Week end-ல் மொபைல் போன் அடிமைத்தனத்திலிருந்து விடுபட என்ன செய்யலாம்?
மின் கட்டணத்துக்கு முடிவு... ரூ.25,000 முன்பணத்தில் 25 ஆண்டுகளுக்கு இலவச மின்சாரம்... எப்படி?
வேலை இன்மை, வருமானம் குறைவு போன்ற சவால்கள் நிறைந்த இன்றைய சூழலில் மக்களின் ஒவ்வொரு ரூபாயும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வருமானம் இல்லாவிட்டாலும் சில செலவுகளை நம்மால் தவிர்க்கவே முடியாது. அவற்றில் ஒன்றுதான் மின் கட்டணம். நம்மில் பெரும்பாலானோருக்கு சில ஆயிரங்களில் இருந்து பல ஆயிரங்கள் வரையிலும் மின் கட்டணம் வருகிறது. இத்தகைய மின் கட்டணம் பலருடைய நிதிநிலைக்குப் பெரும் சுமையாக மாறுவதும் உண்டு. காரணம், எலெக்ட்ரிசிட்டி பில் வந்துவிட்டால் கட்ட வேண்டிய தேதியில் கட்ட வேண்டும். நமக்கு என்ன முக்கியமான செலவுகள் இருந்தாலும், மின் கட்டணம் செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும்.
நம்முடைய மின்சார பயன்பாடு வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும் என்பதும், மின் கட்டணங்கள் உயரும் என்பதும் கூடுதல் கவலையைக் குடும்பங்களில் ஏற்படுத்துகிறது. இதிலிருந்து தப்பிக்க நாம் மின்சார நுகர்வோராக மட்டுமல்லாமல், மின்சார உற்பத்தியாளராக மாற வேண்டியது அவசியத்தில் இருக்கிறோம்.

இதற்கு நமக்கு உதவக்கூடியதாக காற்றாலை மற்றும் சூரிய சக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் முறைகள் உள்ளன. இதில் சூரிய சக்தி மூலமான மின்சார உற்பத்தி ஒவ்வொரு குடும்பத்துக்கும் வரப்பிரசாதம். சொந்த வீடும், மொட்டை மாடியும் இருந்தால் போதும் குறைந்த செலவில் 25 ஆண்டுகளுக்கு இலவச மின்சாரம் பெற முடியும்.
உதாரணத்திற்கு, ஒரு வீட்டுக்குக் குறைந்தபட்சமாக 3kW சோலார் கட்டமைப்பை நிறுவுவதற்கு சுமார் ரூ.2,10,000 செலவாகும். இதிலும், மத்திய அரசு ரூ.78,000 வரை மானியமாக வழங்குகிறது. இதனால் நாம் செய்யும் நிகர செலவு ரூ.1,32,000 மட்டுமே. இந்த 3kW அமைப்பு ஒரு நாளுக்கு சுமார் 12 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யும். மாதத்திற்கு சுமார் 360 யூனிட்கள் கிடைக்கும். இப்படி நமக்கான மின்சாரத்தை நாமே தயாரித்துக்கொள்ளலாம்.
சோலார் மூலம் எப்படி மின்சாரம் தயாரிக்கலாம்? இதில் உண்மையிலேயே பலன் இருக்கிறதா? அரசு மானியம் பெறுவது எப்படி? போன்ற பல விஷயங்களை உங்களுடன் நேரடியாகப் பேச இருக்கிறோம்.

சேலத்தில் வரும் மார்ச் 7-ம் தேதி சனிக்கிழமை நாணயம் விகடன், டார்லிங் சோலார் இணைந்து சோலார் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த உள்ளது. இந்த நிகழ்வில் கலந்துகொள்ள அனுமதி இலவசம்.
பதிவு செய்ய: https://bit.ly/solarawarenessmeet
நிகழ்ச்சி விவரங்கள்:
Date: மார்ச் 7, 2026
Time: மாலை 6.00 - 8.00
இன்றைய முதலீடு, வாழ்நாளுக்குமான சேமிப்பு'
சோலார் அமைப்பது எப்படி? அரசு மானியம் பெறுவது எப்படி? அனைத்தும் தெளிவாக...
முகவரி: GRAND ESTANCIA Address: 349/3 Bangalore, Bypass Rd, Narasothipatti, Salem, Tamil Nadu 636004
பதிவு செய்ய: https://bit.ly/solarawarenessmeet

நம்முடைய சொந்த வீட்டில் சோலார் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதன் மூலம் நம்முடைய மின் கட்டண செலவை குறைத்து, நாட்டின் பசுமை புரட்சியிலும் பங்கெடுக்கலாம். பதிவு செய்ய: https://bit.ly/solarawarenessmeet




















