செய்திகள் :

`முதல்வர் தொகுதியில் பிரசாரம் செய்யக் கூடாதா? அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் ஆதரவா?' - தவெக கேள்வி

post image

கொளத்தூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து அந்தக் கட்சியின் இணைப் பொதுச் செயலாளர் CTR. நிர்மல் குமார் பதிவிட்டுள்ளார்.

"தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் தேர்தல் பிரசாரத்திற்கு மைக் மற்றும் பாக்ஸ் ஸ்பீக்கர்களை பயன்படுத்தத் தடை விதிப்பதா?

முதலமைச்சரின் தொகுதி என்றால் மற்றக் கட்சியினர் பிரசாரம் செய்யக் கூடாதா?

திமுக தலைவர் ரோட் ஷோ நடத்தலாம், ஆனால் தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மைக்குடன் பிரசாரம் செய்ய அனுமதி மறுப்பதா?

அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதை தேர்தல் ஆணையம் ஆதரிக்கிறதா?

பிரசாரத்தில் விஜய்
பிரசாரத்தில் விஜய்

கழகத் தலைவரின் பிரசாரத்திற்கு முறையாக அனுமதி பெற்றும், இன்று மதியம், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள் அங்கு சென்றடையும் வரைக்கும், மாலை முதலமைச்சர் வருகிறார் என்று காரணம் கூறி பிரசார இடத்தில் இரும்பாலான தடுப்புகள் கொண்டு (Barricades) பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய அனுமதிக்கவில்லை.

தேர்தல் ஆணையத்திடம் முறையாக அனுமதி பெற்று நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தால், முதலமைச்சர் வருகிறார் என்று கூறி பிரசாரத்திற்கு தடை விதிப்பது கண்டனத்திற்குரியது.

திமுகவின் கைப்பாவையாக அதிகாரிகள் செயல்படுகிறார்கள்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது, அதிகாரிகள் பாரபட்சமாக நடந்துகொள்வது ஏன்?

ஒருதலைபட்சமாக செயல்படும் அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முறையாக அனுமதி பெற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் கொளத்தூர் தொகுதி பிரசாரத்திற்கு, கடுமையாகப் போராடி, அதிகாரிகளிடம் பலகட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்திய பிறகே மைக், ஸ்பீக்கர் பாக்ஸ் உள்ளிட்டவைகளை பயன்படுத்த அனுமதி பெறுவதுதான் முறையா?

ஒருதலைபட்சமாக செயல்படும் அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்".

Vijay: `ஆனந்துக்கு ரூ.3 கோடி கடன்; தாய், தந்தைக்கு.!' - வேட்புமனுவில் விஜய் கொடுத்த கடன் விவரங்கள்

பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் இன்று வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் வேட்புமனுவில் குறிப்பிட்டிருக்கும் விஜய்யின் சொத்து மதிப்பு விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி விஜய்... மேலும் பார்க்க

Vijay: 'BMW உள்ளிட்ட 5 கார்கள், 1 TVS XL ' - வெளியான விஜய்யின் வாகனங்களின் லிஸ்ட்!

பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் வேட்புமனுவில் குறிப்பிட்டிருக்கும் விஜய்யின் சொத்து மதிப்பு விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி விஜய்யின் அ... மேலும் பார்க்க

`2016 தேர்தலில் நடந்ததுதான் இப்போதும்...' - தலைமையின் முடிவால் புலம்பும் பாபநாசம் உடன்பிறப்புகள்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்றத தொகுதிகளில் ஒன்று பாபநாசம். கடந்த 2001ம் ஆண்டு தேர்தலில் திமுக இங்கு நேரடியாக போட்டியிட்டது. அதன் பிறகு கூட்டணிக் கட்சிகளுக்குத்தான் திமுக தலைமை இங்கு வாய்ப... மேலும் பார்க்க

Tvk Vijay: 'அசையும் சொத்து 404 கோடி; அசையா சொத்து.!'- வெளியான விஜய்யின் வேட்புமனு விவரம்

பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் வேட்புமனுவில் குறிப்பிட்டிருக்கும் விஜய்யின் சொத்து மதிப்பு விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி விஜய்யின் அ... மேலும் பார்க்க

'கொளத்தூருக்குள் செல்லவே முடியவில்லை; வில்லிவாக்கத்தில் பிரசாரம் கேன்சல்!' - என்ன சொல்கிறது தவெக?

தவெக தலைவர் விஜய் இன்று சென்னையில் மூன்று இடங்களில் பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதன்படி பெரம்பூர், கொளத்தூரில் பிரசாரம் செய்த விஜய், வில்லிவாக்கத்தில் பிரசாரம் செய்ய முடியாமல் கூட்டத்தை... மேலும் பார்க்க

கொளத்தூர்: "அக்கா, அம்மா, உங்களை கேட்கிறேன்; பெண்கள்..!"- ஸ்டாலின் தொகுதியில் விஜய் பரப்புரை

வேட்புமனு தாக்கல் செய்த பிறகு தவெக தலைவர் விஜய் தனது தொகுதியான பெரம்பூரில் தேர்தல் பிரச்சாரத்தை நடத்தினார். இதனைத்தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் விஜய் பிரச்சாரம் செய்தார். பிரச்சார... மேலும் பார்க்க