செய்திகள் :

`மும்பை கடற்கரையோரம் 7 மாடி சொகுசு கட்டடம்' - ரூ.711 கோடிக்கு வாங்கிய `ஏஞ்சல் ஒன்' நிறுவன தலைவர்!

post image

மும்பை ஜுகு, பாந்த்ரா, கோரேகாவ், அந்தேரி பகுதியில் ஆடம்பர குடியிருப்பு கட்டிடங்கள் அதிக அளவில் கட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே தொழிலதிபர்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் பல நூறு கோடி செலவில் அடுக்கு மாடி குடியிருப்புக்களில் வீடுகளை வாங்கி இருக்கின்றனர். அந்த வகையில் `ஏஞ்சல் ஒன்' நிறுவனத்தின் தலைவர் தினேஷ் தக்கர் என்பவர் மும்பை ஜுகு பகுதியில் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றை விலைக்கு வாங்கி இருக்கிறார்.

எம்பசி டெவலப்மெண்ட் என்ற நிறுவனம் 2 ஏக்கர் பரப்பில் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புக்களை கட்டி வருகிறது.

மொத்தம் 5 அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இதில் ஒரு மாடியில் ஒருவர் என்ற விகிதத்தில் வெறும் 50 குடும்பங்கள் மட்டுமே வசிக்கின்றன. இதில் வீடு வாங்கிய ஒவ்வொருவரும் கோடீஸ்வரர்கள் ஆவர். எனவேதான் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாடியை வாங்கி இருக்கின்றனர்.

புதிதாக இந்நிறுவனம் கட்டி வரும் 7 மாடி கொண்ட கட்டிடத்தை ஏஞ்சல் ஒன் நிறுவனத்தின் நிறுவனர் தினேஷ் தக்கர் விலைக்கு வாங்கி இருக்கிறார். தரை தளத்தை சேர்த்து ஏழு மாடிகளைக் கொண்ட இந்த கட்டிடம் 63,000 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது.

தக்கர் இந்த குடியிருப்புக்கு "ஏஞ்சலஸ்" என்று பெயரிட்டு அதை தனது குடும்ப வீடாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளார். ரூ.711 கோடிக்கு இதனை தக்கர் வாங்கி இருக்கிறார். இது இந்தியாவில் நடந்துள்ள மிகப்பெரிய சொத்து பரிவர்த்தனைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இது குறித்து தக்கர் கூறுகையில், "ஜூஹூ எப்போதுமே மும்பையில் ஒரு சிறப்புத் தன்மையைக் கொண்டுள்ளது. நான் ஒரு புதிய வீட்டைத் தேடத் தொடங்கியபோது, தனியுரிமை, விசாலமான தன்மை, கடல் காட்சிகள் மற்றும் எங்கள் குடும்ப வீடாக மாறும் ஒரு ஆடம்பரமான, சின்னமான சரணாலயத்தை தேடுவதில் எனது கவனம் இருந்தது." என்று தெரிவித்தார்.

மும்பையின் குடியிருப்பு ரியல் எஸ்டேட் சந்தையில் 18 மாதங்களுக்கு முன்பு எம்பசி டெவலப்மென்ட்ஸ் நிறுவனம் நுழைந்தது. மும்பை முழுவதும் உள்ள திட்டங்களில் ரூ.4,500 கோடி முதலீடு செய்வதற்கான திட்டத்தை ஜனவரி மாதம் நிறுவனம் அறிவித்தது. இது குறித்து எம்பசி டெவலப்மெண்ட்ஸ் நிறுவனர் ஜிதேந்திர விர்வானி கூறுகையில்,'' எம்பசி டெராஸாவில் உள்ள ஒரு முழு கட்டிடத்தையும் தக்கர் வாங்கி இருப்பது மும்பையில் எம்பசி பிராண்ட் பெற்றுள்ள நம்பிக்கையின் வலுவான அங்கீகாரமாகும்" என்று கூறினார்.

2021 ஆம் ஆண்டில், டிமார்ட் நிறுவனர் ராதாகிஷன் தமானி, தெற்கு மும்பையில் உள்ள நாராயண் தபோல்கர் சாலையில் ஒரு பங்களா சொத்தை 1,001 கோடி ரூபாய்க்கு வாங்கினார். மது கஞ்ச் என்று அழைக்கப்படும் அந்த பங்களா மலபார் ஹில் பகுதியில் 60,000 சதுர அடிக்கு மேல் கட்டப்பட்ட பரப்பளவில் 1.5 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளது.

மேலும் 2023 ஆம் ஆண்டில், ஒர்லியில் ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் 23 சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளை தமானியின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் நெருங்கிய கூட்டாளிகளால் சுமார் 1,200 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டன. இதே போன்று பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிகர் ஷாருக்கான் வீட்டிற்கு அருகில் கட்டப்பட்டு வரும் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடத்தில் 4 மாடிகளை சேர்த்து வாங்கி இருக்கிறார் என்பது குறிஒப்பிடத்தக்கது.

`வேலை எல்லாம் போகல.!' - உயர் சம்பளத்தை விட்டு கனடாவிலிருந்து இந்தியா திரும்ப பெண் சொன்ன காரணம்!

விசா பிரச்னையால் அமெரிக்காவில் இருந்து அதிகமான இந்தியர்கள் வேலையை விட்டுவிட்டு நாடு திரும்பிக்கொண்டிருக்கின்றனர். அமெரிக்கா மட்டுமல்லாது கனடாவை சேர்ந்த இந்தியர்களும் இதே போன்று இந்தியாவிற்கு வந்து கொண... மேலும் பார்க்க

`Views அதிகமாகணும்!’ - 9 வயது சிறுவன் செய்த Click… அப்பாவின் ₹1.13 கோடி காலி!

YouTube-ல் வீடியோ போட்டால் views வரணும், subscribers அதிகமாகணும் என்பதுதான் பல Content Creators-ன் ஆசை. ஆனால், அதற்காக ஒரு 9 வயது சிறுவன் செய்த காரியம் தற்போது இணையத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது!அமெ... மேலும் பார்க்க

"ஏன் வேறு வேலை இல்லையா என்று கேட்கிறார்கள்" - லாரி டிரைவராகப் பணியாற்றும் 25 வயது விமானப் பணிப்பெண்

இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண் தான் விமான பணிப்பெண் வேலைக்குப் படித்து விட்டு லாரி ஓட்டிக்கொண்டிருக்கிறார். இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதான நேஹா தாக்கூருக்கு, சிறுவயதிலிருந்தே லாரி அவ... மேலும் பார்க்க

அவதூறு ரீல்ஸ்; செருப்புடன் மன்னிப்பு கேட்கவைத்த ராஜ் தாக்கரே கட்சியினர் - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி

மகாராஷ்டிராவில் நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே மற்றும் அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான சுபம் குறித்து புனேயை சேர்ந்த சோசியல் மீடியா பிரபலம் மகேஷ் மோடே சோசியல் மீடியாவில் அவதூறாக செய்தி வெளியிட்ட... மேலும் பார்க்க

ஹாலிவுட் வரை பிரபலம்... 108 ஆண்டு பழமையான ஒலிம்பியா காபி ஹவுஸ் லைசென்ஸ் சஸ்பெண்ட்! - ரெய்டில் ஷாக்

மகாராஷ்டிராவில் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை கமிஷனராக ஐ.ஏ.எஸ். அதிகாரி துகாராம் முண்டே பதவியேற்ற பிறகு சுகாதாரமற்ற முறையில் இயங்கும் உணவகங்களுக்கு எதிராக தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருகிறார்... மேலும் பார்க்க

'ஷாருக், அஜய் தேவ்கன்; உங்களுக்கு நட்சத்திரங்களாக இருக்கலாம்; ஆனால் சட்டத்தை மீறியவர்கள்' - துகாராம்

மகாராஷ்டிராவில் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை கமிஷனராக இருப்பவர் துகாராம் முண்டே. இவர் மாநிலம் முழுவதும் உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு எதிராக எடுத்து வரும் நடவடிக்கைகள் காரணமாக பல உணவகங்... மேலும் பார்க்க