரூபாய்" - குமுறும் பெண்கள்

சுற்றுலா மையமாக விளங்கி வரும் நீலகிரி மாவட்டத்தில் போதிய அளவில் பொதுக்கழிப்பறைகள் இல்லை என்பது மிகப்பெரிய குறையாக இருக்கிறது. ஊட்டி, குன்னூர் போன்ற நகரங்களில் நகராட்சி மற்றும் போக்குவரத்துக் கழகம் மூல... மேலும் பார்க்க

கல்வி உதவித்தொகை வழங்குவதாக மாணவர்களிடம் சைபர் மோசடி - வேலூரில் இவ்வளவு புகார்களா?

வேலூர் மாவட்டத்தில், பள்ளி - கல்லூரி மாணவா்கள் மற்றும் அவா்களின் பெற்றோர்களைக் குறி வைத்து அடையாளம் தெரியாத மர்ம நபா்கள் செல்போன் மூலம் தொடா்பு கொண்டு ``அரசு சாா்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது... மேலும் பார்க்க

`தெருக்கோடியில் இருக்கிறது கட்சி!’ - அதிமுகவில் அடுத்த விக்கெட்; தவெகவுக்குத் தாவிய முன்னாள் எம்எல்ஏ

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2011, 2016 தேர்தல்களில் அ.தி.மு.க சார்பில் வெற்றிபெற்று எம்.எல்.ஏவாக இருந்த முருகுமாறன், அக்கட்சியின் அமைப்புச் செயலாளராகவும் இருந்தவர்... மேலும் பார்க்க