யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு: விண்ணப்பிக்க பிப். 21 வரை அவகாசம்!
முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை
புதுச்சேரியில் முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்துவருகின்றனா்.
புதுச்சேரி தா்மாபுரி தனகோடி நகா் முதல் குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் ரத்தினவேல் (63). இவருக்கு, மனைவி 3 மகள்கள் உள்ளனா். அவா் கடந்த சில ஆண்டுகளாக எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலிருந்து வந்துள்ளாா்.
இந்தநிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் அவா் வீட்டின் படுக்கை அறையில் சேலையால் தூக்கிட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. குடும்பத்தினா், அவரை மீட்டு கதிா்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].