செய்திகள் :

முதல்வர் விஜய் உட்பட 14 முதல்வர்கள் மீது தீவிர குற்றவியல் வழக்குகள்; அதிர்ச்சித் தகவல்

post image

இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில் 14 மாநிலங்களின் முதலமைச்சர்கள் மீது தீவிரமான குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் மற்றும் நீதிமன்ற உதவியாளருமான விஜய் ஹன்சாரியா அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

அவர் தாக்கல் செய்திருக்கும் 96 பக்க அறிக்கையின்படி, 89 வழக்குகளுடன் தெலங்கானா முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டி முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தடுத்த இடங்களில், மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி மீது 29 வழக்குகள், கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் மற்றும் ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு ஆகியோர் மீது தலா 19 வழக்குகள், கேரள முதல்வர் வி.டி. சதீசன் மீது 18 வழக்குகள் உள்ளன.

ரேவந்த் ரெட்டி
ரேவந்த் ரெட்டி

மேலும், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மீது 5, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் ஆகியோர் மீது தலா 4 வழக்குகள் உள்ளன.

தமிழ்நாட்டின் முதல்வர் சி. ஜோசப் விஜய், பீகார் முதல்வர் சாம்ராட் சவுத்ரி ஆகியோர் மீதும் தலா 2 வழக்குகள் நிலுவையில் உள்ளன. சிக்கிம், பஞ்சாப், ஒடிசா மற்றும் ராஜஸ்தான் மாநில முதல்வர்கள் மீது தலா ஒரு வழக்கு வீதம் நிலுவையில் உள்ளது.

மாநில அளவிலான சட்டமன்ற உறுப்பினர்களைப் பொறுத்தவரை, தீவிரமான குற்றவியல் வழக்குகளைக் கொண்ட எம்.எல்.ஏ-க்கள் பட்டியலில் முதலிடத்தில் மேற்கு வங்கம் இருக்கிறது. அதிகபட்சமாக மேற்கு வங்க 58 சதவிகித எம்.எல்.ஏ-க்கள் மீது வழக்குகள் உள்ளன.

இதைத் தொடர்ந்து கேரளா (57%), ஆந்திரப் பிரதேசம் (56%), தெலங்கானா (49%), ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசா (தலா 45%), பீகார் (42%), மற்றும் மகாராஷ்டிரா (40%) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரா (Andhra) சந்திரபாபு - பவன்
ஆந்திரா (Andhra) சந்திரபாபு - பவன்

மக்களவையின் மொத்தம் 543 எம்பி-க்களில் 170 பேர் (31%) மீது தீவிர குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. குறிப்பாக தெலங்கானா, கேரளா, பீகார் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கணிசமான எம்பி-க்கள் மீது வழக்குகள் உள்ளன.

அதேபோல், மாநிலங்களவையில் உள்ள 233 உறுப்பினர்களில் 75 பேர் (33%) மீது குற்றவியல் வழக்குகள் உள்ள நிலையில், அவற்றில் 40 பேரின் (18%) வழக்குகள் 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடிய மிகத் தீவிரமான வழக்குகள் ஆகும்.

ஜூலை 2026 நிலவரப்படி, நாடு முழுவதும் பதவியில் உள்ள மற்றும் முன்னாள் எம்பி-க்கள்/எம்எல்ஏ-க்கள் மீது மொத்தம் 4,192 குற்றவியல் வழக்குகள் விசாரணையில் நிலுவையில் உள்ளன. இதில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் மட்டும் 1,171 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

எனவே, மக்கள் பிரதிநிதிகள் மீதான இந்த வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்க பிரத்யேக சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்றும், உயர் நீதிமன்றங்கள் இதன் முன்னேற்றத்தைத் தீவிரமாகக் கண்காணிக்க உத்தரவிட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

'பெரம்பூரில் ரூ.300 கோடியில் மருத்துவமனை; பால் கொள்முதல் விலை உயர்வு!' - முதல்வரின் அறிவிப்புகள்

சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் கொடுத்த அறிவிப்புகள்CM Vijayதொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.38 லிருந்து ரூ.41 ரூபாயாக கொள்முதல் விலை உயர்வு. வ... மேலும் பார்க்க

`அம்பேத்கர் பெயரில் நல்ல நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட திட்டம்; ஆனால்.!'- அரசுக்கு பா.ரஞ்சித் கோரிக்கை

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின் கீழ் மலேசியா தேசிய பல்கலைக்கழகத்தில் படிக்கச் சென்ற பாரதிதாசன் என்ற மாணவர், கல்வி உதவித்தொகை கிடைக்காமல் தாம் மிகவும் சிரமப்படுவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டி... மேலும் பார்க்க

TN Assembly: "அனைத்து எம்எல்ஏ-க்களுக்கும் கார் மற்றும் மாதந்தோறும் ரூ.75,000 வழங்கப்படும்.! - முதல்வர் விஜய் | Live

"அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம் வழங்கப்படும்" - முதல்வர் விஜய்தமிழக சட்டப்பேரவையில் இன்று நிதிநிலை அறிக்கை, நீர்வளம், ஊரக வளர்ச்சி, சுற்றுலாத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வ... மேலும் பார்க்க

``சிபிஐ, சிபிஎம் கட்சிகள் தடை செய்யப்பட்டவையா?" - கேள்வி எழுப்பும் அன்புமணி

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாட்சியர் அய்யாசாமி, VAO-க்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், ``திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வருவாய் கிராமங்க... மேலும் பார்க்க

கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொலை: "தமிழக அரசு அதிகாரப்பூர்வ கண்டனம்கூட தெரிவிக்கவில்லை" - உதயநிதி

கர்​நாடக மாநிலம், சாம்​ராஜநகர் மாவட்​டத்​தில் உள்ள ஹனூர் அரு​கில், காவிரி வனவிலங்கு சரணால​யத்​துக்கு உட்​பட்டு ஷாக்யா வனப்​பகுதி உள்​ளது. அந்த வனப்பகுதிக்குள் தொலைந்த மாடுகளைத் தேடிச் சென்ற 4 தமிழர்கள... மேலும் பார்க்க