செய்திகள் :

மும்பையில் நள்ளிரவு டி.வி பார்ப்பதில் தகராறு: மனைவி, மகள், பேத்தியை கத்தியால் குத்திய முதியவர் கைது

post image

மும்பை தானேயில் உள்ள ரபோடி கிராந்தி நகரில் வசிப்பவர் முகமது தாரிக் கான்(64). இவர் தனது மனைவி மற்றும் மகள், பேத்தியுடன் வசித்து வந்தார். சம்பத்தன்று முகமது தாரிக் கான்  பேத்திக்கு பிறந்தநாள் ஆகும். இதனால் நள்ளிரவு வரை கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார்கள். பிறந்தநாள் முடிந்த பிறகு முகமது தாரிக் கான் உறங்க முடிவு செய்தார். 

ஆனால் வீட்டில் இருந்த மனைவி, மகள் மற்றும் பேத்தி ஆகியோர் டிவி பார்க்க முடிவு செய்தனர். இதற்கு முகமது தாரிக் கான் எதிர்ப்பு தெரிவித்து, தான் உறங்கப்போவதாகவும், டிவி பார்க்ககூடாது என்று கூறி தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் சமையல் அறைக்கு சென்று அங்கு இருந்த கத்துயை எடுத்து வந்து தனது மனைவியை முகமது தாரிக் கான் குத்தினார். இதை அவர்களின் 39 வயது மகள் தடுக்க முயன்றார். இதில் அவருக்கும் கையில் காயம் ஏற்பட்டது. இவர்களின் சண்டையில் சிக்கிக்கொண்ட முகமது தாரிக் கான் பேத்திக்கும் காயம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் போட்ட சத்தத்தில் பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடி வந்தனர். 

அவர்கள் வந்து முகமது தாரிக் கானை மடக்கி அவரிடம் இருந்த கத்தியை பிடுங்கி அவரை போலீஸில் ஒப்படைத்தனர். காயம் அடைந்த மூன்று பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். முகமது தாரிக் கான் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மகளிர் விடுதிக்குள் நுழைந்து மாணவியை வன்கொடுமை செய்த மளிகைக்கடைக்காரர் - ஒடிசாவில் அதிர்ச்சி

ஒடிசா மாநிலம் புபனேஷ்வரில் உள்ள கங்காபாடா என்ற இடத்தில் மளிகைக்கடை வைத்திருப்பவர் தீபக் பிரதான்(67). இவரது கடைக்கு அருகில் மகளிர் விடுதி ஒன்று இருக்கிறது. அடிக்கடி அவரது கடை வழியாக பெண்கள் மற்றும் மாண... மேலும் பார்க்க

'பஸ் எல்.இ.டியில் என்ன எழுதியிருக்கிறது?' - MTC பஸ் தகராறில் முதியவரை கொன்ற போதையில் இருந்த இளைஞன்

'பஸ் எல்.இ.டியில் என்ன எழுதியிருக்கிறது' என்று கேட்டு தகராறு ஆகி, சென்னையில் ஒரு கொலை நடந்துள்ளது.சென்னை தாம்பரம் பஸ் ஸ்டாண்டில் 25 வயதான இளைஞர் அமர்நாத் 70-G மாநகர பஸ்ஸில் ஏறியுள்ளார். அதே பஸ்ஸில் 74... மேலும் பார்க்க

உத்தரப் பிரதேசம்: பிறந்தநாள் பார்ட்டியில் கேக்கை முகத்தில் தடவியதால் துப்பாக்கிச்சூடு; 3 பேர் பலி

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் என்ற இடத்தில் அங்குள்ள ஜிம் ஒன்றில் பிறந்தநாள் பார்ட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்தப் பார்ட்டிக்கு நண்பர்கள், உறவினர்கள் மற்றும் ஜிம்மிற்கு அடிக்க... மேலும் பார்க்க

தேனி: பட்டாசு ஆலையில் வெடி விபத்து; இரு இளைஞர்கள் உயிரிழப்பு; தொடரும் விபத்துகள்

தேனி மாவட்டம் கம்பம் அடுத்துள்ள காட்டுப்பள்ளி வாசல் தெருவில் திருப்பதி என்பவருக்குச் சொந்தமான லட்சுமி பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் அய்யப்பன், நாகர்ஜுன், சூர்யா, தினேஷ் (எ) தீனா... மேலும் பார்க்க

திருவள்ளூர்: ஏசி வாங்கிக் கொடுக்காததால் மனைவி எடுத்த விபரீத முடிவு? கணவரிடம் விசாரணை; என்ன நடந்தது?

திருவள்ளூரை அடுத்த பூண்டி ஜெயராம் தெருவைச் சேர்ந்தவர் ஆகாஷ் (26). திருவள்ளூர் மாவட்டம், புல்லரம்பாக்கத்தைச் சேர்ந்தவர் மோனிகா (25). இவர்கள் இருவரும் பூண்டியில் உள்ள ஒரு பள்ளியில் படித்தனர். அப்போது இர... மேலும் பார்க்க

5 சிறுமிகளுக்குப் பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு 5 மரண தண்டனை; சிவகங்கையை அதிர வைத்த போக்சோ வழக்கு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த விறகு வெட்டும் தொழிலாளர் சந்திரன் (49). இவருக்குத் திருமணமாகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். ஒரு சாதாரண குடும்பஸ்தனாக வலம் வந்த இ... மேலும் பார்க்க