செய்திகள் :

`முதல்வர் வேட்பாளராக என்னை நிறுத்த முடிவு செய்தார்களா?' - திமுக, அதிமுக கூட்டணி குறித்து திருமா

post image

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக - அதிமுக கூட்டணி அமைக்கும்பட்சத்தில் கே. பழனிசாமி முதலில் முதல்வர் வேட்பாளர் எனக் கூறிவந்த நிலையில், பிறகு விசிக தலைவர் திருமாவளவனை முதல்வராக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் திமுக அதிமுக கூட்டணி பேசப்பட்டதா? முதல்வர் வேட்பாளராக திருமாவை நிறுத்த முடிவு செய்தார்களா? என்பது குறித்து தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளித்திருந்த திருமாவளவன், " என்னை முதல்வராக்கவும் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், அதில் எனக்கு உடன்பாடில்லை.

திருமாவளவன் - ஸ்டாலின்
திருமாவளவன் - ஸ்டாலின்

தவெகவுக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் கொடுத்தபின், செய்தியாளர் சந்திப்புக்கு புறப்பட்டபோது கூட, ஒரு தரப்பை சேர்ந்த நபர் தம்மை தொடர்பு கொண்டு, ஆதரவு கடிதம் கொடுத்திருந்தாலும் செய்தியாளர்களை சந்திக்க வேண்டாம் என்றும், தம்மை முதல்வராக அறிவிக்கப்போவதாகவும் கூறினார்.

ஆனால், அவரிடம் வேண்டாம் என நான் கூறி விட்டேன்” என்று தெரிவித்திருந்தார். தற்போது சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவிடம் இதுதொடர்பாகக் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், " திமுக - அதிமுக கூட்டணி பேசுவதாக கிசுகிசுக்களாக வெளியான தகவல்கள் அடிப்படையிலேயே கருத்து கூறினேன். இரு தரப்பிலும் என்னிடம் யாரும் அதிகாரப்பூர்வமாக பேசவில்லை. குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதற்காக மட்டுமே தவெக ஆட்சிக்கு ஆதரவு தந்தோம்.

திருமாவளவன்
திருமாவளவன்

2 இடங்களை வைத்துக்கொண்டு நாங்கள் யாரிடமும் பேரம் பேசவில்லை. வருங்காலத்தில் அதிமுக, தவெகவுக்கு ஆதரவு அளித்தால், எங்களுடைய ஆதரவைத் தொடர்வது குறித்து நிர்வாகிகளிடம் பேசி முடிவெடுப்போம்" என்று தெரிவித்திருக்கிறார்.

'இந்தியாவில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லையா?' - நெதர்லாந்து பிரதமருக்கு இந்தியா தக்க பதில்

இந்திய பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே, இத்தாலி என ஐந்து நாடுகள் பயணத்தை மே 15 முதல் மே 20 வரை மேற்கொண்டிருக்கிறார். மோடி நெதர்லாந்து செல்வதற்கு முன்பு, அவரது பயணம் குறி... மேலும் பார்க்க

`இந்திய ரூபாய்-ன் வீழ்ச்சியை அரசு கண்டும் காணாமலும் இருப்பது இதனால்தான்' - நிபுணர் சொல்வதென்ன?

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்துகொண்டே வருகிறது. தற்போது சந்தையில் ஒரு டாலருக்கு ரூ.96-ஐ தாண்டி வர்த்தகம் ஆகிறது. இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதால், வ... மேலும் பார்க்க

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை மூடல் - நிம்மதியடைந்த பொதுமக்கள்!

தமிழக அரசு, கல்வி நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் உள்ள மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது. இதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட உள்ளன.அவற்றுள் மிகவும் கவனம் ப... மேலும் பார்க்க

`மு.க.ஸ்டாலினுக்கு நன்றி சொல்லி வெளியேறியிருக்கலாம்!’ - திமுக - காங்கிரஸ் முறிவு குறித்து நாராயணசாமி

``தோல்விக்கு பொறுப்பேற்கிறேன்...!’புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நேற்று 17-ம் தேதி தன்னுடைய இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``சட்டமன்றத் தேர்தலில் மக்கள் கொடுத்திருக்கும்... மேலும் பார்க்க

`தவெக ஆட்சிக்கு வந்தபின்பும் அதே நிலை தான் நீடிக்கிறதோ?' - சட்டம் ஒழுங்கு குறித்து டிடிவி தினகரன்

தமிழ்நாட்டில் புதிய ஆட்சியாக தமிழக வெற்றிக் கழகம் பொறுப்பேற்றிருக்கிறது. முதல்வராக சி.ஜோசப் விஜய் தலைமையிலான நிர்வாகம் நடந்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு தொடர்வதாக அ... மேலும் பார்க்க

“ஆரவாரத்தால் அதிர போகும் சேப்பாக்கம்.!” - தோனியின் `Last' என்ட்ரியை காண வரும் முதல்வர் விஜய்?

சேப்பாகத்தில் இன்று நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் - ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது சேப்பாக்கம் மைதானமே கூடுதல் உற்சாகமாக இருக்கப்போகிறது.இந்தியாவில் நடந்துவரும் ஐ.பி.எல் தொடர் கிரிக்க... மேலும் பார்க்க