செய்திகள் :

மும்பை: "எனது வீடு லட்சக்கணக்கான ரசிகர்களால் ஆசீர்வதிக்கப்பட்டது" - நடிகர் அமிதாப் பச்சன் பெருமிதம்

post image

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மும்பை ஜுகு பகுதியில் உள்ள ஜல்சா என்ற பங்களாவில் வசித்து வருகிறார். இந்தப் பங்களா அமிதாப் பச்சனுக்கு மிகவும் உணர்வுப்பூர்வமாகத் தொடர்புடையது. அமிதாப் பச்சனைப் பார்க்க ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் ஜல்சா பங்களாவிற்கு வருவது வழக்கம்.

அவர்கள் வீட்டிற்கு வெளியில் பல மணி நேரம் காத்திருந்து அமிதாப் பச்சனைப் பார்த்துவிட்டுச் செல்வது வழக்கம். அமிதாப் பச்சனும் ரசிகர்களை ஏமாற்றாமல் ஒவ்வொரு வாரமும் ரசிகர்களைப் பார்ப்பது வழக்கம்.

இது பல ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. மிகவும் அபூர்வமாகவே அமிதாப் பச்சன் ரசிகர்களைச் சந்திக்காமல் இருப்பார்.

அமிதாப் பச்சன் வீடு
அமிதாப் பச்சன் வீடு

தான் வசிக்கும் ஜல்சா வீடு குறித்தும், ரசிகர்களைச் சந்திப்பது குறித்தும் அமிதாப் பச்சன் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''நாங்கள் வசிக்கும் ஜல்சா வீடு அன்பின் அடையாளம் ஆகும்.

ஒவ்வொரு வாரமும் வரும் என் ரசிகர்கள் எனது குடும்பத்தின் ஒரு பகுதியாகும். அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்கள் பிஸியான வாழ்க்கையிலிருந்து எனக்காக ஒதுக்கும் அந்தச் சில நிமிடங்களும், நீங்கள் காட்டும் அன்பும் ஆசீர்வாதங்களும் எனக்கு ஒரு கடவுள் வருகை போன்ற உணர்வைத் தருகின்றன. மக்கள் தங்கள் வேலைகளுக்கு இடையே நேரத்தை ஒதுக்கி தன்னை வந்து சந்திப்பதை ஒரு ஆசீர்வாதமாக கருதுகிறேன்" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

"'ஜல்சா' வெறும் வீடு மட்டுமல்ல, அது லட்சக்கணக்கான மக்களின் ஆசியைப் பெற்ற ஒரு தலம். 30 ஆண்டுகளுக்கும் மேலாக எங்களது குடும்பத்திற்கு நிழல் தரும் மரம். எனது பிள்ளைகள் பிறந்தபோதும், அவர்களின் திருமணத்தின் போதும் இந்த இல்லம் அவர்களை ஆசீர்வதித்துள்ளது.

பிள்ளைகள் இங்கே வளர்ந்தார்கள். இப்போது அவர்களின் பிள்ளைகளும் (பேரன், பேத்திகள்) இங்கே வளர்ந்து வருகிறார்கள். எனது குடும்பத்தின் மூன்று தலைமுறைகளைச் சுமந்து நிற்கும் அந்த வீட்டை ஒரு கட்டிடமாகப் பார்க்காமல், மக்களின் அன்பால் நிறைந்த ஒரு புனித இடமாகக் கருதுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

"பாலிவுட்டில் நான் ஒதுக்​கப்​படு​வதுபோல் உணர்ந்​தேன்; அதனால் தான்..!"- பிரியங்கா சோப்ரா

ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வரும் பிரியங்கா சோப்ரா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தியாவில், ‘வாரணாசி’ படத்தில் நடித்து வருகிறார். எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கும் இந்தப் படத்தில் மகேஷ்பாபு ஹீரோவாக நடிக்க... மேலும் பார்க்க

``'கிங்' பட்டம் எனக்கு அதிகாரம் அல்ல; பொறுப்பு" - ஷாருக்கான்

பாலிவுட்டில் நடிகர் ஷாருக்கான் `கிங்' கான் என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார். தற்போது ஷாருக்கான் தனக்கு வழங்கப்பட்டுள்ள கிங் பெயரில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தில் ஷாருக்கான் மகள் சுஹா... மேலும் பார்க்க

நடிகர் சல்மான் கான் தந்தை சலீம் கானுக்கு மூளையில் ரத்த கசிவு: மும்பை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை!

நடிகர் சல்மான் கான் தந்தையும், பாலிவுட் திரைக்கதை எழுத்தாளருமான சலீம் கான் நேற்று காலை திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு, மும்பை லீலாவதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல்நிலையை சோதித்த டாக்ட... மேலும் பார்க்க

Taapsee Pannu: `மோடி தான் பிடித்த அரசியல் தலைவர்; ஏனென்றால்...' - வைரலாகும் டாப்ஸி பண்ணுவின் வீடியோ

பாலிவுட் நடிகை டாப்ஸி நடிப்பில், அனுபவ் சின்கா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'அஸி' (Assi). பிப்ரவரி 20-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அதற்கான விளம்பரப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் தொல... மேலும் பார்க்க

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு ரூ. 30 கோடியில் ஹெலிகாப்டர்; சுகேஷ் வழங்கிய காதலர் தினப் பரிசு!

டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் சிறையில் இருக்கும் அவரது தொழிலதிபரான அவரது கணவரை வெளியில் கொண்டு வர உதவுவதாகக் கூறி ரூ.200 கோடி வாங்கி மோசடி செய்த வழக்கு, இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமிஷனிட... மேலும் பார்க்க

Akshay Kumar: "நான் அவரை அறைந்த பிறகு என் கரியரே முடிந்துவிட்டது என நினைத்தேன்" - அக்‌ஷய் குமார்

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் கடைசியாக 'ஜாலி எல்.எல்.பி 3' படத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து அவருடைய அடுத்த திரைப்படமான 'பூத் பங்களா' திரைப்படமும் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. Akshay Kumarதற... மேலும் பார்க்க