செய்திகள் :

மும்பை தேர்தல்: `தாக்கரே சகோதரர்கள் வென்று விடுவார்கள்' - பாஜக-விடம் அதிக இடங்களை கேட்கும் ஷிண்டே

post image

மும்பை மாநகராட்சிக்கு வரும் ஜனவரி 15ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 3 ஆண்டுகளுக்கு பிறகு இத்தேர்தல் நடைபெறுகிறது. அதுவும் சிவசேனா உடைந்த பிறகு சந்திக்கும் முதல் தேர்தலாக இருப்பதால் மும்பையில் உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகியோரில் யாருக்கு செல்வாக்கு இருக்கிறது என்பதை நிரூபிக்கும் சோதனைக் களமாக இத்தேர்தல் அமைந்திருக்கிறது. ஏக்நாத் ஷிண்டே தங்களிடமிருந்து பா.ஜ.க துணையோடு சிவசேனாவின் வில் அம்பு சின்னத்தை திருடிக்கொண்டதாக தொடர்ந்து உத்தவ் தாக்கரே குற்றம் சாட்டி வருகிறார்.

மும்பை மாநகராட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்றே தொடங்கிவிட்டது. ஆனால் ஆளும் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சி கூட்டணியில் இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை. எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இன்று உத்தவ் தாக்கரேயும், ராஜ் தாக்கரேயும் வார்டு பங்கீடு தொடர்பாக அறிவிப்பு வெளியிடுகின்றனர்.

தாக்கரே சகோதரர்கள்

அவர்கள் இருவர் இடையே ஒரு மித்த கருத்து எட்டப்பட்டுவிட்டது. கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை சேர்க்க கடைசி வரை உத்தவ் தாக்கரே மேற்கொண்ட முயற்சி பலனலிக்கவில்லை.

இதையடுத்து தாக்கரே சகோதரர்கள் மட்டும் தேர்தலில் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளனர். இதில் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியையும் சேர்த்துக்கொள்ள திட்டமிட்டுள்ளனர். உத்தவ் தாக்கரேயின் சிவசேனா 145 முதல் 150 வார்டுகளில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா 65 முதல் 70 வார்டுகளில் போட்டியிடும் என்று தெரிகிறது.

அதேசமயம் பா.ஜ.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஏக்நாத் ஷிண்டே தங்களது கட்சிக்கு மொத்தமுள்ள 227 வார்டுகளில் 105 முதல் 113 வார்கள் கொடுக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்துக்கொண்டிருக்கிறார். ஆனால் 60 முதல் 70 வார்டுகள் கொடுக்க தயாராக இருப்பதாக பா.ஜ.க தெரிவித்து இருக்கிறது. தங்களிடம் 2017ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 60 கவுன்சிலர்கள் இருப்பதை சுட்டிக்காட்டி அவர்கள் அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை அவரது இல்லத்தில் ஏக்நாத் ஷிண்டே சந்தித்து இரண்டு மணி நேரம் இது குறித்து பேசினார். இப்பேச்சுவார்த்தையில் கடந்த தேர்தலில் மராத்தியர்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதியில் மராத்தி பேசக்கூடிய 79 கவுன்சிலர்கள் சிவசேனாவில் இருந்து வெற்றி பெற்றதாகவும், அதில் தற்போது தங்களுடன் 54 பேர் இருப்பதாகவும் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று ஷிண்டே தெரிவித்துள்ளார்.

2024ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் சிவசேனா(ஷிண்டே) 20 சதவீத வாக்குகள் பெற்றதாகவும், பா.ஜ.க 32.5 சதவீத வாக்குகள் பெற்றதாகவும், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா 23 சதவீத வாக்குகள் பெற்றதாகவும், ராஜ் தாக்கரேயின் நவநிர்மாண் சேனா 8.5 சதவீத வாக்குகள் பெற்றதாகவும், தாக்கரே சகோதரர்கள் இணைந்திருப்பதால் அவர்களது வாக்கு 32 சதவீதமாக அதிகரித்துவிடும் என்றும் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். மராத்தியவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் தங்களது கட்சிக்கு போதிய பிரதிநிதித்துவம் கொடுக்கவில்லையெனில் அது பா.ஜ.க கூட்டணிக்கு பாதிப்பாக அமையும் என்று ஏக்நாத் ஷிண்டே எச்சரிக்கையாக கூறி இருக்கிறார்.

மேலும் இஸ்லாமிய வாக்குகள் உத்தவ் தாக்கரே கட்சிக்கு செல்லும்பட்சத்தில் பா.ஜ.கவை விட தாக்கரே சகோதரர்கள் கூடுதல் வாக்குகளை பெற வாய்ப்பு இருப்பதாகவும் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். இதே பிரச்னை தொடர்பாக ஏக்நாத் ஷிண்டேயை பா.ஜ.க தலைவர்கள் அவரது இல்லத்தில் சந்தித்து அதிகாலை 4 மணி வரை பேச்சுவார்த்தை நடத்தினர். மும்பை மெட்ரோபாலிடன் பகுதியில் இருக்கும் மாநகராட்சிகளில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்பதை உறுதி செய்தன.

அடுத்த இரண்டு நாட்களில் இரு கட்சிகளும் எத்தனை வார்டுகளில் போட்டியிடுவது என்பதை முடிவும் செய்வது என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. உள்ளூர் நிர்வாகிகள் மட்டத்தில் இரண்டு நாள் பேசி எத்தனை தொகுதி என்பதை முடிவு செய்யவும் முடிவு செய்யப்பட்டது. இறுதியாக கிடைத்த தகவலின் படி மும்பையில் 90 வார்டுகள் வரை சிவசேனா(ஷிண்டே)விற்கு கொடுக்க பா.ஜ.க முன் வந்துள்ளது. ஆனால் மேலும் 20 வார்டுகள் வேண்டும் என்று ஷிண்டே கேட்டுக்கொண்டிருக்கிறாராம்.

OPS : தனிக்கட்சி; விஜய்யுடன் கூட்டணி! - ரூட்டை மாற்றுகிறாரா ஓ.பன்னீர்செல்வம்?

'எடப்பாடி பழனிசாமி என்கிற பெயரை சொல்லவே அவமானமாக இருக்கிறது. பழனிசாமி இருக்கும் வரை அதிமுகவில் இணையப் போவதில்லை' என தொண்டர் உரிமை மீட்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் வெடித்திருக்கிறார் ஓ.பி.எஸ். தம... மேலும் பார்க்க

`தாக்கரே குடும்பத்தால் மட்டுமே முடியும்!'-மாநகராட்சி தேர்தலில் கூட்டணியை அறிவித்த தாக்கரே சகோதரர்கள்

மும்பை மாநகராட்சித் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவும், ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவும் ஏற்கெனவே முடிவு செய்துள்ளன. இதற்காக இரு கட்சிகள... மேலும் பார்க்க

”எல்லோரும் விஜய் பின்னால் செல்கிறீர்களே.!” - சர்ச் திருப்பலியில் பாதிரியார் பேச்சால் சர்ச்சை

தூத்துக்குடி மாவட்டம், வீரபாண்டியன்பட்டினத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ சர்ச்சில், நேற்று சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அதில், நெல்லை செயிண்ட் சேவியர்ஸ் கல்லூரியின் முதல்வரும், பாதிரியாருமான காட்வின் ரூபஸ் ... மேலும் பார்க்க

சகோதரிக்கு வழிவிடுவாரா ராகுல்? `பிரியங்கா காந்தி பிரதமராவது தவிர்க்க முடியாதது' என்கிறார் வதேரா

பிரதமர் நரேந்திர மோடிக்கு நிகராக அரசியல் செய்யக்கூடிய தலைவர் காங்கிரஸ் கட்சியில் இல்லை என்ற விமர்சனம் இருந்து வருகிறது. ராகுல் காந்தியால் நரேந்திர மோடியை சமாளிக்க முடியவில்லை என்று காங்கிரஸ் தலைவர்களே... மேலும் பார்க்க

போலி மருந்து விவகாரம்: பாஜக ஆதரவு முன்னாள் ஐ.எஃப்.எஸ் அதிகாரியை தூக்கிய புதுச்சேரி போலீஸ்

இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான `சன் ஃபார்மா’, தங்களுடைய மருந்துகள் போலியாக உற்பத்தி செய்யப்படுகின்றன என்று புதுச்சேரி சி.பி.சி.ஐ.டியில் புகாரளித்தது. அதனடிப்படையில் புதுச்சேரி மேட்டுப... மேலும் பார்க்க

புதுச்சேரி: `போலி மருந்துக் கும்பலிடம் சபாநாயகர் லஞ்சம் வாங்கியிருக்கிறார்!’ – நாராயணசாமி பகீர்

`தீபாவளி பரிசு வழங்க ரூ.42 லட்சம்...’புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, ``புதுச்சேரியில் போலி மருந்து தயாரித்து விற்பனை செய்தது தொடர்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் நாங்... மேலும் பார்க்க